தேவனுடைய முத்திரை The Seal of God 54-05-14 ?... அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வழக்கமாகக் கொண்டிருந்த பழங்காலத்து நாகரீகத்தை உடையவர் களாயிருக்கிறோம், அதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். இந்த கூடுதலான பாடலையும், எல்லா பாடலையும், இந்த விசேஷித்த காரியங்களையும் நான் பாராட்டுகிறேன். "நான் பாதையின் கடைசி மைல் தூரம் சென்றிருக்கும்போது, நாளின் முடிவிலே இளைப்பாறுவேன்.” அங்கேதான், ஒருவேளை, இங்கே உட்கார்ந்துகொண்டு, அவர்கள் அதைப் பாடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் வெளியே நோக்கிப் பார்த்து, சூரியன் அஸ்தமிக்கிறதைக் கண்டேன்; பறவைகள் யாவும் மெதுவாகவும், மிருதுவாகவும் பாடின, இப்பொழுது எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அவைகள் இளைப்பாற உள்ளே சென்று, நாளை காலை ஒரு புதிய நாளுக்காக எழும்பும். அந்தவிதமாகவே அது ஜீவியத்தோடு உள்ளது; கிரியை செய்து கொண்டிருக்கிற நாட்கள் சீக்கிரத்தில் முடிவடைய, நாங்கள் எங்களுடைய படுக்கையில் படுத்துக்கொள்வோம். நான் அந்த நாளிலே அவரிடத்தில் பேச விரும்புகிறேன், அவரிடத்தில் பேசி, என்னுடைய வஸ்திரங்களை என்னை சுற்றிக் கொண்டு, இந்த அறைக்குள் பிரவேசித்து, பரிசுத்த பவுல் பண்டைய காலத்தில் கூறினது போல, "அவருடைய உயிர்த் தெழுதலின் வல்லமையினால் நான் அவரை அறிந்திருக் கிறேன்," அவர் மரித்தோர் மத்தியிலிருந்து அழைக்கும்போது, நான் அவர்களோடு வெளியே அழைக்கப்படுவேன். "அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்திருக்கிறோம்.” அவரை வார்த்தையினாலோ அல்லது செயலினாலோ அறிந்து கொள்ளாமல், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிந்துகொள்ளுதல். அதுவே இன்றிரவு நம்முடைய நம்முடைய மகத்தான நம்பிக்கைகளில் ஒன்று, நாம் பெற்றுள்ள ஒரே நம்பிக்கை, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மகத்தான உயிர்த்தெழுதலில்......... இயேசு கிறிஸ்து மூலமாய் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதன் மூலம் நாம் இப்பொழுது மரணத்திலிருந்து ஜீவனுக்குட்பட்ட நம்முடைய பூர்வாங்க உயிர்த்தெழுதலைப் பெற்றுள்ளோம். 4 காத்திருத்தல், மகிமையான காத்திருத்தல், எல்லா இயற்கையிலும், அவர் பரலோகத்திலிருந்து இரண்டாம் முறை வரும்வரை, தேவன் அவர்களை உரிய காலத்தில் அனுப்புவார். அதன்பின்னர் நாம் இப்பொழுது தவிக்கிற இந்த அழிவுள்ள சரீரங்கள் அழியாமையைத் தரித்துக்கொள்ளும், “நாம் மறுரூபமடைந்து, அவருடைய சொந்த மகிமையான சரீரத்திற்கு ஒப்பாயிருப்போம், ஏனென்றால் அவர் இருக்கிற வண்ண மாகவே அவரைக் காண்போம்.” அப்பொழுது இந்த இருண்ட உலகத்தின் பாவமும், துக்கமும், பாவமும் மரணமும் ஓய்ந்துபோம், இந்த மகிமையான இயேசுவோடு கூடிய ஆயிரம் வருட சமாதான அரசாட்சியில். 5. பறவைகள் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மரங்கள் அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இயற்கை யாவும் சாய்ந்து, அழுது, அந்த நேரத்துக்காக காத்துக்கொண்டு, புதுப்பிக்கப்படுவதற்காக தவிக்கின்றன. 6. என்னுடைய குட்டிப் பெண், சற்று முன்னர், ஒரு கேள்வியை என்னிடம் கேட்டாள். அவள், “அப்பா, தேவன் அதைச் செய்தபோது, இந்தப் பூமி எப்படியிருந்தது?” என்று கேட்டாள். 7. நான், “தேனே, அது அழகாக இருந்தது. அது அழகாக இருந்தது” என்றேன். மேலும் நான், “என்றோ ஒரு நாள் சாபம் எடுக்கப்படும்போது, அது மறுபடியும் அந்தவிதமாகவே இருக்கும். அப்பொழுது நாம்...அது ஆதியில் இருந்ததுபோல, தேவனுடைய ஒரு மகத்தான பரதீசாயிருக்கும்” என்று கூறினேன். 8. இப்பொழுது, நேராக வேலைக்குச் செல்லுவோம். நான் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருந்தேன், முதல் இரவு...இது நம்முடைய சிறிய எழுப்புதலின் மூன்றாவது இரவு. நமக்கு ஒரு சுகமளிக்கும் கூட்டம் இருக்கவில்லை. அது நம்முடைய உணர்வுகளை சற்று தளர்வுறச் செய்து, அப்படியே பண்டைய நாகரீகமான முறையில் சுவிசேஷத்தை போதிக்க; அநேக, அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கே போதித்த அதே சுவிசேஷம் சிறிதளவும் மாறவில்லை. அது உண்மை, அதே சுவிசேஷம் சற்று புதுப்பித்தல் அல்லது மெருகேற்றுதல் அல்ல; அதே சுவிசேஷம். 9. ஆராதனைகளுக்கு வெளியே, ஸ்தாபன பாகுபாடற்ற அரங்கங்களை அடிப்படையாகக் கொண்டும், பல்வேறுபட்ட ஸ்தாபனங்களின் ஜனங்கள் ஒன்று கூடுவதின் அடிப்படை யிலும், நீங்கள் உங்களை உபதேசத்திலிருந்து விலக்கிக் கொள்கிறீர்கள்; தெய்வீக சுகமளித்தலையும், கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளுதலையும் தவிர, நிச்சயமாகவே. ஆனால் நீங்கள் உங்களுடைய வீட்டில் இருக்கும்போது, இங்குள்ள வீட்டு சபையைப் போன்றே, நீங்கள் உங்களுடைய கழுத்துப்பட்டியை கழற்றிவிடுவது போன்ற உணர்வை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் எது சரியென்று கருதுகிறீர்களோ அதை அப்படியே பிரசங்கிக்க வேண்டும், அவ்வளவுதான். 10. அநேக சமயங்களில், இங்கே, நாம், அநேக சமயங்களில், ஜனங்கள் இணங்குகிறதில்லை. நம்முடைய சபை உபதேசங்களிலும், நாம் பெற்றுள்ள காரியங்களிலும் நம்மோடு ஒவ்வொருவரும் இணங்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் உங்கள் போதகர் பிரசங்கித்ததைப் போலவே நாங்களும் இருக்கலாம், ஆனால் அவர் இன்னும் என் சகோதரராகவே இருப்பார். அதை அலட்சியம் செய்யாதீர்கள். ஒவ்வொருவரும் காரியங்களை வித்தியாசமான பார்வையில் பார்க்கின்றனர். 11. இந்த வாரத்தில், பனிப்புயலின் காரணமாக கனடாவில் இருந்த ஒரு வார பயணத்தை நான் ரத்து செய்ய வேண்டியதாயிருந்தது, ஏன், ஒரு சில இரவுகள் எழுப்புதலுக்காக, இங்கே கூடாரத்திற்கு வரும்படியான சிலாக்கியத்தை அது எனக்கு அளிக்கிறது, நான் புறப்பட்டுச் சென்றபோது உறுதியளித்திருந்தேன். நான் அதை அளிக்கிறேன், அதாவது அங்கே..."ஒரு சுகமளிக்கும் ஆராதனை அல்ல; சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காகவே" என்றேன். அப்படியே... இதன் பேரில், ஏழு சபைக் காலங்களின் பேரில் ஒரு சில இரவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு சற்று முன்னர் உள்ள, கடைசி சபையின் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். 12. நான் எப்பொழுதும் என்னையே மதிப்பிட முயற்சிக்கிறேன், இங்குள்ள சிறிய சபையில், நான் எங்கோ பேசிக் கொண்டிருந்தேன், ஏனென்றால் பரலோகத்தின் நல்ல கர்த்தர் எனக்கு ஒரு சிறு ஊழியத்தை அளித்திருக்கிறார், நீங்கள் புரிந்து கொள்ளும்படி, இயற்கைக்கு மேம்பட்ட பட்சத்தில் உள்ளது. ஜனங்கள் உம்முடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள், எனவே நான் என்ன அறிக்கைகளைக் கூறுகிறேன் என்பதில் நான்—நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், பரிசுத்த ஆவியானவர் சந்தேகத்திற்கு இடமில்லாத இந்த தரிசனத்தையும், பகுத்தறியும் வல்லமையையும் அருளியிருப்பாரானால், நீங்கள் பேசுவதை அவர்கள் கேட்டு, நீங்கள் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்த ஏதோ ஒரு கருத்து உங்களுக்கு இருப்பதை அவர்கள் உணருகிறார்கள், இல்லை யென்றால் தேவன் ஒரு பிழையை ஒருபோதும் ஆசீர்வதித்து, அதை அந்தவிதமாக அனுப்பமாட்டார். பார்த்தீர்களா? ஆகையால் நீங்கள் மிகுந்த கவனமாயிருக்க வேண்டும், எல்லா நேரத்திலும் அதை வார்த்தையின் வெளிச்சத்தில் மதிப்பிட வேண்டும். அதில், நான் ஒரு தவறு செய்திருந்தால், தேவன் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. நான்... 13. எந்த நேரத்திலும், உபதேசத்தில், விசேஷமாக நாம் இப்பொழுது இந்த ஆழமான பாடப்பொருளில், நேற்றிரவில் மிருகத்தின் முத்திரை மற்றும் அதைப் போன்ற பாடங்களிலும், இன்றிரவு தேவனுடைய முத்திரை, தேவனுடைய அடையாளம், அதைப் போன்றவற்றிலும் இருக்கிறோம், நான் போதிக்கக் கூடியவற்றோடு, அநேகர் இணங்காமல் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் அதை செய்ய முயற்சிக் கிறேன்...அதை எந்த சபைக்கும், எந்த ஸ்தாபனத்திற்கும் அல்லது எந்த நபர்களிடத்திற்கும் வழிநடத்தவில்லை. தேவன் அதை அறிந்திருக்கிறார். அந்த ஒளியில் நான் அதை காண்கிறேன், அந்த விதமாகவே நான் அதை பேசுகிறேன். 14. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உள்ள எந்த சபையையும் நான் நேசிக்கிறேன். அதாவது அவருடைய நாமத்தை தொழுது கொள்ளக் கூடிய ஒரு நபருக்காக, அல்லது அவருக்காக மரியாதை கொண்டுள்ள எவருக்காவது, நான் என்னுடைய மரணம் வரைக்கும் சென்று அவர்களுக்காக எதையும் செய்ய விரும்புகிறேன். அது உண்மை. அவர்கள் எந்த மதத்தின் முத்திரையை அணிந்திருந்தாலும், அது மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கராக இருந்தாலும் சரி, அது என்னவாயிருந்தாலும், அவர்கள் என்னுடைய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் வரையில், அதைக் குறித்து எனக்கு ஒரு துளி கூட கவலையில்லை, அது உண்மை. 15. ஆனால், இப்பொழுது, ஒரு திட்ட வரைபடம் உள்ளது. இப்பொழுது ஒவ்வொரு சபையும், ஒரு வேளை, அந்த சபையைக் குறித்த அவர்களுடைய வேத சாஸ்திரம் என்ன வென்பதை, அது ஒரு திட்ட வரைபடத்தின் அடிப்படை யிலானது என்று நம்புகின்றனர். பாருங்கள், இப்பொழுது, அநேக சமயங்களில், அந்தக் காரியங்களைக் காணும்போது, அது நான் திட்ட வரைபடத்தை வாசிக்கும் முறையில் இல்லை, ஆகையால் என்னுடைய சொந்த சபையில் நான் சரியென்று கருதுவதைக் குறித்து வைக்க எனக்கு ஒரு உரிமை உண்டு. 16. இங்கே சில காலத்திற்கு முன்னர், ஒரு ஒப்பந்தக்காரர்.... நான் மில்டவுனில், மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் இருந்தேன், அங்கு எங்களுக்கு ஒரு எழுப்புதல் இருந்தது. சகோதரன் ரைட் மற்றும் நீங்கள் யாவரும், மரியான் லீயை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். (சகோதரன் ஜார்ஜ் ரைட், “ஆமென்” என்கிறார்.-ஆசி.) தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்து நான் போதித்த ஒரு காரியத்தைக் குறித்து அவர் மிகவும் வருத்தமடைந்திருந்தார். பாருங்கள், அவர் வீட்டிற்குச் சென்றார், அவர் அதைக் குறித்து வருத்தமடைந்தார். அவர் ஒரு ஒப்பந்தக் காரராயிருந்தார். 17. அன்றிரவு அவர் ஒரு சொப்பனம் கண்டார். அவர் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறதை கர்த்தர் அவருக்குக் காண்பித்தார், அவர் அதற்கு ஒரு வெளிப்புற ஜன்னலை வைக்க வேண்டியவனாயிருந்தார். எனவே அதன் மேல் ஒரு வெளிப்புற ஜன்னலை அமைப்பதற்கு பதிலாக, அவர் ஒரு தாழ்வாரத்தை மாத்திரம் அமைத்து, "அது சரியாயிருக்கும்" என்றார். எனவே வீட்டின் உரிமையாளர் வந்து, “அதை அஸ்திபாரத்தோடு இடித்துப் போடுங்கள்; மீண்டும் தொடங்குங்கள்” என்று கூறினார். 18. எனவே வேதம் போதித்ததிலிருந்து வித்தியாசமான ஏதோ ஒன்றை அவர் கற்பித்தார், எனவே அவர், "நான் அஸ்திபாரத்தை இடித்துப் போட்டுவிட்டு, அதை மீண்டும் கட்டலாம்” என்றார். நான் அன்றிரவு அவரோடு வீட்டிற்குச் சென்று, இரவு முழுவதும் அவருடைய வீட்டில் தங்கியிருந்தேன். ஆகையால் நாங்கள்... 19. அது உண்மை. அது வைக்கப்பட வேண்டும். இந்த பாடங்களை கற்பிப்பதால், நான் ஒரு ஆசிரியரல்ல. ஆனால் அதைக் குறித்து எனக்குத் தெரிந்தவைகளில், நான் அதை மற்றவர்களுக்கு விளக்கிக் கூறவும், வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொள்ளவும் விரும்புகிறேன், பரிசுத்த ஆவியானவர் அதை நம்முடைய இருதயத்திற்கு உண்மையாக்குகிறார். எனவே அதைச் செய்ய நமக்கு ஒரு மகத்தான நேரம் உள்ளது. 20. இங்கே நம்முடைய அருமையான போதகர், சகோதரன் நெவில் ஒருவிதமாக ஓய்வெடுக்கலாம். நம்முடைய வாசல் களில் அந்நியர்கள் இருந்தால்; அந்த மனிதன், இங்கே, நம்முடைய போதகர், சகோதரன் நெவில், ஒரு தேவனுடைய மனிதன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு உண்மையான ஊழியக்காரன். அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதால் நான் அதைக் கூறவில்லை. நான் அதை அவர் இல்லாத போதும் அல்லது எங்கும் கூறுகிறேன், நான் அவரை அறிந்தது முதற்கொண்டே அவர் அந்த விதமாகவே இருந்து வருகிறார். அவர் கண்டிப்பான ஒரு மெத்தோடிஸ்டாக இருந்தார், நான் கண்டிப்பாக ஒரு பாப்டிஸ்டாக இருந்தேன். ஆனால் நாங்கள் ஒன்றாக சகோதரர்களாயிருந்தோம், எனவே நாங்கள் இருவரும் பரிசுத்த உருளைகளாக மாறிவிட்டோம். சரி, அப்படித்தானே, சகோதரனே? ஆமென். (சகோதரன் நெவில், “ஆமென். அல்லேலூயா!” என்கிறார்—ஆசி.) எனவே நாங்கள் நல்ல புரிந்து கொள்ளுதலின் நிலையில் நிற்கிறோம். 21. பாருங்கள், நாம், நாம் இந்தவிதமாக ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாயிருக்கிறோம், "ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளுதல், தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா அநீதியிலிருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது.” எனவே நாம் ஒரு மகத்தான நேரத்தை உடையவர்களாயிருக்கிறோம், இன்றிரவு இங்கே, நம்முடைய வாசல்களில் உள்ள அந்நியர்களை நாம் நிச்சயமாகவே பாராட்டுகிறோம். 22. நம்முடைய சிறிய எழுப்புதல், அது ஏன் விளம்பரப் படுத்தப் படவில்லை என்று நீங்கள் வியப்புறுவீர்கள் என்று நான் யூகிக்கிறேன். பாருங்கள், இங்குள்ள நம்முடைய சபைக்கு இது ஒரு சிறு யூபிலி பண்டிகையாயிருந்தது, அந்தக் காரணத்தினால் நாம் ஒருக்கால்...பரிசுத்த ஆவியானவர் எப்படி வழி நடத்துவார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் கர்த்தருக்கு சித்தமானால், ஒரு இரவு, நாம் இங்கே முடிக்கும் முன்னர், நாம் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தலாம். எனவே அவர் அதை அருளுவார் என்று நான் நம்புகிறேன். 23. எழுப்புதல் கூட்டங்களில் தொடர்ந்து ஈடுபட, நான் இப்பொழுது கனடாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். எல்லோரும் அறிந்துள்ளபடி, நாம் வெளிநாட்டு பயணத்தின் தேதி வரையிலான இடைவெளியற்ற அட்டவணையைப் பெற்றுள்ளோம். தெற்கு, டர்பனில்...தென்னாப்பிரிக்காவில் உள்ள, ஜோகன்னஸ்பர்க்கில், செப்டம்பர் மாதம், ஏறக்குறைய மூன்றாம் தேதி துவங்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன அதன்பின்னர் நாம் அங்கிருந்து டர்பனுக்கும்; இந்தியாவிற்கும்; பாலஸ்தீனாவுக்கும்; மற்றும் லக்ஸன்பர்க்; பிராங்பேர்ட் மற்றும்; டிரான்ஸ்யோர்தான் மற்றும் அங்கே முழுவதுமே செல்கிறோம். கர்த்தர் திரும்பி வரும்படி நம்மை வழி நடத்தும்போது, அவர் நம்மை திரும்பி வரும்படி கூறும்போது, வீட்டிற்கு திரும்பி வருவோம். அதன்பின்னர் அவர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல மற்றொரு பயணத்திட்டத்தை நிர்ணயித்துக் கொண்டிருக் கிறார்கள், அதன் மூலம் கீழே; கிழக்கில், ஜப்பானுக்கும், அங்கே அந்த நாடுகளுக்குமே. 24. இங்கே சுற்றிலும் உள்ள அநேக சபைகளில், ஜனங்கள், ஓ, என்னே, மதம் மாறியவர்கள், ஒருவரோடொருவர், மேலும், எனவே, ஆயிரக்கணக்கான ஜனங்கள் இயேசுவைக் குறித்து முதல் முறையாக கேள்விப்பட்டதேயில்லை என்று நான் உணருகிறேன். எனவே நான் அதை உணருகிறேன்...இது என்னுடைய உணர்வு, தனிப்பட்ட முறையில், அவர்களுக்கு செய்தியை கொண்டு செல்ல வேண்டியது என்னுடைய கடமை, என்னால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில். இப்பொழுது நான்... 25. இப்பொழுது நான் மீண்டும் கூறட்டும், ஏனெனில், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கர், பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே, யாத்திரீக பரிசுத்தர், நாசரேயன், சுற்றி உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்கள், அப்படித்தான் நாம் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்...அந்தவிதமாகத்தான் பரலோகம் இருக்கப் போகிறது என்று நான் நினைக்கிறேன், அங்கே அமர்ந்துள்ள முழு குழுவுமே. 26. இப்பொழுது இந்த மிருகத்தின் முத்திரை போன்ற செய்திகளின் பேரில், இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு குழப்பம் இருக்கும்போது... நேற்றிரவு நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், “ஆமென்” என்று கூறுங்கள். (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.) இப்பொழுது நாம் இன்றிரவு தேவனுடைய அடையாளத்தை, இல்லை தேவனுடைய முத்திரையைக் குறித்து பேசப் போகிறோம். இப்பொழுது நாம் உணருகிறோம்... 27. இப்பொழுது, நான் இரண்டு வேதாகமங்களிலிருந்து பிரசங்கிக்க முயற்சிக்கவில்லை; ஒன்றே மிகுதியாயுள்ளது. ஆனால் சிறிய அடிக்குறிப்புகள் மற்றும் பலவற்றின் நோக்கத் திற்காக நான் அவற்றில் ஒன்றை இங்கே வைத்துள்ளேன், யாராவது ஒரு கேள்வி கேட்டால் நலமாயிருக்கும். இப்பொழுது, நாளை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால், பிரசங்கத்திற்குப் பிறகு.. 28. முதல் இரவு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நாளில், ஏழு சபை காலங்களில், நாம் இருக்கும் நிலைமையை, நாம் இங்கே இருக்கிறோம் என்பதை கண்டோம். 29. நேற்றிரவு, உலகிலேயே மிகப் பெரிய குற்றவாளியின் பேரில், மிருகத்தின் முத்திரையைப் பார்த்தோம். 30. மேலும், இன்றிரவு, உலகத்தில் உள்ள மகத்தான ஆசீர்வாதத்தின் பேரில், தேவனுடைய முத்திரையைப் பார்க்கவுள்ளோம். 31. நாளை இரவு, இப்பொழுது, என்னிடத்தில் கேள்வி கேட்க நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கப் போகிறேன். நாளை இரவு என்பது பிரசங்கிக்கப்பட்டவைகளைக் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள முடியாத கேள்விகள். நீங்கள் போதிய பெருந்தன்மையுள்ளவர்களாகவும், பெண்மணிகளாகவும் இருந்து வருகிறீர்கள், அல்லது போதிய கிறிஸ்தவராக இருந்து வருகிறீர்கள், ஆராதனை நேரத்தில் அமைதியாயிருங்கள் என்று நான் கூறுவேன். நாளை இரவு நீங்கள் சபைக்கு வரும்போது, உங்களால் முடிந்தளவு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துவிடுங்கள் என்று எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் வேதவாக்கி யங்களைக் குறித்த உங்களுடைய கேள்வி என்னவென்பதைக் குறித்தும், அதற்கு பதில் கூறும்படியாக நான் சீக்கிரமாக வந்து அதை வாசிக்க வேண்டியதாயிருக்கிறது. அதன்பின்னர் ஞாயிறு காலை என்பது வழக்கமான ஞாயிறு பள்ளியாகும். 32. ஞாயிறு மாலை, ஒருக்கால் ஞாயிறு மாலை, ஞானஸ்நான ஆராதனையாக இருக்கலாம். சிலர் ஞானஸ்நானம் பண்ணப்படவிருக்கின்றனர். அதன்பின்னர் ஞாயிறு இரவில் நாம் ஒரு சுவிசேஷ செய்தியை நடத்தலாம் அல்லது ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்தலாம். ஞாயிறு இரவிற்காக கர்த்தர் என்னவெல்லாம் வழிநடத்துகிறாரோ, அதைக் குறித்த செய்தியைக் குறித்து நாம் பார்ப்போம். 33 இப்பொழுது நாம் இதை அணுகுவதற்கு முன்பு, “வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும், புஸ்தகத்தை எடுக்கவும், அல்லது அதைத் திறக்கவும், அல்லது அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவானாயிருக் வில்லை என்பதை நாம் கண்டறிகிறோம்.” “ஒருவனும் இல்லையே!” யோவான் அதை வெளிப்படுத்தின விசேஷத்தில் கண்டான். நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்தை போதித்துக்கொண்டிருக்கிறோம். "யோவான் அழுதான். ஆனால் உலகத்தோற்ற முதல், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் இருந்தார்; அவர் வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கி, புஸ்தகத்தைத் திறக்கவும், அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரமானவராாயிருந்தார்.” அந்த ஆட்டுக்குட்டி, உண்மையாகவே, தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவாயிருந்தது. இப்பொழுது அவர் ஒருவரே பாத்திரவானாயிருந்தால்... 34. அவர் இங்கே பூமியில், நம்மோடு ஒரு மனித ரூபத்தில் வாழ்ந்தார். தேவன் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவில் தேவ-மனிதனாக வாழ்ந்தார். 35. அவர் இந்த வார்த்தையை விட்டுவிட்டு, மகிமைக்குள் திரும்பினார், “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்.” பரிசுத்த ஆவியென்னும் நபரின், ரூபத்தில் தேவன், அவர் திரும்பி வந்து...இயேசு, “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்; நான் தேவனிடத்திற்குச் செல்கிறேன்” என்றார். அவர் நித்தியத்தை விட்டு வெளியே வந்து, காலத்திற்குள் அடியெடுத்து வைத்தார்; காலம் கடந்து, நித்தியத்திற்குள்ளாக திரும்பிச் சென்றது. 36. உலகமோ அவரை அறியவில்லை. “அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவரால் உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ... அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.” 37. இப்பொழுது, இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார், “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்." இப்பொழுது அவரைக் காணாத ஒரு உலகமும், நீங்கள் காண்கிற ஒரு உலகமும் இருக்கப் போகிறது. "ஏனென்றால் நான்,” நான் என்பது ஒரு தனிப்பட்ட பிரதிபெயர், “நான் உங்களோடும், உங்களுக் குள்ளும் கூட, உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன். நீங்கள்,” விசுவாசி, “நான் உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பதைக் காண்பீர்கள்.” 38. எபிரெயர் 13:8, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. அவரை அவருடைய வல்லமையில் கவனியுங்கள், அதே கர்த்தராகிய இயேசு, அதே அன்போடு, அதே அற்புதங்கள், அவரைப் பின்தொடர்ந்த அதே அடையாளங்கள், தொடர்ந்து முன்னோக்கிச் சென்றன. அவர் இப்பொழுது பாவத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக, உயிர்த்தெழுந்தவர்களின் சரீரத்தில், காண முடியாத சரீரத்தில் இருக்கிறார். அவர் அவர்களுக்குள் ஜீவிக்கிறார். 39. தேவன் தம்முடைய மகத்தான மகிமையில், தேவன் இறங்கி வந்து, அக்கினி ஸ்தம்பத்திலிருந்து வருகிறார், எந்த மனிதனும் தொட முடியவில்லை, மானிட சரீரத்தின் ரூபத்தில் அவனால் தொட முடிந்தது, ஆனால் அவர் கன்னிகை யினிடத்தில் பிறந்தார். அதன்பின்னர், அங்கே வெளியே, பாவமுள்ள மனிதனை சுத்திகரிக்க, சிலுவையில் அறையப்பட தம்முடைய ஜீவனை அளித்தார், அப்பொழுது அவரால் மனிதர் மத்தியில் வாழ முடிந்தது. தேவன் மனிதன் பேரில் என்னே அன்பைக் கொண்டிருக்கிறார், அதாவது அவர் தம்மை வெளிப்படுத்தினார், அவர் ஜீவிப்பதற்கும், புருஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் மத்தியில் அன்பு கூரத்தக்கதாக ஒரு சுத்திகரிக்கப்பட்ட வழியை உண்டாக்கினார். அது அழகாக இருக்கிறது. ஆம். அதுவே நம்முடைய பிதாவாயிருக்கிறது. 40. நாம் பக்கங்களை திருப்புவதற்கு முன்பு, இப்பொழுது நாம் அவரிடத்தில், புத்தகத்தின் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. 41 எங்களுடைய அன்பான பரலோகப் பிதாவே, நாங்கள் இன்றிரவு உம்மண்டை வருகிறோம், எங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற வழியில், “நீங்கள் என் நாமத்தில் என்னிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.” எனவே எங்களிடம் எந்த நீதியும் இல்லை, நாங்கள் அளிக்கக் கூடிய ஒன்றும் எங்களிடம் இல்லை, நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் மாத்திரமே வருகிறோம், இந்த நாமத்தினூடாக கேட்பதாக நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறோம். 42. இன்றிரவு நாங்கள் இங்கே பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து, நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். தேவனுடைய முத்திரை என்பது அந்த நாளின் மிகவும் தலைசிறந்த பாடப் பொருளில் ஒன்றாகும். பிதாவே, இங்கே கூடியிருக்கிற இந்த சிறு கூட்ட ஜனங்களை நான் அறிந்து, அவர்களை தவறாக வழிநடத்தினால், கர்த்தாவே, அதற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் கணக்கொப்பு விப்பேன். நேற்று மாலை, மிருகத்தின் முத்திரையின் பேரில் பார்த்தோம். ஓ, பிதாவே, நீர் இந்த வார்த்தைகளை வழிகாட்டி, வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அது வெறுமையாக திரும்பாமல், அது புஸ்தகத்தில் எழுதப் பட்ட போது, அது குறிக்கப்பட்டிருந்ததை நிறைவேற்றுவதாக. 43. இப்பொழுது வாரும், பரிசுத்தரே, தேவனுடைய வார்த்தையை வேதாகமத்திலிருந்து எடுத்து, சாவுக்கேதுவான உதடுகளினூடாக, சாவுக்கேதுவான காதுகளினூடாக அதை உரைத்து, பேசும், பேசுகிற கேட்கிற இருவரையுமே விருத்தசேதனம் பண்ணும், இன்றிரவு இந்த ஒன்று கூடுதலின் மூலம் நாங்கள் ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றலாம் என்றும், உலகம் இன்னும் ஒரு வருடம் நிலைத்து நின்றால், பூமியில் இங்கே சிலர் இருக்கமாட்டார்கள் என்றும் அறிந்திருக்கிறோம். 44. இப்பொழுது நாங்கள் திருத்தும் வீட்டில், தேவனுடைய வீட்டில் இருக்கிறோம், அங்கே நாங்கள் திருத்துதலுக்காக நிற்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் என்னைத் திருத்தி, தானியேலுடன் சிங்கங்களின் வாயை நீர் மூடினதுபோல, என் வாயை அடைத்துக்கொள்வாராக. ஒரு வார்த்தையை நான் எதிர்மாறாக அல்லது எனக்குள்ளேயே பேசினால், என் என் இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு வார்த்தையையும் அபிஷேகிப்பாராக. வெறுமை யான ஒரு பாண்டத்தைப் போல நிற்பேனாக; அவர் இன்றிரவு தேவனுடைய வார்த்தையைப் பேசுவாராக, ஏனென்றால் எங்களுடைய பசியுள்ள இருதயங்கள் அவரிடத்திலிருந்து கேட்க ஏங்கிக் கொண்டிருக்கின்றன. வேதாகமத்தை எழுதின, அவர் வந்து, இங்குள்ள உம்முடைய தாழ்மையான ஊழியக்காரர்களுக்கு அதை வியாக்கியானம் பண்ணுவாராக. நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 45. இப்பொழுது தேவனுடைய முத்திரையோடு இன்றிரவு துவங்குவதற்கு ஒரு சிறு பின்னணியைப் பார்ப்போம். 46. நாளை இரவு உங்களுடைய கேள்வியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி நாங்கள் விரும்புகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதை தெளிவாக எழுதி, உங்களால் முடிந்தளவு சீக்கிரமாக மேடையின் மேல் அல்லது பிரசங்க பீடத்தின் மேல் வையுங்கள். இப்பொழுது இந்த மகத்தான பொருளை நேற்றிரவு நாம் பார்த்திருந்தோம்... 47. முதல் இரவு, கடைசிக்கு முன், சபையிலும் சபைக் காலத்திலும், எப்படியாய் இயேசுவானவர் ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் நின்று கொண்டு, வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்து, துவக்கமும் முடிவும், ரூபனும் பென்யமீனுமாகக் காணப்பட்டார். ஏழு குத்துவிளக்குகள் இல்லை ஏழு குத்துவிளக்குகள் நிற்பதையும், அதன் மேல் ஒரு வானவில் இருப்பதையும், அவர் எப்படி பிரசன்னமானார் என்பதையும் பாருங்கள். அவருடைய சத்தம் திரளான தண்ணீர்களின் சத்தமாயிருந்தது, கிறிஸ்துவும் சபையும் ஒன்று சேர்ந்து பேசினது; சபையின் பாகமாகிய மார்பருகே ஒரு பொற்கச்சையைக் கட்டி, சபையின் மேல் கிறிஸ்துவின் நீதியைப் பற்றிக் கொண்டிருக்கிற சுவிசேஷத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறார். வெண்கல அஸ்திபாரத்தின் தெய்வீக நியாயத்தீர்ப்புபோடு நிற்கிறார்; தேவன் தம்முடைய தெய்வீக நியாயத்தீர்ப்பை கிறிஸ்து மீது ஊற்றினார், குற்றமற்ற அவர் குற்றமுள்ளவர்களுக்காக பாடுபட்டார். 48. அதன்பின்னர், எபேசு சபையில் அது எவ்வாறு துவங்கினது என்று பார்த்தோம். அதன்பின்னர் இரண்டாம் சபைக்காலம்; மூன்றாம் சபைக்காலம்; நான்காவது சபைக்காலம், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருண்ட காலங்கள்; லூத்தரன் காலத்தினடாக; பிலதெல்பியா சபைக் காலமும்; கடைசி காலமான, லவோதிக்கேயா சபையின் காலத்திற்குள்ளாகவுமே. 49. பழைய ஏற்பாட்டில், சாலமோனில், ஆதியில் அவை எவ்வாறு பரிபூரண மாதிரியாக்கப்பட்டன என்பதைப் பார்க்கும்போது, ஆகாபின் காலத்தில், இருண்ட காலத்தில் இருந்து வந்துள்ளது. யேசபேல், ஆகாப், ஒரு எல்லைக் கோட்டுப் பிரசங்கி அல்லது உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒரு மனிதன் என்று கண்டறியப்பட்டது. இன்றைக்கு வெதுவெதுப்பான சபை அங்கத்தினர்கள், ஜனங்கள், மற்றும் வெளியேயும்; இன்றைக்கு சபையில், நாளை நீங்கள் அவர்களை எங்கும் எதிர்பார்க்கலாம்; விட்டுக்கொடுத்து விட்டு, உலகத் தோடு சென்று, அதே சமயத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். ஆகாப், அந்த நிலையில் இருந்த போது, மிக பொல்லாதவளாய் இருந்த ஒரு அழகிய சிறிய பெண்மணிக்காக விழுந்து போனான். அவளை விவாகம் செய்து கொண்டு, சரியாக இஸ்ரவேலின் இருண்ட காலத்தில், விக்கிரகாராதனையை இஸ்ரவேலருக்குள்ளே கொண்டு வந்தான், இப்பொழுது, அவர்கள் அங்கிருந்து ஒரு வெண்கல கம்பத்தோடு வெளியே வந்து, தேவன் தம்முடைய வாயிலிருந்து அவர்களை வாந்திப்பண்ணி, புறஜாதிகளை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு முடிவிலே வெதுவெதுப்பாக இருந்தனர். 50. இப்பொழுது அவர்கள் ஆதியிலிருந்து துவங்கினர் என்று நாம் கண்டறிகிறோம், எபேசு சபை, ஆதியில், சபையின் காலத்தில்; அடுத்த சபைக்காலம் குளிர்ந்து வெதுவெதுப்பாகி; இருண்ட காலத்திற்குள் சென்றது. அந்த நாளில், ஆகாப் விக்கிரகாராதனைக்கார யேசபேலை விவாகம் செய்து கொண்டு, இஸ்ரவேலுக்குள் விக்கிரகாராதனையைக் கொண்டு வந்ததைப் போலவே; அதன்பின்னர் பிராடெஸ்டெஸ்டெண்டுகள் ரோமானிய மார்க்கத்தையும், கத்தோலிக்க மார்க்கத்தையும் விவாகம் செய்து கொண்டு, விக்கிரகாராதனையை சபைக்குள் கொண்டு வந்தனர். மார்டின் லூத்தர் மூலமாக வெளியே வந்தனர்; ஜான் வெஸ்லியின் மூலமாகவும்; பெந்தெகொஸ்தேயினுள் நுழைந்து; தேவனுடைய வாயிலிருந்து வாந்திப் பண்ணப்பட்டனர், தேவன் மீண்டும் யூதரிடம் திரும்புகிறார். 51. இப்பொழுது, நான் அறிவேன்...இப்பொழுது, நான் ஒரு மாதிரியியல் நிபுணர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மை. காரணம், நான்—நான் ஒரு காரியத்தை அறிவேன், நான் என்னுடைய நிழலை நோக்கிச் செல்வேனானால், என்னுடைய நிழல் எப்படி இருக்கிறது என்பதை நான் காணும்போது, நான் எப்படியிருக்கிறேன் என்பதைக் குறித்து எனக்கு சில கருத்துகள் உண்டு; நான் நான்கு கால்களைக் கொண்ட மிருகமானாலும், அல்லது சிறகுகளையுடைய பறவையாயிருந்தாலும், அது என்னவாயிருந்தாலும், அது நிழலாயிருக்கும். 52. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாய் இருந்தது. நாம் அதை நேற்றிரவு வெளிப்படுத்தின விசேஷம் 12-ம் அதிகாரத்தில் பார்த்தோம். ஸ்திரீ தன்னுடைய பாதத்தின் கீழ் நியாயப்பிரமாணத்தை உடையவளாய் இருக்கிறாள், அவளுடைய தலையில் சந்திரனும் சூரியனும் இருந்தன. எப்படியாய், அந்தக் காரியங்கள் யாவையையும், எபிரெயர் 11-ம் அதிகாரம் நமக்குச் சொல்கிறது, அவைகள் யாவும் மாதிரிகளாகவும், நிழல்களாகவும் இருந்தன. எபிரெயர் 12-ம் அதிகாரத்தில், “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்று கூறுகிறது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, நாம் அந்தக் காரியங்களைக் கண்டோம். அதன்பின்னர் நேற்று மாலை... 53. நாங்கள் கண்டுபிடிக்க, மீண்டும் இங்கே எடுத்தோம், இல்லை— இல்லை, கடைசிக்கு முந்தைய மாலை. முதலாம் சபையானது, எவ்வாறு துவங்கினது என்பதை, நாம் கண்டறிகிறோம், அது பெந்தெகொஸ்தே நாளில் துவக்த்தில் தொடங்கப்பட்டது, அங்குதான் பரிசுத்த ஆவி விசுவாசிகள் மேல் ஊற்றப்பட்டது. இந்த விசுவாசிகளின் எதிர் விளைவையும், அது அவர்கள் மேல் எப்படி செயல்பட்டது என்றும், அவர்கள் என்ன செய்தனர் என்றும், அவர்களைப் பின்தொடர்ந்த அடையாளங்கள் மற்றும் அற்புதங்களையும் நாம் கண்டோம். 54. அதன்பின்னர் அந்த சபைக் காலத்தின் முடிவில் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளில் அவர்கள், “நிக்கொலாய் மதஸ்தரின் போதகம்” என்றழைக்கப்பட்ட ஒரு மதபேதத்தை தங்களுக்குள் தோன்றச் செய்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம். அதன்பின்னர் அது துவக்கத்தில் “கிரியைகள்” என்று நாம் கண்டறிகிறோம். அடுத்த சபையின் காலத்தில்; அது ஒரு “போதகமாக” மாறியது. அதன்பின்னர் இருண்ட காலத்தில் ஒரு "உபத்திரவப் படுத்துதலாக” மாறியது. 55. அதன்பின்னர் மறுபுறம் புறப்பட்டு வந்து, இங்கே, அது வெளியே வந்த புராட்டஸ்டென்ட் சபைகளில் தோன்றினது என்று கண்டறிந்தோம். 56. அதன்பின்னர் நாம் மறுபடியும் பின்னோக்கிச் சென்று, இங்கு எப்படி வெதுவெதுப்பான நிலை உள்ளது என்பதையும், காலத்தின் முடிவில், இந்தப் பக்கத்தில் எப்படி எல்லாம் குளிர்ந்து போகிறது என்பதையும் கண்டறிகிறோம். அது யூதர்களின் கீழ் செய்தது போல், புறஜாதியினரின் கீழ் நடக்கிறது; அது இந்த வழியாக செல்லும்போது குளிர்ந்துபோய், நிழல் மங்கிக் கொண்டிருக்கிறது. 57. வெஸ்லியின் நாட்களில் இருந்ததைப் போலவே, நேற்றிரவு நாம் அதைக் கொண்டு வந்தோம், லூத்தர். உங்களுக்கு என்ன ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாயிருந்தது, ஆனால் அடுத்த சுற்றில் அது குளிர்ந்து போகத் துவங்கியது. அடுத்த சுற்றில் அது குளிர்ந்து போனது. இப்பொழுது அது ஒரு கூட்ட கோட்பாடுகள் மற்றும் சம்பிரதாயங்கள். அவ்வளவுதான். பார்த்தீர்களா? அந்தவிதமாகவே அது எல்லா வழிகளிலும் இருந்து வருகிறது. ஆகையால் அதன்பின்னர் நாங்கள் அதைப் போதித்திருக்கிறோம். 58. இப்பொழுது, இப்பொழுது முடிக்கையில், கவனி யுங்கள், இதனால் நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். நான் கத்தோலிக்க ஜனங்களை கண்டனம் செய்யவில்லை, ப்ராடெஸ்டெண்டு ஜனங்களையும் நான் கண்டனம் செய்யவில்லை, ஏனென்றால் அவை இரண்டிலிருந்தும், தெரிந்து கொள்ளுதலின் மூலம் தேவனுடைய வித்து வருகிறது. ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அதைக் கண்டு அதில் நடப்பார்கள். காண முடியாதவர்கள், இருளில் நடக்கின்றனர். அது தேவனைப் பொறுத்ததாயுள்ளது. தேவன் அதைச் செய்கிறார். அவர் ஆபிரகாமையும், அவனுடைய சந்ததியையும் இரட்சிப்பதாக ஆணையிட்டு வாக்குத்தத்தம் செய்திருந்தார். இப்பொழுது, நீங்கள் ஆபிரகாமினுடைய சந்ததியாயிருந்தால், நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வீர்கள், அவ்வளவுதான், நீங்கள் வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளிகளாயிருக்கிறீர்கள். இவை யாவுமே கிருபையினாலும், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலினாலும் உண்டானவை. 59 இப்பொழுது இங்கே; இதைக் கவனியுங்கள். நான் சில நேரங்களில்..நான் அதிகமாக பிரசங்கித்திருக்கலாம் இல்லை அதிகமாக போதித்திருக்கலாம். அவ்வாறு செய்து பல வருடங்களாகிவிட்டன. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக இதுவே நான் நடத்திய முதல் போதகர் கூட்டம். மேலும் இது சிறிது பழக்கமில்லாமல் போயிருக்கலாம். எந்த நேரத்திலும் நீங்கள்—நீங்கள்...நீங்கள் விரும்பும் எந்தக் கேள்வியையும் என்னிடம் கேளுங்கள்; அதை மேடையின் மேல் அல்லது பிரசங்க பீடத்தின் மேல் வையுங்கள், நான் அதைப் பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைவேன். 60. இப்பொழுது கவனியுங்கள். ஆனால் அதைக் குறித்து எனக்குத் தெரிந்த யாவும், நான் அதை ஒரு வேதபாட கருத்தரங்கின் மூலம், ஒருபோதும் மனிதனால் கற்றுக் கொள்ளவில்லை. நான் அதைக் குறித்த ஒரு வெளிப்பாட்டை பெறும் வரையில் நான் ஜெபித்தேன், அது தேவனுடைய வார்த்தையோடு ஒப்பிடப்பட வேண்டியதாயிருந்தது. 61. பழைய ஏற்பாட்டில், அவர்கள் ஒரு செய்தியை அறிந்துகொள்ள மூன்று வழிகளை உடையவர்களாயிருந்தனர். அது நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்டதாயிருந்ததைக் கண்டறியும் முதல் வழி; அடுத்த காரியம் ஒரு தீர்க்கதரிசி; அல்லது அடுத்தக் காரியம் ஊரீம் தும்மீம் என்பதாகும். இப்பொழுது ஊரீம் தும்மீம் என்னவாயிருந்தது என்பதை எந்த ஆசிரியரும் அறிவர். அது ஆரோனின் மார்ப்பதக்கத்தின் மேல் பிரகாசித்த ஒரு ஒரு ஒளியாயிருந்தது, அவர்கள் அதை தேவாலயத்தில் தொங்கவிட்டுருந்தனர். இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்து, ஊரீம் தும்மீமின் மேல் வெளிச்சம் பிரகாசிக்கவில்லையென்றால், அது தவறாகும். அது தேவனுடைய ஒரு தெய்வீக பதிலாயிருந்தது, “அது தவறாக இருந்தது." அப்பொழுது அவர்கள்...ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனம் கண்டால், அது ஊரீம் தும்மீமில் பிரகாசிக்கவில்லையென்றால், அது தவறாகும். 62. இப்பொழுது, அந்த அர்த்தத்தில், ஊரீம் தும்மீம் அகற்றப்பட்டுவிட்டது, ஆனால் இது இப்பொழுது தேவனுடைய ஊரீம் தும்மீம், வேதாகமம். ஒரு தீர்க்கதரிசி, அல்லது ஒரு சொப்பனம் காண்பவன், அல்லது அது என்னவாயிருந்தாலும், அல்லது ஒரு போதகனாயிருந்தாலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில் தன்னுடைய கோட்பாட்டை சரியாக ஆதாரமாகக் கொண்டிருக்க வில்லையென்றால், நான் அதை நம்புகிறதில்லை, பாருங்கள். இங்கே ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் சரியாக வர வேண்டும், ஒரே இடத்தில் மாத்திரமல்ல. அது வேதாகமத்தினூடாக வந்து, அதை சரியாக ஒன்றாக இணைக்க வேண்டும். ஆம், ஐயா. அது அதனுடைய மற்ற பாகங்களுடன் ஒத்துப் போக வேண்டும், அது எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டு, அது பாவ விமோசன ஸ்தலம் என்று கூறி, கத்தோலிக்க மார்க்கத்தை வேதாகமத்திலிருந்து எடுத்து பிரசங்கிக்கலாம். ஆனால் அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் முற்றிலும் பொருந்தி, காட்சியைத் தெளிவாக்க வேண்டும். அது உண்மை. 63 பரிசுத்த ஆவியானவர்தான் இந்த காட்சியை உருவாக்குகிறார், நீங்கள் அவரை அதை செய்ய அனுமதிப்பீர்களானால் நலமாயிருக்கும். அவர் உங்களை எல்லா ஒளிக்குள்ளும் வழி நடத்துவார். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. இயேசு அதைச் செய்வதாகக் கூறினார். 64. இப்பொழுது கவனியுங்கள்... மீண்டும், இப்பொழுது அவர்கள் அங்கே என்ன செய்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம். அதன்பின்னர் சிறிது காலம் கழித்து அவர்கள் ஒரு உபதேசத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் உபத்திரவத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் வெளியே சென்றனர். 65. அதன்பின்னர் நாம் கண்டறிவது, இப்பொழுது இந்த நாளில் மனுஷர் ஒரு முத்திரையையும், ஒரு மிருகத்தின் முத்திரையையும் பெற்றுக்கொள்ளும் ஒரு நேரம் உண்டாயிருக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. 66. ஒவ்வொரு முறையும் அந்த தேசத்தில் ஏதோ ஒன்று சிறியதாக பறக்கிறபோது, ஒவ்வொருவரும், "அது மிருகத்தின் முத்திரை” என்றனர். பழைய... நான் பாப்டிஸ்டு சபையில் நியமனம் பெற்றிருந்தபோது, நான் என்.ஆர்.ஏ வைக் குறித்து (தேசிய மீட்பு நிர்வாகம்-ஆசி.] கேள்விப்பட்டேன். பாருங்கள், எல்லோரும், “அது மிருகத்தின் முத்திரை” என்றனர். அதன்பின்னர் ஒவ்வொரு காரியமும், "அது மிருகத்தின் முத்திரை” என்று கூறத் துவங்குகிறது. 67. இப்பொழுது அவர்கள், "இதோ ரஷ்யா வருகிறது, கம்யூனிஸம், அது மிருகத்தின் முத்திரை” என்கிறார்கள். ஆனால், அது ஒரு பொய். அது மிருகத்தின் முத்திரையல்ல. மிருகத்தின் முத்திரை என்னவென்பதை வேதம் கூறுகிறது. மிருகத்தின் முத்திரை என்பது எந்த ஒரு மகத்தான மத விரோதமோ அல்லது அந்த விதமாக எழும்புகிற தேச விரோதமோ அல்ல. கம்யூனிசம் ரஷ்யா அல்ல; கம்யூனிசம் என்பது ஒரு ஆவி. இவை யாவும்...ரஷ்யாவைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 68. நம்முடைய சொந்த அழுகும் தன்மையே நம்மை கொன்று கொண்டிருக்கிறது. கம்யூனிசம் நம்முடைய சபைகளுக்கு மத்தியிலும் மற்ற ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும் அசைவாடிக்கொண்டிருக்கிறது, நீங்கள் அதை அறிவீர்கள், நம்முடைய பள்ளிகளில், நம்முடைய வீடுகளில், எங்கும், நம்முடைய தேசத்தில். முழு காரியமும் புழுவினால் தின்னப்பட்டிருக்கிறது. ஆப்பிளைக் கொத்துகிற ராபின் பறவை அதை சேதப்படுத்தாது; அதன் மையத்தில் உள்ள புழு ஆப்பிளை பாழாக்குகிறது. அதுதான் அது, அது நமக்குள்ளே அழுகிக் கொண்டிருக்கிறது. நாம் போய், நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, உலகத்தைப் போல நடந்து கொள்கிறோம், உலகத்தைப் போல உடை உடுத்திக் கொள்கிறோம், உலகத்தில் பங்கு கொள்கிறோம், நம்மை நாமே அழைத்துக் கொள்கிறோம்... உலகம் சோர்வுற்று, அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து களைப்புற்றும் உள்ளது. உலகம் மாத்திரமல்ல, அநேக கிறிஸ்தவர்களும் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். ஆம். 69. நான் அடிக்கடி, "மனிதர்கள் இருக்க வேண்டியவர் களாயிருப்பதற்கு இந்நாளில் தேவன் உதவி செய்வாராக. நான் அவருக்கு விரோதமாயிருந்தால், நான் அவருக்கு எதிராக இருந்தேன் என்று நான் கூறுவேன், என்னால் இருக்க முடிந்த எல்லாவற்றிலும் நான் அவருக்கு எதிராக இருப்பேன்” என்று கூறியிருக்கிறேன். ஆனால் நான் அவருக்காக இருக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை விசுவாசிக்கிறேன். மேலும்—மேலும் அவர் விரும்புகிறதையெல்லாம் செய்ய, என்னுடைய ஜீவியம் அவருடைய கரங்களில் உள்ளது, ஏனென்றால் கிறிஸ்தவம்தான் உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன். அது உண்மை. அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். 70. உலகத்தில் பிரயாணம் செய்து, அதை வெவ்வேறு கொள்கைகளில் நோக்கிப் பார்ப்பதில், அவர்களுடைய ஸ்தாபகர்கள் யாவரும் மரித்து கல்லறையில் கிடக்கின்றனர், அவர்கள் வேத சாஸ்திரத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவ சபையானது அதனோடு செல்லுகிறதைப் பொறுத்த மட்டில் அந்த அளவில்தான் உள்ளது. 71. "ஆனால்” தங்கள் தேவனை அறிந்திருக்கிறவர்கள் அதற்கேற்றபடி செய்வார்கள்.” உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமை அந்த மனிதனுக்குள் ஜீவிக்கிறது. அது உண்மை. அவர் மரிக்கவில்லை; அவர் உயிர்த்தெழுந்துவிட்டார். “நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன், நான் செய்கிற காரியங்களை நீங்களும் செய்வீர்கள்.” ஆம், ஐயா. 72. அப்பொழுது உலகம் வெளியே நோக்கிப் பார்த்து, “மதவெறி” என்று கூறுகிறது. தேவனுடைய ஒத்தாசையினால், நேற்றிரவில் நாம் அதை எங்கே எடுத்தோம் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். 73. இப்பொழுது, மிருகத்தின் எந்த ரூபத்தையும் உண்டாக்க முதன் முதலாக எழும்பின காரியம், அல்லது மிருகம் ஒரு “வல்லமை” என்று பொருள்படுகிறது. மிருகம் வல்லமையாயிருந்தது என்பதை நிரூபிக்க கடந்த இரவு, நாம் எல்லா அடையாளங்களையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ந்தோம். அது ரஷ்யாவிலிருந்து வெளிவரவில்லை. அது ரோமாபுரியிலிருந்து வந்தது. அது உண்மை. அது ரோமாபுரியிலிருந்து வந்தது. 74. அது மனிதர்களின் குழுவல்ல—அது அல்ல. அது ஒரு அரசியல் ஸ்தாபனம் அல்ல. அது ஒரு மத ஸ்தாபனமாக இருந்தது. அது "ஏழு மலைகளின் மேல் வீற்றிருந்த" ஒரு சபையாயிருந்தது, அங்கே ஒரு மனிதன் உலகம் முழுவதின் மேலும் ஆதிக்கம் செலுத்தி வந்தான். முற்றிலும் சரி. அது ஒரு ஸ்திரீ என்று நாம் கண்டறிந்து, அவளை அப்படியே தெளிவாக சித்தரிக்கிறோம். என்னுடைய சொந்த வியாக்கியானத்தை எடுத்துக்கொள்ளாமல்; வேதாகமத்தை வாசியுங்கள். அதாவது, உலகத்தில் வேறெந்த இடமும் இல்லை, உலகத்தில் எந்த நகரமும் முழு பூமியையும் ஆளுகை செய்கிற தில்லை.,ஒவ்வொரு தேசத்திலும், தானியலின் தரிசனத்தின் பத்து கால்விரல்களைப் போல ரோமானியத்தின் அந்தப் பாதிப்பு செல்லுகிறது, அது வாடிகன் நகரமாயிருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். 75. குறைந்தது ஒரு டஜன் கத்தோலிக்கர்களாவது நேற்றிரவு இங்கு அமர்ந்திருந்தனர். அவர்கள் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் உத்தமமானவர்கள். அவர்கள் பசியாயிருக்கிறார்கள். 76. இப்பொழுது, நீங்கள் குருவானவரோடு தர்க்கம் செய்ய முடியாது. ஏனென்றால், ஒரு குருவானவர், "சபையானது இந்த வேதாகமத்திலிருந்து வித்தியாசமாக ஏதாவது கூறினால், சபை சரியானதுதான்” என்று கூறி வாதிடமாட்டார். என்னைப் பொறுத்த மட்டில், வேதாகமம் சரியாயுள்ளது, சபை தவறாயுள்ளது. பார்த்தீர்களா? உங்களால் அவர்களோடு தர்க்கம் செய்ய முடியாது. அவர்கள், நீங்கள் பெற்றுள்ள... வாக்குவாதத்திற்கு வழியே இல்லை. கலந்தாலோசிக்கவோ அல்லது விவாதிக்கவோ வழியே கிடையாது. ஏனென்றால், அவர்கள், “சபை என்ன கூறுகிறதோ, அதுதான் அது! வேதம் என்ன கூறினாலும் கவலைப்படுவதில்லை. சபை என்ன கூறுகிறதோ, அதுதான் அது. அதைத்தான் சபை கூறுகிறது!” என்று விசுவாசிக்கிறார்கள். அவர்கள் சபையை விசுவாசிக்கின்றனர். நாம் வேதாகமத்தை விசுவாசிக்கிறோம். 77. இப்பொழுது அவள் அழைக்கப்பட்டாள் என்று நாம் கண்டறிகிறோம்... சபையானது ஒரு ஸ்திரீயாயிருந்தது. அவள் வெளிப்படையாக, இழிவான வார்த்தையான "வேசி" என்று அழைக்கப்பட்டாள், அதன்பின்னர் அவள் "வேசிகளின் தாயாக' இருந்தாள். கத்தோலிக்க சபைதான் முதல் தாய் சபை என்பதை நாம் கண்டறிகிறோம். அவள் இருந்ததாக அவள் கூறினது போலவே அவள் இருக்கிறாள். அவள் ஸ்தாபனமாக்கப்பட்ட முதல் சபை. எப்போதாவது தேவன் மார்க்கத்தை ஸ்தாபித்தாரா, அதை செய்தது கத்தோலிக்க சபையாக இருந்தது. கிறிஸ்தவ மார்க்கத்தில், உலகத்தில் முதன் முதலாக ஸ்தாபனமாக ஸ்தாபிக்கப்பட்டது, கத்தோலிக்க சபையே. இப்பொழுது... 78. அதன்பின்னர், முடிவிலே, அவள் "வேசிகளின் தாயாக” இருந்தாள். அவளுக்குப் பிறகு அவள் சபைகளைப் பெற்றெடுத்தாள், ஏனென்றால் அவர்கள் பையன்களாயிருக்க முடியாது, அவர்கள் பெண்பிள்ளைகளாயிருக்க வேண்டியதாயி ருந்தது, புராட்டஸ்டென்ட் சபையானது கத்தோலிக்க சபையின் விளைபொருளே என்பதை நாம் கண்டறிகிறோம். வேதவாக்கி யங்களை ஆராய்ந்து, உங்களுடைய சரித்திரப் புத்தகத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம், புராட்டஸ்டென்ட் சபையானது அதன் உற்பத்தியாயிருக்கிறது என்பதை நாம் காண்கிறோம். புராட்டஸ்டெண்டுகள் கத்தோலிக்கரைப் பார்த்து கூச்சலிட முடியாது, ஏனென்றால் இருவருமே, அவர்கள் “வேசிகள்” என்றும், “வேசி" என்றும் கூறுகிறது. அது வெளிப்படையானது, ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அது உண்மை. 79. கவனியுங்கள், அப்பொழுது அவன், “நாம்,” கூறி, அமெரிக்க ஐக்கிய நாடுகளில், அவர்கள், "நாம் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவோமாக” என்றனர். மிருகம் ஒரு வல்லமையாயிருந்தாலும், வல்லமை ஒரு ஸ்தாபனமா யிருந்தாலும்; இப்பொழுது கோட்பாட்டை எடுத்துக் கொள்ள வில்லை. தேவனுடைய வார்த்தையாயுள்ளது. கத்தோலிக்க சபையின் ஸ்தாபனம் ஒன்று சேர்ந்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, பிரமாண...கத்தோலிக்க சபையை ஸ்தாபித்து, "ஆதி பிதாக்கள்” ஒன்றாக என்று அவர்கள் அழைப்பதை அவர்கள் அமைத்து, ஒரு— ஒரு ஒரு-ஒரு சடங்காச்சாரத்தை உண்டாக்கி, அவர்கள் எதை விசுவாசித்தனரோ, அவர்கள் எதைப் போதிப்பார்களோ, அதை உலகளாவிய நம்பிக்கையாக ஆக்கிக் கொண்டனர். அவர்கள் அதைத் தண்டனையின் மூலம், ஜனங்களுக்கு பலவந்தம் செய்தனர். 80. அதன்பின்னர் மார்டின் லூத்தர் வெளியே வந்தபோது, தேவனுடைய ஆவி அவரை வழி நடத்தினதைக் கண்டு, ஜனங்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, அவன் சபையை ஸ்தாபித்து, மிருகத்திற்கு ஒப்பான ஒரு சொரூபத்தை உண்டாக்கினான், ஒரு அரசியல் வல்லமை அதற்கு ஒப்பாயிருந்தது. தேவன் வெளிச்சம் கொடுக்கிறபடி ஜனங்களை நடக்க அனுமதிப்பதற்கு பதிலாக, அவர்கள் ஒரு ஒழுங்குமுறையின் கீழ் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர், அவர்கள் அந்த ஒழுங்குமுறையில் நிலைத்திருக்க வேண்டும். 81. தேவன் மெத்தோடிஸ்டு சபைக்குள் அசைவாடினார். மெத்தோடிஸ்டுகளுக்கு உலகம் முழுவதும் ஒரு எழுப்புதல் உண்டாயிருந்தது; பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு, பரிசுத்தமாகுதலைப் போதித்தார். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் அதைச் செய்தபோது, அவர்கள் ஒரு சபையை ஸ்தாபித்து, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கினர், அது உண்மை, தங்களுடைய பாதையில் வெளிச்சம் பரவியிருந்தபோது, தொழுது கொள்ளவும், ஒளியில் நடக்கவும் சுதந்திரமாய் இருப்பதற்கு பதிலாக, தேவனுடைய ஜனங்களை ஒரு கோட்பாட்டோடு பிணைக்க, ஒரு அரசியல், ஸ்தாபிக்கப்பட்ட வல்லமை. 82. அவைகள் அந்தக் காலத்தில், அவைகளை பின்னுக்குத் தள்ளின. அது அங்கே அருமையான ஒளியாய் இருந்தது, அதுவே பெர்கமு சபைக்கு வெளிச்சமாய் இருந்தது. 83. ஆனால் பிலதெல்பியா சபையைக் குறித்து என்ன? அது மற்றொரு வெளிச்சம். ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள் எவ்வளவுதான் ஸ்தாபனமாயிருந்தாலும், தேவன் இந்த சபைக் காலத்தில் அசைவாடி, ஜான் வெஸ்லி என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதனை அனுப்பினார். லூத்தரால் அதை பின்பற்ற முடியவில்லை, ஏனென்றால் அவர் அதை விசுவாசிக்கவில்லை. அவன் ஏற்கனவே இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருந்தார். 84. பின்னர் ஜான் வெஸ்லி மிகவும் இறுக்கமாக ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு வந்துவிட்டது, அது இந்த சபைக்காலம் வருவதற்கான நேரமாய் இருந்தது. தேவன் பெந்தேகோஸ்தே குழுவை அனுப்பினார்; பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு இங்கே வெளியே செல்ல வேண்டும். ஓ மெத்தோடிஸ்டுகள், “ஹூ-ஓ. ஹூ! நாம் அதனோடு செல்ல முடியாது. ஹூ-ஹூ! நாம் அந்த காரியத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. ஓ, இல்லை” என்றனர். ஏன்? இதுதான் அவர்கள் நடந்து கொண்டிருந்த வெளிச்சம், இங்கே; இங்கே இப்போது வெளிச்சம் இங்கே இருக்கிறது. 85. நாம் சூரிய அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசி என்ன கூறினார் என்பது நினைவிருக்கிறதா? “அது மேகமூட்டமாக இருக்கும், இரவு அல்லது பகல்ல, ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் இருக்கும்.” ஒரு காலத்தில் கிழக்குத் தேசத்தில் யூதர்களுக்கு, கிழக்கிலே (யூதர்கள் ஒரு கிழக்கத்திய ஜனங்களுக்கு) பிரகாசித்த வெளிச்சம், அது புறஜாதிகள் மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அதே ஒளி, அதே பரிசுத்த ஆவி, இங்கே கடைசி நாட்களில், அதே ஆவியின் அபிஷேகம். நாம் இந்தக் காலங்கள் தோறும் இங்கு வந்துள்ளோம், அது வெளிச்சமோ அல்லது இருண்ட நேரமோ அல்ல, ஆனால் ஒரு மேகமூட்டமான, இருண்ட நாளாயிருந்தது; ஆனால் சரியாக இங்கே, வெளிச்சம் அங்கே பிரகாசித்தது போன்றே பிரகாசித்தது. 86. எனவே தான், "அவர் பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அல்பா, ஓமெகா, ஆதியும், அந்தமும்; இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; விடிவெள்ளி நட்சத்திரம்.” இதோ அது உள்ளது. (ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.) நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 87. மேலும், நினைவிருக்கட்டும், மிருகத்தின் முத்திரை ஒரு விசுவாசத் துரோகத்தின் முத்திரை என்பதை நாம் ஒரு பிழையுமின்றி கண்டறிந்தோம், அதாவது, சபை அங்கத்தினர்கள் ஒளியில் நடப்பதற்கு பதிலாக தங்களுடைய சபையில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒளியைப் புறக்கணிக்கின்றனர், இருளைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. அது உண்மை, கத்தோலிக்கரும், பிராடெஸ்டெண்டுகளும் இருவருமே. அங்கே “ஒரு மிருகம், ஒரு வேசி” இருந்தது. அவளுக்கு “வேசி” குமாரத்திகள் உண்டு. இந்த வேசி குமாரத்திகள், அவர்கள் புறப்பட்டு வந்தபோது, அவர்கள் அந்த நாளின் ஒளியில் இருந்து வந்த கன்னிகைகளாயிருந்தனர், அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, ஜனங்களை இங்கே திரும்பவும் கொண்டு வந்து, ரோமாபுரி ஆதியில் இருந்த அதேவிதமான ஒரு காரியமாக அவர்களை ஆக்கியது. வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. "மிருகம்; மிருகத்திற்கு ஒரு சொரூபத்தையும், அவனுடைய நாமத்தின் எழுத்து” போன்றவற்றையும் கூறலாம். 88. நேற்றிரவு, முழு காரியத்தினூடாகவும் நாம் எவ்வாறு கடந்து சென்றோம், வேதம் தெளிவாக...யாரோ ஒருவருடைய கோட்பாடு அல்ல. ஆனால் ரோமாபுரியிலிருந்து வந்த ஏழு தலைகளையும், பத்து கொம்புகளையும் கொண்ட மிருகம் [ஒலிநாடாவில் காலி இடம்-ஆசி.) என்று வேதாகமத்தில் போடப்பட்டுள்ளது, அங்கே ரோமாபுரியில், "இருந்ததும், இராமற்போனதும், இருப்பதும், இனி இராமற்போவது மாயிருக்கிறதே," இருந்தது, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு போப்பாண்டவர், ஒருவர் பின் ஒருவராக, அழிவுக்குள் செல்வார்கள். அதே வயோதிக ஸ்திரீ சில பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கண்டறியுங்கள். அவர்கள் ஆதிமுதற்கொண்டே கன்னிகைகளாய் இருந்தனர், அவர்கள் பெற்றிருந்த ஒளியில் நடந்தனர். அதன்பின்னர் அவர்கள் விபச்சாரிகளைப் போல் நடந்து கொள்ளத் தொடங்கி, அவர்களுடைய தாய் செய்கிற அதேக் காரியத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். சரியாக. சரியாக. 89. ஸ்திரீகளே, நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும். கவனியுங்கள். நான் இந்தக் காரியங்களை பகிரங்கமாக கூறும் போது, இப்பொழுது நீங்கள் என் மேல் அதிக நம்பிக்கை யில்லாமல் இருக்கலாம். அது உங்களைப் புண்படுத்து வதற்காக அல்ல; அது உங்களுக்கு உதவி செய்யவே. ஆனால் இன்றைக்கு சபைகள், தங்களுடைய பெண்களை அனுமதிப்பதை ஜனங்களாகிய நீங்கள் காணும் போது...இப்போது, நானும்—நானும் கூட, ஆண்களிடம் செல்லப் போகிறேன். ஆனால் அவர்களுடைய ஸ்திரீகள் இன்றைக்கு அவர்கள் செய்கிறவிதமாகவே செய்ய அனுமதித்து, அவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்தையே உரிமை கொண்டாடு கிறார்கள்! ஸ்திரீகளாகிய உங்களை நான் குற்றப்படுத்தவில்லை; நான் இன்றிரவுக்குப் பிறகு. ஆனால், பாருங்கள், இப்பொழுது ஸ்திரீகளாகிய உங்களை நான்—நான் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், என் சகோதரியே, இங்குள்ள ஏராளமான வேதபாட பள்ளி ஆசிரியர்கள் அல்லது கல்லறை அடக்க ஆசிரியர்கள் அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைத்தாலும், அது இங்கே எங்கோ இருந்து கொண்டு, உங்களை அந்த மாயையில் நடக்க அனுமதிப்பதாகும். அவர்கள் குருடரை வழிநடத்தி குருடாயிருந்தனர் என்று வேதம் கூறியுள்ளது. அது உண்மைதான். 90. இப்பொழுது, இயேசு இதைக் கண்டு, அந்த ப்ராடெஸ்டெண்டு சபைகளில் சில நேராக ஒளியின் வாசல் வரை நடந்து சென்று, அதை விட்டு விலகும் என்பதை அறிந்திருக்கிறோம். இயேசு, மத்தேயு 24:24-ல், அது அவ்வண்ணமாய் இருக்கும் என்றும், அந்திக்கிறிஸ்து உண்மையானவனைப் போல மிக அருகில் இருப்பான் என்றும், கூடுமானால், அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்றும் கூறினார். 91. இப்பொழுது, பாருங்கள், ரோமானியம், கத்தோலிக்க மதம், ஓ, அது புராட்டஸ்டெண்டுகளாகிய உங்களில் சிலரின் தலையில் தட்டியது. ஆனால், ஒரு மனிதன் அவனைக் குறித்து சிறிதளவு கிருபையைப் பெற்றிருந்தால், ஒரு சிறிய... வேதாகமத்தைக் குறித்து சிறிதளவே அறிந்திருக்கிற ஒரு மனிதன், அவன் புறக்கணித்து நடந்து சென்றுவிடுவான். அது உண்மை. அதின் வசீகரம் அவனுக்கு இருளாக இருக்கிறது; அவர்கள் போதிக்கிற எல்லா காரியங்களும், அதில் ஒன்றுமே இல்லை என்பதை அவன் அறிந்திருக்கிறான். அதற்கு வேதவாக்கியமே கிடையாது; இப்போதும் அப்பொழுதும் கிடையாது, அவ்வப்பொழுது, அவர்கள் சிறிதளவு தாக்கினர். 92. கூறப்பட்ட மிகப் பெரிய பொய், அதில் நிறைய உண்மை இருந்தது. அது உண்மை. முதலாவதாக, சாத்தான் ஏவாளிடம் பேசினான், அவன் ஏராளமான சத்தியங்களைக் கூறினான். ஆனால் அவன் அதனுடைய அடிப்பாகத்தில், அவளை ஆக்கினைக்குள்ளாக்கும் ஒரு பொய்யை உடையவனாயிருந்தான், முழு தலைமுறையையும், முழு சிருஷ்டியையும் பாழாக்கினது. அது உண்மை. 93. நீங்கள் அதை கவனிக்க வேண்டும். இங்கே சத்தியமும், இங்கே சத்தியமும், இங்கே சத்தியமும், அங்கே சத்தியமும் வரவேண்டும். அதனுடைய ஒவ்வொரு துணுக்கையும், சத்தியம்; எல்லா வழியினூடாகவும், அதே வரிசையில் இருக்கிறது. 94. ஆதி சபையானது விளக்குத் தண்டு குத்துவிளக்கினால் எரிந்து கொண்டிருந்ததை ஜனங்கள் எப்படிக் காண முடிகிறது, அப்பொழுது அங்கே முன்பு சம்பவித்த அதே காரியம் இங்கே சம்பவிக்கிறதைக் காணும்போது, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. அதை மறுப்பீர்களா? அவர்கள் ஒளியைப் புறக்கணித்து, இருளில் நடக்கின்றனர் என்பதையே அது காண்பிக்கிறது; ஒன்று மாத்திரமே விடப்பட்டுள்ளது. 95. என் சகோதரனே, அது உண்மை. நான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. தேவன் அதை அறிந்திருக்கிறார். அவர் என் இருதயத்தை அறிந்திருக்கிறார். எனக்கு ஒரு ஊழியம் உண்டு, இன்னும் எனக்கு முன்பாக ஏராளமானவை உள்ளன. என்றோ ஒரு நாள், நியாயத்தீர்ப்பில் இந்த காரியங்களுக்காக நான் பதில் கூறப்போகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. நான் ஒரு பொய்யான குற்றஞ்சாட்டுகிறவனாகவும், ஒரு கள்ளப் போதகனாகவும் காணப்படுவேன், அப்பொழுது தேவன் என்னை ஆக்கினைக்குட்படுத்துவார். அது உண்மை. ஆனால் நான் இந்தக் காரியங்களின் சத்தியத்தை அறிந்து, உங்களிடம் கூறவில்லையென்றால், அப்பொழுது அவர் என்னைக் ஆக்கினைக்குட்படுத்துவார், நிச்சயமாக. 96. அந்த காவல்காரனை நோக்கி, “கவனியுங்கள்! நீங்கள் எச்சரிக்கத் தவறினால், அப்பொழுது நான் நான் உன்னுடைய கரத்தில் கேட்பேன். ஆனால் நீ எச்சரித்தும், அவர்கள் தொடர்ந்து சென்றால், அவர்கள் தங்களுடைய பாவத்தில் மரிப்பார்கள், ஆனால் நான் அதை உன்னிடம் கேட்கமாட்டேன். நீ விடுபடுவாய்” என்றார். 97. எனவே வேதாகமத்தின்படி சத்தியம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளும்படி நாம் ஜாக்கிரதையாயிருக்க விரும்புகிறோம். அந்தக் காலம் எவ்வாறு துவங்கினது, அவர்கள் என்ன செய்தனர், இன்றைக்கும் பிராட்டஸ்டண்ட் சபையில் சரியாக அதேப்போன்றாகிவிட்டனர். 98. இங்கே பாருங்கள். ஒரு நீண்ட காலத்திற்கு முன்பே, பரிசுத்த ஜனங்களாகிய நீங்கள், ஸ்திரீகளாகிய நீங்கள் வழக்கமாக, உங்களுடைய தலைமுடியைக் கத்தரிப்பது தவறாய் இருந்தது. அதைக் குறித்து சரியாக என்ன ஆனது? வேதம் கூறியுள்ளபடி, ஒரு...ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமுடியை வெட்டிக்கொண்டால், அவளுடைய கணவனுக்கு அவளை விவாகரத்து செய்ய உரிமை உண்டு. எளிமையான போதகம், ஆனால் அது வேதம். 99. ஸ்திரீகளாகிய நீங்கள், இங்கிருந்து வெளியே வந்து, மேலாடைகளைக் கொண்டு, ஆண்களின் ஆடைகளை அணிந்துகொண்டும், உங்களுடைய முற்றத்தில் புல் வெட்டு கிறீர்கள். வேதம் கூறியுள்ளது, சர்வ வல்லமையுள்ள தேவன், "ஒரு புருஷனுடைய உடையை தரித்துக்கொள்கிற ஒரு ஸ்திரீ, அது அருவருப்பும், தேவனுடைய பார்வையில் அசுத்த முமாயிருக்கிறது” என்று கூறியுள்ளார். நீங்கள் அதைச் செய்கிறீர்கள். 100. நீங்கள் சிகரெட்டுகளை புகைக்கிறீர்கள், நீங்கள் நடனங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சென்று, இன்னமும் சபையைச் சார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏதோ ஒருவிதமான ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டதையே நீங்கள் காண்பிக்கிறீர்கள்; நீங்கள் பரலோகத்தில் குறிக்கப்படவில்லை, பரிசுத்த ஆவியானவர். சிறிது நேரம் கழித்து நாம் அதற்குள்ளாகச் சென்று, அதைக் காட்டிலும் வித்தியாசமானதை உங்களுக்குக் காண்பிப்போம். இப்பொழுது, அது ஒரு சிறு காரியம். 101. புருஷர்களே, நீங்கள் சபைக்குள் செல்லும்போது, உங்கள் வாயில் ஒரு சுருட்டோடு தெருக்களில், ஒரு-ஒரு கொம்பில்லாத டெக்ஸாஸ் காளையை போல நடந்து செல்கிறீர்கள். மேலும்...நான் ஒரு நகைச்சுவைக்காக அதைக் கூறவில்லை. பிரசங்க பீடத்தில் கேலி செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது சத்தியம் என்று நான் கூறிக்கொண்டிருக்கிறேன். தெருவில் சென்று, அந்த இடங்களில் அமர்ந்து, பொய் சொல்லுதல், திருடுதல், ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சபை நிர்வாகக் குழுவில் உள்ள கண்காணிகள் அதைச் செய்கிறார்கள். 102. சபைகளுக்குச் சென்று, இந்த பழைய பந்தாட்ட விளையாட்டுகளை விளையாடுகிறீர்கள், அது உலகத்தில் சாதாரணமான, கீழ்த்தரமான குலுக்கல் சீட்டு விளையாட்டே யன்றி வேறொன்றுமில்லை. அது உண்மை. நீங்கள் அதைச் செய்கிறீர்கள், அதன்பின்னர் ஒரு சூதாட்டக்காரனைக் குறித்து கூச்சலிடுகிறீர்கள். மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தேகோஸ்தேக்கள், அதைச் செய்கிற நீங்கள் யாராயிருந் தாலும், உங்களுடைய சபைகளில் நீங்கள் அவ்வளவு மோசமாக இருக்கிறீர்கள். அது உண்மை. அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அது என்ன? உங்களுடைய தாயின் நிலைமைக்கே நீங்கள் திரும்பிவிட்டீர்கள். அதே காரியம்தான், பானை கெட்டியை கருப்பு என்று அழைக்க முடியாது. அந்த காரியங்களை குறித்து அதே ஆவியும் உண்டு. 103 ஆனால் நான் கத்தோலிக்க ஜனங்களுக்கு எதிரானவன் அல்ல. நான் மெத்தோடிஸ்டுகளுக்கோ அல்லது பாப்டிஸ்டுகளுக்கோ அல்லது பிரஸ்பிடேரியன்களுக்கோ எதிரானவன் அல்ல. தேவன் ஜனங்களை, ஆபிரகாமின் வித்துகளை அங்கே வைத்திருக்கிறார். அது மக்களுக்கு எதிரானதல்ல. அது அவர்களுடைய சபைகளைக் குறித்ததாயுள்ளது, அவர்கள் அங்கே தங்களை ஸ்தாபனப்படுத்திக் கொண்டு, அவர்கள் தேவனைத் தொழுது கொள்வதற்குப் பதிலாக சபையையே தொழுது கொள்கின்றனர். ஓ, பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்கள் அதை நம்ப விரும்பவில்லை, ஆனால் நீங்கள் அதை எப்படியும் செய்கிறீர்கள். நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்று கேட்பீர்கள். 104. பாருங்கள், அண்மையில், சகோதரன் பாஸ்வர்த் ஒரு பெண்ணிடம், “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்று கேட்டார். 105. அவள், "ஒரு கிறிஸ்தவரா? நான் ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தியை எரிக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படி நான் கூறுகிறேன்!” என்றாள். 106. பாருங்கள், இப்பொழுது புராட்டஸ்டெண்டுகளாகிய நீங்கள் அதை ஏதோ ஒரு காரியம் என்று நினைக்கிறீர்களா? “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?" "நான் ஒரு மெத்தோடிஸ்டு” அல்லது “ஒரு பாப்டிஸ்டு” என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படிக் கூறுகிறேன். பாருங்கள், நீங்கள் உங்களுக்கான கிருபையின் நாளை விட்டு வெளியேறினீர்கள் என்பதைத் தவிர வேறொன்றையும் அது பொருட்படுத்துகிறதில்லை; அது உண்மை, நீங்கள் அவ்வளவுதான் என்றால், ஒரு மெத்தோடிஸ்டாக அல்லது ஒரு பாப்டிஸ்டாக மாத்திரமே இருந்தால். நீங்கள் அந்த மெத்தோடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு, அல்லது கத்தோலிக்க சபையில், ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டால், நீங்கள் இழக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அது உண்மை. எனவே அங்குதான் உங்களுடைய அடையாளம் சரியாக உள்ளது. 107. இரண்டு அடையாளங்களும் ஆவிக்குரியதாயுள்ளன. இப்பொழுது நான் அதை உங்களுக்கு வேதாகமத்தின் மூலம் நிரூபிப்பேன். இரண்டு அடையாளங்களும் ஆவிக்குரிய அடையாளங்களாகும். 108. அநேக ஜனங்கள், “அவர்கள் சுற்றித்திரிந்து, உங்களுடைய நெற்றியில் ஏதோ ஒன்றை பச்சை குத்திக்கொள்ளப் போகிறார்கள், உன்னுடைய கரத்தில் ஏதோ பச்சை குத்திக் கொள்ளுதல்” என்று எண்ணினர். அது ஒரு பொய் என்பதை, நேற்றிரவு, நாம் கண்டறிந்தோம். ஆம், ஐயா. அது தவறு. அது ஒரு ஆவிக்குரிய அடையாளம். அது—அது அப்படியே மறைக்கப்பட்டுள்ளது. மேலும், பாருங்கள், அநேக முறை... 109. இப்பொழுது இது அநேகரை கலங்க வைக்கலாம் என்பதை நான் அறிவேன், இப்போது எனக்குத் தெரியும், அது—அது கடினமாக தெரிகிறது. ஆனால் அது—அது சரியாகிவிடும், நாம் அப்படியே... தேவனுக்கு ஒரு சிறு அவகாசம் அளித்தால். நான்—நான் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்று கருதவில்லை, ஆனால் நான்—நான் என்னுடைய முழு இருதயத்தோடு உண்மையைக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 110. அப்பால் உள்ள கத்தோலிக்க சபையிலிருந்து புராட்டஸ்டென்ட் சபை வீழ்ச்சியடைந்ததை இயேசு கிறிஸ்து கண்டபோது, வெளியே வந்து நேராக திரும்பிச் சென்று, அவர்கள் செய்தவிதமாகவே மீண்டும் திரும்பிச் சென்றனர், அவர், “தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் படிக்கு ஆவி மிகவும் அருகாமையில் இருக்கும்...” என்றார். 111. கிறிஸ்தவ நண்பர்களே, மிருகத்தின் முத்திரை, அந்திக்கிறிஸ்து என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா, அந்திக் கிறிஸ்து...? எவருமே அதை அறிவர். அந்திக்கிறிஸ்து, அது அவனுடைய முத்திரை, அவனுடைய...வல்லமை, நீங்கள் பாருங்கள், ஒரு மிருகம் ஒரு வல்லமையாயுள்ளது. கத்தோலிக்க சபையின் வல்லமை ஒன்று உண்டு. மெத்தோடிஸ்டு சபையின் வல்லமை ஒன்று உண்டு. 112. அண்மையில் இங்கே, நான் ஒரு அருமையான பண்புள்ள, மனிதனிடம் சென்றேன். நான் தவறாக நினைக்கவில்லையென்றால், அவர் இன்றிரவு இங்கே சபையில் அமர்ந்திருக்கிறார். சிறுமி எடித் ரைட்டும் மற்றவர்களும் இந்த இடத்திலிருந்து இருபது மைல்கள் தூரத்தில் கூட இல்லை, இங்குள்ள கூட்டத்திற்கு வந்தனர். மேலும், நாம், ஜனங்கள்... நான் இரட்சிப்பின் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்தை அடைய நாங்கள் கார்களின் மேல் ஏறிச் செல்ல வேண்டியதாயிருந்தது. அன்றிரவு, போதகர் என்னை நேரடியாக அழைத்து, “சங்கை பிரான்ஹாம், நான் உங்களிடம் கூறுவதற்கு வருந்துகிறேன். ஆனால் அவர்கள் என்னிடம் சில சுகவீனமான ஜனங்கள் உள்ளே வந்ததாகக் கூறினர், எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளே வந்து, 'மெதோடிஸ்டு சபையில் தெய்வீக சுகமளித்தல் கிடையாது.' எனவே நீங்கள் மேடைக்கு சென்று, உங்களை கலைந்து கொண்டு, சபையை விட்டு வெளியேற வேண்டும்” என்றார். அது உண்மை. 113. ஏன்? மெத்தோடிஸ்டு சபையின் வல்லமை. அதுதான் மிருகத்தின் வல்லமை. பாப்டிஸ்டு சபையும் அவ்வாறேயுள்ளது. காம்ப்பெல்லைட், லூத்தரன், இன்னும் மற்றவை, பெந்தேகோஸ்தே போன்றவை மோசமானவை. அது உண்மை. நான் பெந்தேகோஸ்தே ஜனங்களை உடையவனாயிருக் கிறேன்...தேவனின் அசெம்பளீஸ் சபை ஆலோசனை சங்கத்திற்குள் சென்றுள்ளது. அது ஒரு-ஒரு... அவர்கள் இங்கே அந்த பழைய "தாய்" வேசியோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே ஒவ்வொரு சபை ஸ்தாபனமும் ரோமாபுரியிலிருந்து வருகிறது. அதற்கு தாய் இருக்கிறாள். நான் ஒரு பிற்கால பரிசுத்தவான் அல்ல, இல்லை பிற்கால- மாரி அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்களோ, அது அல்ல. நான் விரும்பவில்லை...நான் அதில் இல்லை. 114. ஆனால் புருஷரும், ஸ்திரீகளும், ஒளியில் நடக்கும்படியாக கிறிஸ்து இயேசுவுக்குள் சுயாதீனராயிருக்க வேண்டும் என்றே நான் இதை கூறுகிறேன். ஒவ்வொரு சபையும் ஒரே காரியமாய் இருக்க வேண்டும். அது உண்மை. 115. இப்பொழுது, இதைக் கவனியுங்கள், எப்படி வேதம்...அதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த ஸ்தாபனம், நினைவிருக்கட்டும், அது அங்கேதான் இருக்கிறது. கத்தோலிக்க சபை அங்கு துவங்கினபோது, அவர்கள் போலியான ஞானஸ்நானத்தைக் கொண்டு வந்தனர் என்பதை நாம் கண்டறிகிறோம், ஞானஸ்நானம் கொடுப்பதற்கு பதிலாக தெளித்தல். அதற்கான வேதவாக்கியம் ஒன்று கூட வேதாகமத்தில் இல்லை. அது மாத்திரமல்ல, ஆனால் பரிசுத்த ஆவி, தண்ணீர் ஞானஸ்நானம், முறைமைகள், பட்டங்கள், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமுமான, உண்மையானதை பரியாசம்பண்ணுகிறார்கள். ஆதி சபையில் எப்பொழுதாவது அது செய்யப்பட்டுள்ள எந்த ஒரு இடத்தையும் எனக்கு காண்பிக்கக் கூடிய ஒரு ஊழியக்காரனும் பூமியில் இல்லை. அது உண்மை. அது வேதாகமத்தில் இல்லை. ஆனால் அவர்கள் அதனோடு வெளியே வருகிறார்கள், நாம் அதற்கு தலைவணங்குகிறோம். நாம் எங்கே திரும்பிச் செல்லப் போகிறோம் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? 116. இன்றைக்கு ஏன் நமக்கு ஒரு எழுப்புதல் இல்லை என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். சகோதரனே, அதுதான் அது. இன்றைக்கு நமக்குத் தேவை என்னவென்றால், ஒரு நல்ல, பண்டைய கால, பரிசுத்த பவுலின் எழுப்புதலே, வேதாகம பரிசுத்த ஆவியானவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார். அதுதான் நமக்குத் தேவை. இப்பொழுது... 117. அவர்கள் “மிருகத்தின் முத்திரையை” அல்லது "அதின் நாமத்தின் எழுத்தை” எடுத்துள்ளனர் என்று அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்கினர். சொரூபம் கத்தோலிக்க சபையைப் போன்ற ஸ்தாபனமாயிருந்தது. அவர்கள் அதை ஸ்தாபித்து, கத்தோலிக்க சபையின் சொரூபத்தை உருவாக்கினர். மெத்தோடிஸ்டு சபையானது அதன் சொரூபமாயிருக்கிறதா; பாப்டிஸ்டு சபையா, பிரஸ்பிடேரியன் சபையா, பெந்தேகோஸ்தே சபையா, பரிசுத்த சபையா, யாத்திரீக பரிசுத்தரா, ஐக்கிய சகோதரர்களா? ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட ஒவ்வொருவரும் அங்கே முன்மாதிரியாக இருந்தனர். அது தேவனுடைய வேதாகமத்தில் ஒருபோதும் இருக்க வில்லை. அது உண்மை. ஸ்தாபனங்கள்; ஸ்தாபனமாக்குதல்! 118. தேவனே தலைவராகயிருக்கிறார். நீங்கள் விரும்புகிற அளவுக்கு அதை பண்டைய காலத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். எகிப்திலிருந்து வரப்போகும் இஸ்ரவேலைப் பாருங்கள். 119. அந்த அடிப்படை மோவாபியர் யாவரும் அங்கே நின்று கொண்டு, பலிகளைச் செலுத்தினர்; கிறிஸ்துவின் வருகையைக் குறித்துப் பேசும் ஏழு ஆடுகள்; ஏழு பலிபீடங்கள், ஏழு காளை, ஒரு சுத்தமான பலி. அங்கே சரியாக, அவனுடைய மகத்தான தீர்க்கதரிசி பிலேயாம் இஸ்ரவேலரை சபிக்க அங்கே நிற்கிறான். அங்கே இஸ்ரவேல்...அங்கே மோவாப், ஒரு பெரிய தேசம் இருந்தது. எமோரியர்களும், ஒரு பெரிய தேசமும் ஒன்று சேர்ந்து ஒரு தேசமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்தனர். 120. இஸ்ரவேல் ஜனங்கள் புல்வெளிகளில் பலவிதமான கூடாரங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள், "வரப்போகும் நகரத்தை தேடிக்கொண்டிருக்கிற பரதேசிகளும், அந்நியர் களுமாயிருந்தனர்,” அவர்கள் கண்டிப்பாக ஸ்தாபன பாகுபாடற்றவர்களாய் இருந்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் அவ்வாறு செய்யவில்லை; அவர்கள் அவைகளைக் குறித்து பொறாமை கொண்டனர். அவர்கள் அந்த விதமான ஆவிகளாயிருந்தனர். 121. தேவன் தம்முடைய மனிதனை எடுத்துக்கொள்கிறார், ஆனால் அவனுடைய ஆவியை எடுத்துக் கொள்வதில்லை. அவர் எலியாவை எடுத்துக்கொண்டார், அவனுடைய ஆவி எலிசாவின் மேல் இறங்கி, அநேக நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அது யோவான் ஸ்நானகனின் மேல் வந்தது, கடைசி நாளில் மீண்டும் முன்னுரைக்கப்பட்டது. 122. பிசாசு அவனுடைய குணாதிசயத்தை எடுத்துக் கொள்கிறான், ஆனால் ஒருபோதும் அவனுடைய ஆவியை எடுத்துக் கொள்வதில்லை. இயேசு கிறிஸ்துவை அவருடைய அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அற்புதங்களின் நிமித்தமாக கண்டனம் செய்த அதே மத போதகர், வேதவாக்கியத்தின் பேரில் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு, அதைக் குறித்து அவரிடத்தில் வந்து கூற போதுமான அளவு வெளிப்படையாக இருந்தது. அதே ஆவி இன்றைக்கு மதசம்பந்தமான போதகனுக்குள் ஜீவிக்கிறது...?...அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குள் வரும்படி தேவனால் நியமிக்கப் பட்டிருக்கிறது. அதைத்தான் வேதம் கூறியுள்ளது. "ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.” அது முற்றிலும் உண்மை. யூதா 3-ம்-3-ம் வசனத்தில் நீங்கள் அதைக் கண்டறியலாம். அது உண்மை. 123. மிருகத்தின் முத்திரை அங்கே உள்ளது என்பதை நிரூபிக்கிற இந்த காரியங்களை கவனியுங்கள். அங்குதான் அது உள்ளது. எனவே நீங்கள் இங்கு சுற்றி ஓடிக் கொண்டிருக்கும்போது, "மிருகத்தின் முத்திரை வரும்போது நான் காண்பிப்பேன்” என்று கூறினால், நீங்கள் அதை ஏற்கனவே பெற்றிருக்காதபடிக்கு கவனமாயிருங்கள். அப்படிப்பட்ட வர்கள் தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரத்திலிருந்து ஊற்றப்பட்டு, அக்கினியிலும் கந்தகத்திலும் தண்டிக்கப் படுவார்கள், இரவும் பகலும், என்றென்றைக்குமாய் வாதிக்கப் பட வேண்டும். அது ஒரு தீவிரமான காரியம். இப்பொழுது நீங்கள் எப்படி தப்பித்துக்கொள்ள முடியும்? 124 ஒரு நேரம் வரப்போகிறது, அது இப்பொழுதே வரப்போகிறது. கவனியுங்கள், அந்த ஸ்தாபனத்தில் அசைவாடி...இப்பொழுது நான் இங்கே உங்களுக்கு ஒரு சிறு குறிப்பை அளிக்கட்டும். அதுபோன்ற அந்த ஸ்தாபன இயக்கத்தின் கீழே, நீங்கள் அந்த ஸ்தாபனத்தை சார்ந்திருக்க வேண்டிய ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது, இல்லையென்றால் உங்களால் வாங்கவோ விற்கவோ முடியாது; அல்லது விசுவாசத் துரோகத்தின் முத்திரையை, சபை முத்திரையை உடையவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களால் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. 125. மேலும், சத்தியம் என்னவென்பதை அறிந்திருக்கிற ஜனங்களாகிய நீங்கள் கூறுவதைக் கேளுங்கள். உங்களுடைய சபையை விட்டு வெளியேறுங்கள் என்று நான் கூறவில்லை. நான் உங்களுடைய...உங்களை குறித்தும் அல்லது உங்களுடைய அங்கத்தினர்களைக் குறித்தும் எதிராக ஒன்றையும் கூறவில்லை. நான் தலைமை அலுவலகத்தைக் குறித்து கூறிக் கொண்டிருக் கிறேன், அவர்கள் அந்தக் காரியத்தை செய்தபோது, அதை உருவாக்கினர், "நாங்கள் இதைச் செய்யப் போகிறோம். நாங்கள் அதைச் செய்யப் போகிறோம்” என்றனர். அவர்கள் அந்த இரும்புக் கவச ஆட்சியை அமைத்தனர். தேவன் அதை துண்டு துண்டாக கிழித்து, அதிலிருந்து அவருடைய சபையை எடுத்துக் கொள்கிறார்; எப்பொழுதுமே அதைச் செய்தார். 126. இஸ்ரவேல் புத்திரரின் யாத்திரையைப் பாருங்கள். அவர்கள் ஒரு தீ மூட்டினார்கள். அவர்கள் ஒவ்வொரு இரவும் தங்கியிருந்தனர். அக்கினி ஸ்தம்பம் அவர்கள் மேல் தொங்கினது. அந்த அக்கினி ஸ்தம்பம் புறப்பட்டுச் சென்ற போது, பகல் அல்லது இரவின் நேரம் எது என்பது எனக்குக் கவலையில்லை. எக்காளம் ஊதப்பட்டு, இஸ்ரவேலர் பாளையத்திலிருந்து புறப்பட்டு வெளியேறினர். அது நள்ளிரவு, பிற்பகல் இரண்டு மணியாக இருக்குமானாலும், அது எப்பொழுதாக இருந்தாலும், அவர்கள் பாளயமிறங்கி அக்கினி ஸ்தம்பத்தைப் பின் தொடர்ந்தனர். அது சரியா? அவர்கள் அக்கினியைப் பின்தொடர்ந்தனர். 127. பாருங்கள், மார்டின் லூத்தர் தேவனுடைய அக்கினி வெளியே வருவதைக் கண்டபோது, மார்டின் லூத்தர் கத்தோலிக்கத்தை விட்டு வெளியே வந்து அக்கினியைப் பின் தொடர்ந்தார். ஆனால் அவர் அங்கேயே கட்டி தன்னுடைய சபையை ஸ்தாபனமாக்கிக்கொண்டார், அவரால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. 128. அக்கினியானது புறப்பட்டுச் சென்றது, வெஸ்லி அதைக் கண்டார், அவர் அதை பின் தொடர்ந்து சென்றார். அது உண்மை. தேவனுடைய அக்கினி உட்கார்ந்திருந்த லூத்தரை விட்டு சென்றது. அதன்பின்னர், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, வெஸ்லி அதன் கீழ், வெஸ்லியன் மெதோடிஸ்டு சபையைக் கட்டினார். 129. அதன்பின்னர் அலெக்சாண்டர் காம்ப்பெல், ஜான் ஸ்மித் மற்றும் பாப்டிஸ்டு, அது போன்ற, மூடி, மற்றும் மற்ற யாவரும் வந்தனர். அதன்பின்னர், முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் சடங்காச்சாரமாகி, விரைத்துப்போய், குளிர்ந்துபோய், பண்டைய தீர்க்கதரிசிகள் மரித்துப் போனபோது. இந்த புதிய கூட்டம் ஒரு வேதாகமப் பள்ளிக் கல்வியைத் தவிர வேறொன்றுமில்லாமல், அதன்பின்னர், நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முதல் காரியம், அதற்குள் நுழைந்து அலங்கோலமாக்கிவிட்டனர். 130. பரிசுத்த ஆவியானவர் வெளியே சென்றார், பெந்தகோஸ்தே அதைக் கண்டு அவர்களும் சென்றார்கள்; மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் போன்றவர்களிடத்தி லிருந்து விலகிச் சென்றார். இப்பொழுது அதைக் குறித்த கொடூரமான காரியம், ஆனால் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றவே, பெந்தேகோஸ்தேயினர் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர், மற்றவர்களைப் போலவே மிகவும் குளிராகவும், சடங்காச்சாரமாகவும் இருந்தனர். ஆனால், பாருங்கள், வேறொரு சபைக்காலம் ஒருபோதும் இருக்காது. கடைசி காலம் லவோதிக்கேயா சபையின் காலமாகும், அது குளிருமல்ல அனலுமல்ல. ஏறக்குறைய போதிய அளவு மார்க்கத்தைப் பெற்றுக் கொண்டு, இசை இசைக்கப் படும்போது, நடைபாதையில் மேலும் கீழுமாக நடனமாடி, அதன்பின்னர் அமர்ந்து, வீட்டிற்குச் சென்று உங்களுடைய அண்டை வீட்டாரைப் பற்றி பேசுகிறீர்கள். 131. இன்றைக்கு நமக்குத் தேவை என்னவெனில், ஒரு பண்டைய நாகரீகமான, பரிசுத்த ஆவியானவர், தேவனால் அனுப்பப்பட்ட, இரவும் பகலும் உங்களை முகங்குப்புற விழுந்து அழச் செய்யும் ஒரு எழுப்புதல், உலகத்தின் பாவங்களினிமித்தம், அழுது புலம்பி தொடர்ந்து அவ்வாறு செய்தல். நாம் அதற்குள் செல்வோம். அது உண்மை. 132. ஆனால் அவர்கள் அங்கே இருக்கிறார்கள். அங்குதான் நாம் வெதுவெதுப்பான நிலையைப் பெற்றுள்ளோம். தேவன், "அது என் வயிற்றில் எனக்கு குமட்டலை உண்டாக்குகிறது! நான் என் வாயிலிருந்து உன்னை வாந்திப் பண்ணி போடுவேன்" என்றார். அதுதான் சபை, புராட்டஸ்டென்ட் சபை, புறக்கணிக்கப்பட்டது. புராட்டஸ்டென்ட் சபை புறக்கணிக்கப் படுகிறது; பெந்தெகொஸ்தேயிலிருந்து லூத்தர் வரையிலும், அதன் ஒவ்வொரு பகுதியிலும். தேவனுடைய வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறுகிறது. 133. ஆனால் அந்த சபைகள் ஒவ்வொன்றிலிருந்தும், தெரிந்து கொள்ளபட்டவர்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள், அங்கே முழுவதும், கத்தோலிக்கம், மற்றும் எல்லோரிடமிருந்தும், அவர் ஒவ்வொருவரிடமிருந்தும் வித்தை எடுத்துள்ளார். அவர் ஒரு மீதியானவர்களை, ஒரு ஜனத்தை வெளியே எடுத்திருக்கிறார். 134. இங்கே அண்மையில், லூயிவில்லில், கத்தோலிக்க, ஒரு சிறு பெண்மணி மரித்துக் கொண்டிருந்தாள். நான் அங்கு சென்றேன். குருவானவர், “அப்படிப்பட்ட ஒரு காரியம் அர்த்தமற்றது!” என்றார். அவளுடைய கணவன், "ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர் உள்ளே வரட்டும்” என்றான். 135. அங்கே உள்ளே நடந்து சென்றேன். அடுத்த நாள் காலையில் அந்த ஸ்திரீ மரித்துப் போயிருக்க வேண்டும். அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கையில், ஒரு தரிசனம் தோன்றி, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உரைத்தது. அது உண்மை. அடுத்த நாள் காலை...அவள் சுகமாக வீட்டிற்குச் செல்லும்போது, சரியாக எத்தனை மணி நேரமாயிருக்கும் என்று அவளிடம் கூறினார். அவர்கள் அதை ஏளனமாக நகைத்தனர். பரிசுத்த ஆவியானவர் உரைத்த அதே மணி நேரத்தில், அவள் ஒரு சுகமான ஸ்திரீயாக வீட்டிற்குச் சென்றாள், அவள் இன்றைக்கு சுகமாக இருக்கிறாள். அவள் ஒரு கத்தோலிக்கர். அவர்கள் கத்தோலிக்கர்களாயிருந்தனர். அவர்கள் கத்தோலிக்கராய் இருந்தனர். 136. நீங்கள் ஒளியைப் பெற்றுக் கொள்ளும்போது...பழைய ஏற்பாட்டில்... இப்பொழுது அந்த அடையாளத்தை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். கூர்ந்து கவனியுங்கள், அதன்பின்னர் நான் நேராக என்னுடைய பொருளுக்கு செல்லப் போகிறேன். பாருங்கள், பழைய ஏற்பாட்டில், ஒரு அடிமை அடிமைத்தனத்தின் கீழ் இருந்தபோது, அப்பொழுது அவன்...அவன் ஒரு கிரயத்திற்குக் கொள்ளப்பட்டான். யூபிலி ஆண்டு வரைக்கும் அவன் எஜமானுக்கு ஊழியம் செய்ய வேண்டியதாயிருந்தது. யூபிலி ஆண்டு வந்தபோது, ஒரு எக்காளம் முழங்கினது. 137. அந்த அடிமை அங்கே வெளியே இருந்தபோது, அவனும் அவனுடைய பிள்ளைகளும், மனைவி மற்றும் அவர்கள் யாவரும் பழைய தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றனர், அவர்கள் வயல்களில் மிதித்துக் கொண்டிருந்தனர், ஆளோட்டிகள் அவர்களை இந்த பக்கமும், அந்த பக்கமும் அடித்தனர், அதன்பின்னர் யூபிலி ஆசாரியர் வந்து, எக்காளம் ஊதும்போது, அந்த ஆசாரியன் எக்காளத்தை ஊதினான், அந்த மனிதன், அவன் எக்காளத்தை கேட்டான், அவனால் தன்னுடைய மண்வெட்டியை கீழே போட முடிந்தாலும், அவன் என்ன செய்து கொண்டிருந்தாலும் அவனால் அதை கீழே போட முடிந்தாலும், ஆளோட்டியின் முகத்தை நோக்கிப் பார்த்து, “இன்னும் ஒரு முறை நீங்கள் என்னை அடிக்க முடியாது, நான் விடுதலையாகிவிட்டேன்” என்று கூறிவிட்டு, உடனே நடந்து வீட்டிற்குச் சென்றுவிடுவான். ஏன்? அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்டபோது, அங்கே யூபிலி சத்தமிடுதல் உள்ளது. 138. அதுவே சுவிசேஷம், யூபிலி, நீங்கள் பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறீர்கள். நீங்கள் இந்த அசுத்தமான பழக்க வழக்கங்களிலிருந்தும், உலகமானது இங்கே மார்க்கத்தின் பெயரால் உற்பத்தி செய்துள்ள காரியங்களிலிருந்தும், பிராடெஸ்டெண்டு மற்றும் கத்தோலிக்க மார்க்கம் இரண்டின் கீழும், மிருகத்தின் முத்திரையின் கீழும் இருந்து விடுதலையாகி விட்டீர்கள். அது உண்மை. நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள். 139. நீங்கள் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. ஆனால் அதன்பின்னர் அந்த மனிதன் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டால், அப்பொழுது அந்த மனிதன் அங்கிருந்து சபையின் பலிபீட நிலைக்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவனுடைய காதில் ஒரு துவாரமிடப்பட்டிருந்த, ஒரு அடையாளமும் போடப்பட்டிருந்தது. அவன் உயிரோடிருந்த வரையிலும் அந்த எஜமானுக்கு ஒரு ஊழியக்காரனாகவே இருந்தான். 140. வேதத்தின் மூலம், பரிசுத்த ஆவியின் வல்லமையில் பிரசங்கிக்கப்படும் போது, நீங்கள் சுவிசேஷ வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். உங்களுடைய நித்திய இலக்கை நீங்கள் முத்திரையிட முடியும். ஆமென். 141. இப்பொழுது பாருங்கள், இன்னும் ஒரு சிறு காரியம், ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த மனிதனைக் குறித்து—குறித்து, அந்த கருத்தை கூறியதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால், இங்கே பாருங்கள், "தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க..." 142. இப்பொழுது, நாம் லூத்தரன், பாப்டிஸ்ட் மற்றும் பலவற்றையும் கத்தோலிக்கர்களையும் தாக்கி வருகிறோம். இப்பொழுது பரிசுத்த ஜனங்களாகிய உங்களுக்கு ஒரு நிமிடம் நான் வரட்டும். பார்த்தீர்களா? நான் பரிசுத்தத்தை விசுவாசிக்கிறேன். நீங்கள் பரிசுத்தமாயிருக்க வேண்டும். "பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்கமாட்டான்.” என்னுடைய பரிசுத்தம் அல்ல; அவருடைய பரிசுத்தம். அதைக் குறித்து என்னால் ஒன்றுமே செய்ய முடியாது; அதை அவர் எனக்காக செய்திருக்கிறார். என்னுடைய சொந்தத்தில் நிற்க வேண்டாம், ஏனென்றால் எனக்கு ஒன்றுமில்லை, எந்த ஒன்றையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவும் வேண்டாம். நான் அவ்வாறு இருக்க முயற்சிப்பதில்லை. "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் இறுகப் பற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா?” இல்லை ஐயா. 143. நான் அப்படியே கட்டவிழ்த்து, அவரைப் பற்றிக்கொள்ளும்படி அனுமதித்தேன். அது உண்மை. அவரே பற்றிக் கொண்டிருக்கிற ஒருவர். அப்படியே மரித்தவர்களாய் தரித்திருங்கள், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். நீங்கள் உங்களை மரித்தவர்களாய் வைத்துக் கொள்ளுங்கள், அவர் பற்றிக் கொள்வார். அவர் ஏற்கனவே பற்றிக் கொண்டிருக்கிறார். அவர், “ அது முடிவுற்றது” என்று கூறுமளவிற்கு அவர் அங்கே பற்றிக் கொண்டிருந்தார். அதுவே அதை தீர்த்து வைத்தது. தேவன் நம்மை அவ்விதமாகவே செய்ய அனுமதிக்கிறார். அது முடிந்துவிட்டது. 144. ஆனால், பரிசுத்த ஜனங்களே, நசரேயன்கள் மற்றும் யாத்திரீக பரிசுத்தர்களாகிய நீங்கள் இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். வெஸ்லி சபையில் அல்லது மெதோடிஸ்டு சபையிலிருந்து வந்த அதிகாரத்தின் கீழ், அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, அருமையான பரிசுத்த ஜனங்களாகிய நீங்கள் வெளியே வந்து, "நாங்கள் தொடர்ந்து பரிசுத்தமாக இருப்போம்” என்று கூறினீர்கள். அது அற்புதமாயிருந்தது. நீங்கள் அந்த பிலதெல்பியா சபைக்காலத்தை, அது லவோதிக்கேயா சபைக் காலத்திற்கு வரும் வரையில் தொடர்ந்து நீடித்திருந்தீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வந்தபோது, அந்த அடையாளங்கள் சபைக்கு திரும்பினபோது, நீங்கள் அதை “பிசாசு” என்று அழைத்தீர்கள். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி, இந்தக் காரியங்களில் விசுவாசங்கொண்ட காரணத்தால், நீர், “அது பிசாசினால் உண்டானது” என்று கூறினீர்கள். நீங்கள் அதைச் செய்தபோது, நீங்கள் பரிசுத்த ஆவியை தூஷித்தீர்கள். 145. நான் எப்படி என் கரத்தை நோக்கி, “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியும்? போதகர்கள் உண்டு என்றால், அந்நிய பாஷைகளில் பேசுவதும் உண்டு. சுவிசேஷகர்கள் உண்டு என்றால், சுகமளிக்கும் வரங்களும் உண்டு. கால் எப்படி கண்ணைப் பார்த்து, "நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியும்? பார்த்தீர்களா? நீங்கள், நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாகப் பிறந்திருந்தால், தேவன் சரியென்று கூறுகிற ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு நடந்து கொள்ளுவீர்கள். நீங்கள் ஒளியில் நடப்பீர்கள். 146. சபை இடம் பெயர்வதற்கான நேரம் வந்தபோது, லூத்தர் சென்றார். சபையானது தன்னுடைய கரத்தை அசைப்பதற்கான நேரம் வந்தபோது, வெஸ்லி அந்த கரத்தை அசைத்தார். சபை பேசுவதற்கான நேரம் வந்தபோது, பெந்தேகோஸ்தே காட்சியில் வந்தது. அது உண்மை. ஆனால் இப்பொழுது கவனியுங்கள். 147. நீங்களோ, “ஒரு மாதிரியா?” என்று கேட்கலாம். நீங்களோ, “அதற்கு ஒரு மாதிரி இருக்கிறதா?” என்று கேட்கலாம். ஆம், ஐயா. 148. அந்திக்கிறிஸ்துவாகிய யூதாஸ்காரியோத்து, மிகவும் பக்தியுள்ளவனாயிருந்தான் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? நீங்கள் அதை உணர்ந்தீர்களா? அவன் சபையின் பொருளாளரா யிருக்கு மளவிற்கு அவர்கள், சகோதரர்கள் அவன் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். 149. யூதாஸ்காரியோத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்டு விசுவாசத்தினால் நீதிமானாக்கப் பட்டான். 150. அவர் வார்த்தையினூடாக பரிசுத்தமாக்கப் பட்டார். எபிரெயர் 17:17...நான் குறிப்பிடுகிறேன், பரிசுத்த யோவான் 17:17, “பிதாவே, சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்; உம்முடைய வார்த்தையே சத்தியம்” என்றார். அவர் வார்த்தையாயிருந்தார். 151. அவர்கள் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், வியாதியஸ்தரை சுகப்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. மத்தேயு 10-ம் அதிகாரத்தில் யூதாஸ்காரியோத்து அவர்கள் மத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தான். அவர்கள் புறப்பட்டுச் சென்று, பிசாசுகளைத் துரத்தி, பாவிகள் மனந்திரும்பி, பிசாசுகள் விட்டோடுமளவும் அந்தவிதமாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். அவர்கள் களிகூர்ந்தும், சத்தமிட்டுக் கொண்டும், ஒரு சிறு பரிசுத்த முகாம் கூட்டத்தைப் போன்ற ஒரு பெரிய நேரத்தை உடையவர்களாய் திரும்பி வந்தனர். யூதாஸும் அவர்களோடு சரியாக இருந்தான். அவர்களோடு சேர்ந்திருந்தான், அது முற்றிலும் உண்மை. 152. ஆனால் பெந்தெகொஸ்தேக்கான நேரம் வந்தபோது, யூதாஸ் தன்னுடைய சாயலைக் காட்டினான். 153. அங்கேதான் பரிசுத்த சபையானது தன்னுடைய நிறங்களை காண்பித்தது, அங்கேயே, ஆழமான தண்ணீருக்குள் அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்த அதே பரிசுத்த ஆவியை மறுதலித்து, அதை விட்டு திரும்பிச் சென்று அதை மறுதலித்தனர். 154. அவர்கள் மிகுந்த மத...உடையவர்களாயிருந்தனர் என்பதை நான் அறிவேன். நான் பெந்தெகொஸ்தேக்காரன் அல்ல. நான் ஒருபோதும் ஒரு பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாய் இருந்ததில்லை. நான் பிளவில் நின்றிருக்கிறேன். நான் பெந்தெகொஸ்தே, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்ல. நான் ஒரு வேதாகம கிறிஸ்தவன். அவ்வளவுதான். வார்த்தை கூறுகிறதை நான் விசுவாசிக்கிறேன். அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை என்னால் மறுக்க முடியாது; நான் அவ்வாறு செய்தால், நான் போதனையையும், ஏவப்பட்ட ஒவ்வொரு வரத்தையும் மறுதலிப்பேன். அது உண்மை. அந்நிய பாஷைகளில் பேசுதல் என்ற “ஒரே அத்தாட்சி” என்பதன் பேரில் பெந்தேகோஸ்தே சகோதரர்களோடு நான் ஒருபோதும் இணங்கவில்லை. நான் அதைச் செய்வதில்லை. இப்பொழுது, அவர்கள் அதை அந்தவிதமாக விசுவாசித்தால் பரவாயில்லை. அது அவர்களுடைய வேலை, பாருங்கள்; ஆனால் அது முற்றிலும் சரிதான். நான்...பவுல், "நீங்கள் யாவரும் அந்நிய பாஷைகளைப் பேச வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றான். ஒவ்வொருவரும் தேவனிடத்தில் அவ்வளவு நெருக்கமாக இருப்பதை நான் காண விரும்புகிறேன். 155. அவர்கள் ஏராளமான போலியான நம்பிக்கையை, ஏராளமான ஒப்பனைகளை வைத்துள்ளனர். அவர்கள் அநேக சமயங்களில் அங்கே வெளியே சென்று, பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் போல நடந்து கொண்டு, அந்நிய பாஷைகளில் பேசாத ஏதோ ஒரு காரியத்தைக் கூறினார். அது என்னவாயிருந்தது என்பதை அவர்களுடைய ஜீவியம் நிரூபித்தது. ஆனால் எல்லா நேரத்திலும், ஒரு உண்மையான அசலான கட்டுரை ஒரே விதமாக இருந்து வருகிறது. 156. பாருங்கள், ஏன் பிசாசு போலியானதை வைத்து வஞ்சிக்க மாட்டானா? நிச்சயமாகவே, அவன் அதை செய்து தடுக்க முயற்சிப்பான். அவன் அதே காரியத்தை பரிசுத்த ஸ்தாபனத்தில் செய்தான். அவன் மெத்தோடிஸ்டு சபையிலும் அதையே செய்தான். அவன் லூத்தரின் காலத்திலும் அதே காரியத்தை செய்தான். அவன் இன்றைக்கும் அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறான். தெய்வீக சுகமளித்தல் மற்றும் பகுத்தறிதல் என்னும் வரங்களின் வல்லமையின் கீழ், அவன் அதே காரியங்களை செய்து கொண்டிருக்கிறான். 157. ஆனால் உங்களால் பறவைகளின் பேச்சைப் பேச முடிந்தால், ஒரு பூச்சாண்டி பொம்மை உங்களுக்கு என்ன பொருட்படுத்துகிறது? பறவைகள், "நான் ஒரு பூச்சாண்டி பொம்மைக் காணும்போது, அது ஒரு உணவு சீட்டு. மிகச் சிறந்த ஆப்பிள்கள், எல்லா குச்சிகளும் கிடக்கிற இடத்தைச் சுற்றிலும், பூச்சாண்டி பொம்மைகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன” என்று கூறும். அது உண்மை. 158. ஆனால் அந்த ஆவி எப்படி இங்கே அசைவாடுகிறது என்பதை நீங்கள் பாருங்கள். இயேசு அந்த கத்தோலிக்க சபையினூடாக, வெளியே வருவதை முன்னரே கண்டார். “யாரையும் பிதா என்று அழைக்காதீர்கள். வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், இந்த எல்லா காரியங்களையுமே” கூறினார். வெளியே வந்து, “இப்பொழுது ஜாக்கிரதையாயிருங்கள், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அந்திக்கிறிஸ்து நெருக்கமாயிருப்பான்” என்றார். 159. பாருங்கள், சகோதரனே, எத்தனை கன்னிகைகள் கர்த்தரை சந்திக்கச் சென்றனர்? பத்து. அவர்கள் யாவரும் கன்னிகைகளாயிருந்தனர். பரிசுத்தமாக்கப்படுதல் என்பதன் பொருள் என்ன? “சுத்தமான, பரிசுத்தமான, கன்னிகை.” அவர்களில் பத்து பேர் கன்னிகைகளாயிருந்தனர். ஐவர் தங்கள் விளக்கில் எண்ணெய் இல்லாதிருந்தனர். ஐந்து பேரும் தங்கள் விளக்கில் எண்ணெய் வைத்திருந்தனர். இந்த ஐந்து பேரும் இவர்களைப் போலவே பரிசுத்தமாகவும், கன்னிகை களாயிருந்தனர் இருந்தனர். ஆனால் வேதாகமத்தில் எண்ணெய் என்பது எதைக் குறிக்கிறது, அதற்கு முந்தின இரவில் நாம் அதை நேற்றிரவில் பார்த்தோம்? ஆவி, “பரிசுத்த ஆவி.” அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, அங்கே அமர்ந்திருந்தனர், ஆனால் அவர்கள் பயமடைந்து, எண்ணெய் ஊற்றப்பட்ட ஊற்றுக்கு விலகி நின்றனர். பாருங்கள், தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டு, அங்கேயே அவர்கள் வெதுவெதுப்பாயிருக்கின்றனர். அங்கேதான் சபைக்காலம் சென்றது. 160. இப்பொழுது, நாம் தேவனுடைய அடையாளத்திற்கு வந்து கொண்டிருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், எனக்கு முப்பது நிமிடங்கள் உள்ளன. இப்பொழுது நீங்கள் முதலில் என்னோடு திரும்பி, இந்த தேவனுடைய முத்திரை எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 161. மிருகத்தின் முத்திரை என்னவென்பதை நினைவு கூருங்கள்; கம்யூனிசம் அல்ல. மிருகத்தின் முத்திரை ரோமாபுரியிலிருந்து உலகம் முழுவதிலும் வருகிறது. கத்தோலிக்கம், புராட்டஸ்டென்டு மார்க்கம் அதனுள் சேர்ந்து கொண்டு, மதத்தை ஸ்தாபித்தது. ஒவ்வொரு சபையும் அந்த விஷயத்திற்கு தலைவணங்கும் வரை அவர்கள் சபைகளை ஒன்றிணைக்கப் போகிறார்கள், நம்முடைய ஸ்தாபனமற்ற சபைகள் உதைத்துத் தள்ளப்படுகின்றன. அது உண்மை. 162. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 9-ம் அதிகாரம். தேவனுக்குச் சித்தமானால், நாம் ஒரு சில நிமிடங்களுக்கு இங்கே உண்மையாகவே கூர்ந்து வாசித்து, அவர் தம்முடைய வார்த்தையில் என்னக் கூறினார் என்று பார்ப்போம். இப்பொழுது.[ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி.) வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் வசனம். இதைக் கவனியுங்கள். புல்லையும் (அவர்கள் வாதைகள் ஊற்றப்படுவதைக் காணும்போது) அல்லது மரங்களையும்... எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 163. வாதைகள் வந்து கொண்டிருந்தபோது, தேவனுடைய இராஜ்ஜியத்தில் முத்திரையிடப்பட்டிருந்தவர்கள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டனர். இது விசாரணைக்குரிய நியாயத் தீர்ப்பாயுள்ளது, மனிதர்... தேவன் எனக்கு உதவி செய்வாரே யானால், இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாம் அதை கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு நிரூபிப்போம், இதுவே அந்த ஸ்தலத்தின் முத்திரையிடுதலின் நேரமாயிருக்கிறது. அதை நிராகரிப்பவர்களுக்கு நித்திய தண்டனையைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்காது. 164. இப்பொழுது நாம் பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம். நீங்கள் விரும்பினால், நாம் இங்கே, நீங்கள் விரும்பினால், இங்கே எசேக்கியேலின் புத்தகத்திற்குச் செல்வோம், நாம் எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தில் சிறிது நேரம் வாசிப்போம். இப்பொழுது, தேவனுடைய உதவியினால் இப்பொழுது, அவர் எங்களுக்கு உதவி செய்வாராக. தேவனுக்கு சித்தமானால், அடுத்த முப்பது நிமிடங்களுக்கு போதிப்பதற்காக இப்பொழுது அமர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது இது எசேக்கியேல் 9-ம் அதிகாரத்திற்குரியதாக இருக்கிறது... 165. நாம் இப்பொழுது தீர்த்துக்கொள்ள வேண்டிய முதல் காரியம் என்ன, தேவனுடைய முத்திரை என்ன? [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.) அது இன்றியமையாததாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] வேதாகமம் உங்களுக்கு போதுமான நல்ல வார்த்தையா? [“ஆமென்.”) உங்களிடம் அது இருக்கிறது என்று இப்போது எனக்குத் தெரியும், இப்பொழுது, "ஓய்வு நாளை ஆசரிக்கிறீர்கள்” என்று கூறுகிறவர்கள், ஆனால் புதிய ஏற்பாட்டில், அதை ஆதரிக்க ஒரு சிறு வேதவாக்கியம் கூட இல்லை. உண்மையாகவே, தேவனுடைய முத்திரை என்னவென்பதை நாம் கண்டறிவோமாக. எபேசியர் 4:30, 4:30, 1:13 வசனங்களுக்கு திருப்புங்கள். அதை குறித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4:30 கூறுகிறது: ...நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற பரிசுத்த ஆவியைத் தேவனுடைய துக்கப்படுத்தாதிருங்கள். 166. இப்பொழுது, முத்திரையிடுதல் என்பதன் பொருள் என்ன? முத்திரையிடுதல் என்பது ஒரு "முடிவின் அடையாளம்.” அது சரியா? 167. பாருங்கள், ஒரு இரயில் வண்டி வண்டிகளை ஏற்றிச் செல்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர் வெளியே செல்வார், அவர் இங்கே இவ்வளவு, இங்கே இவ்வளவு என்று நிறைய அமைப்பார். ஆய்வாளர் வருகிறார், அவர் உள்ளே பார்க்கிறார்; இது சற்று தளர்ந்தால், அது அசைகிறது, “இல்லை. நான் அதை முத்திரையிடமாட்டேன். அதை கிழித்தெறிந்து, அதை மீண்டும் செய்ய வேண்டும்” என்கிறார். அடுத்த காரியம், அவன் அதை மீண்டும் ஏற்ற முயற்சிப்பான்; அவன் இதை தவறாக புரிந்து கொள்வான். ஆய்வாளர் வந்து, "தவறு. அதை மீண்டும் செய்” என்கிறார். 168. அதைத்தான் தேவன் தம்முடைய சபையோடு நீண்ட காலமாக செய்து வருகிறார். நீங்கள் நிறைவடைவீர்கள், நீங்கள் பரலோகத்திற்கு செல்லப் போகிறீர்கள்; நீங்கள் எல்லா வற்றையும் உங்களோடு கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய சீட்டாட்டம், ஊ, நீங்கள் சபைக்குள் ஏற்றக்கூடிய மற்ற ஒவ்வொரு காரியத்தையும், நீங்கள் அதை உங்களோடு கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். தேவன் அதைக் கண்டிக்கிறார்; முத்திரையிட ஆயத்தமாயிருக்கவில்லை. 169. ஆனால் தேவன் ஒரு மனிதனை, நருங்குண்ட, நொறுங்குண்ட ஆவியைக் கண்டு, உத்தம இருதயத்தில் பீடத்தண்டையில், தேவன் அவனுக்கு உலகத்தின் வாசலை அடைத்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அங்கே அவனை முத்திரையிட, அது இயேசு வரும் வரைக்கும் நீடிக்கிறது; ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொன்றுக்கு அல்ல, ஆனால், "நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும்." 170. அந்த பெட்டிக்கதவு, கதவு மூடப்பட்டு, அதன் மேல் அரசாங்க முத்திரை போடப்படும்போது, அது அதனுடைய முடிவான இடத்தை அடையும் வரையில் அது திறக்கப்பட முடியாது. 171. மறுபடியும் பிறந்து, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் முத்திரையிடப்பட்ட ஒவ்வொரு மனிதனும், இயேசு கிறிஸ்து அவனை இராஜ்ஜியத்திற்குள்ளாக எடுத்துக்கொள்ளும் நாள் வரைக்கும் அவனுக்கு உலகத்தின் வாஞ்சையாயிருக்காது. எனவே உங்களுக்கு தொல்லை இருந்துகொண்டு, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாகக் கூறினால்; நீங்கள் மெத்தோடிஸ்டு சபையை, பாப்டிஸ்டு சபையை, பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்திருந்தாலும்; நீங்கள் சத்தமிட்டாலும், அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும்; முன்னோக்கினுவாறு பின்னோக்கினவாறு தெளிக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டாலும்; நீங்கள் இன்னமும் அந்தவிதமான தொல்லைகளை உடையவராயிருந்தால், நீங்கள் திரும்பி வந்து சுமையின் பேரில் பரிசோதிப்பது நல்லது. அது உண்மை. அளவுக்கதிகமாக எடுத்துச் சென்றால்; அது மிகவும் தளர்வாக, நடுங்குகிறது. தேவன் அதை அந்தவிதமாக முத்திரையிடமாட்டார். 172. ஒரு கோதுமை மணி பூமியில் விழும்போது, கவலைப்பட வேண்டியதில்லை...அந்த கோதுமை மணியானது தனக்குத்தானே மரித்துவிட்டால், அதனுடைய ஆத்துமாவை இரட்சிக்க, அது ஒரு களையையும் உற்பத்தி செய்ய முடியாது. ஒரு கோதுமை மணியானது ஒரு கோதுமை மணியை, நிச்சயமாகவே கொண்டு வரும். நாம் தேவனுடைய அழிவில்லாத வித்தினால் விதைக்கப்பட்டிருந்தால், அது எப்படி கிறிஸ்துவினுடைய ஜீவனின் ஜீவனைத் தவிர வேறொன்றையும் பிறப்பிக்க முடியும்? 173. பரிசுத்த ஆவியானவர் சபையை வழிநடத்துகிறார், அதை இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையில் வழிநடத்துகிறார், நீங்கள் மீட்பின் நாள் வரை முத்திரையிடப் பட்டிருக்கிறீர்கள். அதுதான் வேதாகமம். “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." எபேசியர் 4:30 174. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்னமே, புறஜாதி காலம் துவங்குவதற்கு முன்பே, அவன் முத்திரையிடப்படுகிறான். அவன் அந்த பொன் குத்துவிளக்குகளின் கீழ் முத்திரையிடப்பட்டிருக்கிறான். அந்த காலத்தின் கீழாகவே, அதைப் பெற்றுக்கொள்ள எங்களிடம் ஒரு விளக்கப்படம் இருந்தது. 175. அவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, ஆகாப், சாலமோன் போன்றவர்களின் நாட்களில் இருந்த இருண்ட காலங்களினூடாக, அது அந்த வெதுவெதுப்பான நிலையில் வெளியே வரும் வரைக்கும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தான். ஆனால் அவர் அங்கே அந்த யுகத்தை முடிப்பதற்கு சற்று முன்பு, அவர் யூதர்களுக்கு மாத்திரமே ஒரு மகத்தான பரிசுத்த ஆவியின் நற்பண்பை அளித்தார், “புறஜாதியாருடைய வழியிலே போகாமல், காணாமற்போன இஸ்ரவேலின் ஆடுகளண்டைப் போங்கள்.” அது சரியா? “அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” 176. “அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” அவர், "நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறேன்” என்றார். நித்திய ஜீவன் என்பது கிரேக்க வார்த்தையான "ஸோயீ” என்பதிலிருந்து வருகிறது. ஸோயீ அந்த ஜீவன். ஸோயீ என்பது தேவனுடைய ஜீவன். உங்களில் ஜீவிக்கிற தேவனுடைய ஜீவன், நான் இந்த மேடையில் நின்று கொண்டிருப்பது போன்ற நிச்சயமான ஒரு தேவபக்தியுள்ள ஜீவியத்தை உற்பத்தி செய்யுமானால் நலமாயிருக்கும். தேவன் அழிந்து போக முடியாதது போல, அதைப் பெற்றுள்ள மனிதன் அழிந்து போக முடியாது, ஏனென்றால் தேவன் மனிதனுக்குள் இருக்கிறார். ஆமென். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், நித்திய ஜீவனை உடையவராயிருக் கிறான்." "என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனைக் கடைசி நாளில் நான் எழுப்புவேன்.” அது அவருடைய வார்த்தை. விசுவாசிக்கு என்னே ஒரு ஆறுதல்! வெளிச்சத்தில் நடக்க புறக்கணிப்பவர்களுக்கு என்னே ஒரு ஆக்கினைத்தீர்ப்பு! 177. வெப்பமாகிக் கொண்டிருக்கிறது, இல்லையா? சரி, அது உங்களுக்கு நல்லது. கவனியுங்கள், இது உண்மையா என்று பாருங்கள். சகோதரனே, நாம் வேத வாக்கியத்தை தொடர்ந்து, வார வாரம், வார வாரம், இதன் பேரில் தரித்திருந்தாலும், தொடர்ந்து......... ஒரு வருடமாக, ஒரே பொருளின் பேரில், வேதாகமத்திலிருந்து எல்லா காரியங்களையும் எடுத்துரைத்திட முடியாது, சரியாக அதே விதமான காரியம்தான். 178. இப்பொழுது இங்கே ஒரு சிறு பூர்வாங்கம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் புறக்கணிப்பது உங்களுக்கு என்ன பொருட்படுத்துகிறது என்பதை நாம் திரும்பிச் சென்று கண்டறியப் போகிறோம், அது அந்நாளில் அவர்களுக்கு எதைப் பொருட்படுத்தினது. 179. இப்பொழுது, எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தில், தீர்க்கதரிசி எருசலேமைக் கண்டான். இப்பொழுது நினைவிருக் கட்டும், நாம் அங்கே யூதர்களைப் பற்றி, அவர்களுடைய முடிவிற்கு சற்று முன்னர், அந்த இடத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். 180. இப்பொழுது நாம் புறஜாதிகள், அவர்களுடைய முடிவில் இருக்கிறோம். அதன்பின்னர் நாம் ஆயிர வருட அரசாட்சிக்குள் செல்லப் போகிறோம். சரி. 181. ஆனால் இப்பொழுது இங்கே கவனியுங்கள், நாம் இப்பொழுது யூதர்களைக் குறித்து பார்த்து முடிக்கப் போகிறோம். தீர்க்கதரிசி அதை முன்னறிவிக்கிறான். இது இன்னும் நூறு ஆண்டுகள், சுமார் எண்ணூறு ஆண்டுகள், கர்த்தருடைய வருகைக்கு முன்னரே, அது தீர்க்கதரிசியின் மூலமாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. இப்பொழுது நாம் வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் படுகொலை செய்யும் ஒரு ஆயுதத்தை, இல்லை சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார். 182. இப்பொழுது நாம் வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு, (கவனியுங்கள்.) கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், (எருசலேமுக்குச் செல்லும் விதி) அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள். 183. இப்பொழுது தீர்க்கதரிசி ஆவிக்குள்ளாகி மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதைக் கவனியுங்கள். தேவன், "புறஜாதி யாரிடத்தில் வருவதற்கு முன்பு, நான் எப்படி யூதர்களோடு இதை தீர்த்துக்கொள்ளப் போகிறேன் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன்” என்றார். வசனத்தை அல்லது அதற்கு முன் உள்ள அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். இப்பொழுது, அவன் அங்கு உள்ளே வந்தபோது, அவன், “நான் கண்டேன்...” என்றான். முதலாவதாக, அவன் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத பாவத்தை நகரத்தில் கண்டான், அவன் எருசலேமைக் கண்டான். இப்பொழுது நினைவிருக்கட்டும், அது யூதர்களுக்கு மாத்திரமே விதிக்கப்பட்டிருந்தது, புறஜாதிகளுக்கு அல்ல; யூதர்கள், அவர்களுடைய தலைநகரான எருசலேம். நேற்றிரவைப் போலவே, புராட்டஸ்டெண்டு களுக்கு இப்பொழுது, இன்றிரவு; அது யூதர்களுடைய தாயுள்ளது. அவன், “நகரத்தினூடாக செல்” என்றான். இதோ புருஷர்கள் தங்களுடைய கரங்களில் சங்கரிக்கும் ஆயுதங்களுடன் நகரத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் சங்கரிக்கப் புறப்பட்டுச் செல்கிறார்கள். அதற்கு அவர், “இப்பொழுது ஒரு நிமிடம் அப்படியே இரு” என்றார். 184. அப்பொழுது அங்கிருந்து வெள்ளை வஸ்திரம் தரித்த ஒரு மனிதன் வந்தார். நாம் ஒரு நிமிடம் நிறுத்துவோம். “வெண் வஸ்திரம் தரித்து,” நீதி, பரிசுத்தம். "வெண் வஸ்திரந்தரித்தவர்,” அவர் தமது பக்கவாட்டில் ஒரு மைக்கூட்டை வைத்திருந்தார். அவர், “அவர்கள் வருவதற்கு முன், முதலில் நகரத்தின் வழியாகச் செல்லுங்கள், ஜனங்களின் பாவங்களினிமித்தமும், நகரத்தில் செய்யப்பட்ட அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டு கதறுகிற நகரத்தில் உள்ள ஒவ்வொரு புருஷன், ஸ்திரீ, பையன், பெண்ணின் நெற்றியில் ஒரு அடையாளத்தை போடு” என்றார், அவர்கள் மேல் ஒரு அடையாளத்தை போடுங்கள்! 185. அதன்பின்னர், அவர் சென்று அடையாளமிட்ட பிறகு, அவர் திரும்பி வந்து, “அது முடிந்தது” என்றார். 186. அதன்பின்னர் அவர் அந்த மனிதரை அனுப்பி, "புறப்பட்டு செல்லுங்கள், நீங்கள் எதையும் விட்டுவிடாதீர்கள், ஆனால் நீயோ அந்த அடையாளத்தைப் பெற்றிராத ஒவ்வொருவரையும் முற்றிலுமாக கொன்று போடு” என்றார். 187. சகோதரனே, இங்கே பாருங்கள். அந்த அடையாளங் காட்டி வேறு யாருமல்ல, பரிசுத்த ஆவியானவரே. 188. கவனியுங்கள், அவர் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லில் உள்ள பிரான்ஹாம் கூடாரத்திற்கு வருவாரானால், அல்லது நகரத்தில் உள்ள வேறெந்தக் கூடாரத்திற்கு வருவாரானால், அல்லது வேறெந்த சபைக்கு வருவாரானால், அவர் யார் மீது ஒரு அடையாளத்தை போடுவார், தேவனுக்கு முன்பாக மிகவும் உத்தமமாகவும், நேர்மையாகவும் இருந்து, அவர்கள் புலம்பி, அழுது, நகரத்தின் பாவத்திற்காக இரவும் பகலும் ஜெபித்தவர்களுக்கா? 189. பிரசங்கிமார்கள் தங்களுடைய பெண்களை நீச்சல் உடையில் இங்கு வர அனுமதிப்பது அவர்களை என்ன செய்யும், குட்டைக் கால் சட்டைகளை அணிந்து கொண்டு, தெருக்களில் மேலும் கீழுமாக நடந்து செல்லுதல்; பாடகர் குழுவில் பாடி, வர்ணம் தீட்டி, யேசபேல்களைப் போல் செயல்படுகின்றனர். அங்குள்ள புருஷர்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகின்றனரே! அவர்கள் அதைக் குறித்து கவலையற்றவர்கள் போல் நடந்து கொள்கின்றனர்; ஒரு பெரிய கோழி விருந்துக்கு அல்லது எங்காவது ஒரு விருந்துக்கு செல்கிறார்கள். புதன் கிழமை இரவுகளில் வீட்டிலேயே தங்கி ஜெபக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்குப் பதிலாக தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். கோடை காலத்தில் ஆராதனைகளுக்காக சபையை மூடி விடுகிறார்கள். அவர் எதை முத்திரையிடுவார்? 190. இன்றிரவு, நமக்குத் தேவை என்னவென்றால், இங்குள்ள இந்த ஹாலிவுட் சுவிசேஷத்தை நெருக்கிப் போடுவதே! ஒரு பண்டைய நாகரீகம், தேவனால் அனுப்பப்பட்ட எழுப்புதல், பீடத்தண்டை வந்துள்ள புருஷர்களும் ஸ்திரீகளுமே! கரங்களை குலுக்குவதையும், கரங்களை உயர்த்திப் பிடிப்பதையும், அவர்களுக்கு தெளிப்பதையும், முகத்தை முன்னோக்கி பின்னோக்கியவாறு ஞானஸ்நானம் கொடுப்பதையும், இந்த மற்ற சிறு சடங்காச்சாரங்கள் மற்றும் கொள்கைகளை விட்டு விடுவதே. பாவம் இருக்கிற இடத்தில், உண்மையாகவே ஒரு நறுங்குண்ட, நொறுங்குண்ட ஆவிக்குள்ளாதல். அதை ஒன்றாகக் கலந்தால், ஒரு பழங்கால நாகரீக, ஒரு புதிதாகப் பிறந்த குழந்தை அழத் துவங்கும். ஆமென். அந்தவிதமாகத்தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறார்கள். அது உண்மை. 191. அவர்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு அல்லது கத்தோலிக்கர் அல்லது அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை! அவர்கள் அந்த பீடத்திற்கு முன்பாக வந்து, இரவும் பகலும், "ஓ, தேவனாகிய கர்த்தாவே, இந்த நகரத்தின் பாவங்களை நோக்கிப் பாரும்! என் இருதயம் இளைப்பாற முடியவில்லையே! கர்த்தாவே, இந்த காரியங்கள் சம்பவிக்கிறதைக் கண்டு என்னால் இளைப்பாற முடியவில்லை. ஓ, தேவனே, ஏதோ ஒரு காரியத்தை செய்யும்! எங்களுக்கு ஒரு பண்டைய மாதிரியான எழுப்புதல் கூட்டத்தை அனுப்பும்” என்று கதறுகின்றனர், அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் எல்லைக் கோட்டில் இருக்கிறீர்கள், சகோதரனே!...?... 192. ஆனால் நீங்கள் மேலும் கீழும் குதித்த காரணத்தால் அல்லது நீங்கள் இசையோடு நடனமாடிய காரணத்தால் அங்கு நடந்து சென்றால், அல்லது நீங்கள் வேறு ஏதோ காரியத்தை செய்த காரணத்தால்; சத்தமிட்டு, கவலைப்படாமல், கத்தினால், வம்பு செய்து கொண்டு, சபையில்-இணைந்து கொள்ளுதல், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குதித்தல்; நீங்கள் துவக்கத்தில் ஒன்றையுமே பெற்றிருக்கவில்லை என்பதையே அது காண்பிக்கிறது. 193. சகோதரனே, அது, அது நல்ல வலிமையான மருந்து, ஆனால் அது நிச்சயமாக உங்களை குணப்படுத்தும். அது உண்மை. ஆம், ஐயா. அது உங்களுக்கு மத்தியில் பலவீனமான ஒருவனும் இல்லாமல் உங்களை வெளியே கொண்டு வரும். 194. மோசேயைப் போல. நான் அவருடைய மருந்துப் பெட்டியைப் பார்க்க விரும்புகிறேன், நீங்கள் விரும்புகிறீர்களா? அங்கே இருபது இலட்சம் ஜனங்கள் இருந்தனர். மோசே என்ன வைத்திருந்தான் என்பதை, அவனுடைய மருந்துப் பெட்டியில் நீங்கள் காண விரும்புகிறீர்களா? அவர்கள் யாவரும் வயோதிகர்கள், ஒவ்வொரு இரவும் நூற்றுக்கணக்கான சிறு குழந்தைகள் பிறக்கின்றனர், முடமானவர்கள், சுகவீனமுள்ள ஜனங்கள். அவன் வெளியே வந்தபோது, நாற்பது வருடங்களில் அவர்களில் ஒரு-ஒரு பலவீனமானவன் கூட இருக்கவில்லை. இன்றிரவு இங்கு அமர்ந்துள்ள மருத்துவர்களாகிய உங்களில் சிலர், அவனுடைய மருந்து பெட்டியில் பார்க்க விரும்பமாட்டீர்களா? 195. நாம் அதில் பார்த்து, அது என்னவென்று பார்ப்போம். இப்பொழுது திரும்பிப் பாருங்கள். நாம் கண்டறிவோம். “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே.” அதுதான். ஆமென். அது அப்படித்தான் இருந்தது. “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே.” ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறலாம். “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே.” அவனுக்கு சளிக் காய்ச்சல் உள்ளது. “உன்னை குணமாக்குகிற கர்த்தர் நானே.” அந்த மருந்து சீட்டை மாத்திரமே அவனால் கொடுக்க முடிந்தது. அந்த ஒன்று மாத்திரமே அவனுக்குத் தேவையாயிருந்தது. அந்த ஒன்றை மாத்திரமே அவன் வைத்திருந்தான். அதைத்தான் தேவன் அவனுக்காக அளித்தார். உண்மையாகவே இன்றைக்கு, "ஓ, நாங்கள் அதில் விசுவாசங்கொண்டிருக்கவில்லை. இல்லை, அது..." 196. தேவன் ஒருபோதும் மாறுகிறதில்லை. அவர் அதே விதமாக இருக்கிறார். இந்த ஆவி, இன்றைக்கு இந்த ஆவி, இன்று மக்கள் தொடர்ந்து செய்கிற வழியில், கிறிஸ்தவ மார்க்கம் என்ற பெயரால், அங்கே தேவனை அவருடைய வயிற்றில் சுகவீனப் படுத்தினது, ஜனங்கள் அதைச் செய்வது ஒரு 'அருவருப்பாயிருந்தது”, அது இன்றைக்கு ஒரு அருவருப் பாயுள்ளது. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." ஓ, நான் பக்தி பரவசப்படுகிறேன். 197. கவனியுங்கள், "இங்கே போ” என்றார். அவர், “நீங்கள் நகரத்தினூடாக செல்லுங்கள் நீங்கள் நகரத்தில் நடந்துள்ள அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களுக்கு ஒரு அடையாளத்தை போடுங்கள்” என்றார். அதன்பின்னர் அவர், “நீர் அதைச் செய்தப் பிறகு,” என்றார். அவர் இந்த மனிதர்களை ஒரு சங்கரிக்கும் ஆயுதத்தைக் கொண்டு அனுப்ப, அவர்கள் புறப்பட்டுச் சென்று எல்லாவற்றையும் கொன்று போட்டனர். 198. இப்பொழுது, சரித்திர ஆசிரியர், ஒரு நிமிடம். இயேசு மாம்சத்தில் வந்தார்; தேவன், மாம்சத்தில் வெளிப்பட்டார். "தேவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்.” அவர் மாம்சத்தில் வந்தபோது, அவர் சுற்றிச் சென்று உபதேசித்தார். அவர்கள் அவரை, "பெயல்செபூல்; குறிசொல்பவர்” என்றனர். அவர்கள் அவரை, அவருடைய பிறப்பைக் குறித்தும், மற்ற ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் பரிகசித்தனர்; அவரை புறக்கணித்து, அவரை வெளியே தள்ளினார். 199. அவர், "மனுஷகுமாரனுக்கு விரோதமாகப் பேசுகிறவன் எவனோ, அது அவனுக்கு மன்னிக்கப்படும், பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசுகிறவன் எவனோ, அது அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்றார். 200. அவர் ஒரு சில யூதர்களை ஒன்று கூட்டினார். அவர் புறஜாதிகளிடம் செல்லவில்லை. அவர் யூதர்களிடம் சென்றார். அவர் யூதர்களிடம் அனுப்பப்பட்டார். அது ஒரு புறஜாதி யுகம் அல்ல. யூத காலத்தில் கடைசி மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது, அவர் அங்கு சென்றார். ஒரு சில ஜனங்கள் அவரை ஏற்றுக்கொண்டு, வெளியே அழைக்கப்பட்டனர். 201. அது இன்றைக்கு அப்படியே உள்ளது. பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பேசி, அப்பொழுது அவர்களை அழைத்தது போல; அந்தவிதமாகவே பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பேசி, இன்றைக்கு கூப்பிடுகிறார். 202. அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசித்தனர். அவர்கள் தங்களுடைய தலைவரை கவனித்தனர். அவர்கள் அவரை கவனித்தனர். அவர் தீர்க்கதரிசிகளின் ராஜா என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர் என்ன உரைத்தார், தேவன் அதை உறுதிப்படுத்தி, அது சத்தியமாயிருந்தது என்றும் கூறினார். அவர்கள் சத்தியத்தை உடையவர்களாயிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் யாரை விசுவாசித்துக் கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அவர்கள் இயேசுவோடு முன்னோக்கிச் சென்றனர். 203. அப்பொழுது அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தனர். அவர், "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்து கொண்டிருப்பது இன்னதென்று கூட அறியாதிருக்கிறார்கள்” என்றார். 204. ஆனால் பெந்தேகோஸ்தே நாள் முழுமையாக வந்தபோது, அங்கே ஒரு கூட்ட ஜனங்கள் அழுது, அழுதுகொண்டிருந்தனர். "பெந்தெகொஸ்தே நாள் முழுமையாக வரும்போது..." 205. திடீரென்று ஒரு குருவானவர் ஒரு கோஷர் பெட்டியோடும், இராபோஜனப் பெட்டியோடும், "உன்னுடைய நாவை நீட்டு, நான் அந்த திராட்சரசத்தை குடிப்பேன்” என்று கூறினதை நீங்கள் கண்டீர்களா? என்ன முட்டாள்தனம்! அந்த சாலையில் ஒரு பிராடெஸ்டெண்டு பிரசங்கியார் வந்து, "நாம் ஐக்கியத்தின் வலது கரத்தை எடுத்துக் கொண்டு, ஆறு மாத தடையுத்தரவு எடுத்துக் கொள்வோமா?” என்று கேட்டார். ஹூ! அர்த்தமற்றது! “நான் உன்மேல் தெளிப்பேன். நான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன். நான் உன்னை இந்த விதமாக அழைத்துச் செல்வேன், உன்னை சபைக்கு கொண்டு செல்வேன், ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுப்பேன்” என்று கூறுவீர்களா? அர்த்தமற்றது! 206. “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, வானத்திலிருந்து பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல சடுதியாய் வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பினது. அக்கினியைப் போலப் பிளந்த நாவுகள் அவர்கள் மேல் உட்கார்ந்து கொண்டன.” அவர்கள் உளறி, திக்கிப் பேசி, எச்சில் தெறிக்க பேசி, எச்சில் துப்பவும், தொடர்ந்து செய்தனர். 207. நீங்களோ, “இல்லை!” என்று கூறலாம். நான் அதை உங்களுக்கு வேதாகமத்தின் மூலம் நிரூபிப்பேன். ஆம், ஐயா. “அவர்கள் அதைத்தான் செய்தார்கள் என்று நீங்கள் என்னிடம் கூறுகிறீர்களா?” அதைத்தான் வேதம் கூறியுள்ளது. 208 .ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்ததை நீங்கள் அறிவீர்களா? ஒரு நிமிடம், நான் இங்கே ஏசாயாவிலிருந்து ஒரு சிறு காரியத்தை உங்களுக்கு வாசிக்கட்டும். ஏசாயா 28-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலிருந்து துவங்குகிறது. போஜனபீடங்களெல்லாம் வந்தியினாலும் (இந்த நாளைக் குறித்துப் பேசுகிறார்.) அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. (சகோதரனே, அது ஒரு யூதனுடைய காட்சியாயிருக்கவில்லையென்றால்!) அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? (நாம் இன்றிரவு உபதேசத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.)... பால்மறந்தவர் களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்கும். கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும்,... (அந்தவிதமாகத்தான் சுவிசேஷம் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் வருகிறது.) பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே இளைப்பாறுதல்; வரவேண்டுமென்று நான் கூறின சமாதானம். இவையெல்லாவற்றின் நிமித்தமும் அவர்கள் கேட்க மனமில்லாமல், தங்களுடைய தலையை அசைத்துக் கொண்டு நடந்து சென்றனர். 209. அங்குதான் காரியம். அதைத்தான் அவர் கூறினார். அது என்னுடைய வார்த்தையல்ல; அது அவருடைய வார்த்தை யாயுள்ளது. உங்களால் முடிந்தால், அதை மாற்றுங்கள். அதை ஒருபோதும் மாற்ற முடியாது. அவர், "கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம்” என்றார். முழு சுவிசேஷமும் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். 210. முழு சுவிசேஷம் இங்கே துவங்க வேண்டும், அவர்கள் அதை பிரசங்கித்தனர். அவர்கள் அதைச் செய்தபோது, பரிசுத்த ஆவியின் வல்லமை வந்தது. 211. அந்த யூதர்கள் இயேசுவைக் குறித்து கேலி செய்தனர். ஆனால் அவர்கள் நகைத்து, "ஹா-ஹா-ஹா! இந்த மனிதர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்றனர். அவர்கள் தங்களுடைய நித்திய இலக்கை முத்திரையிட்டனர். அவர்கள், "அவர்கள் பேசுகிற அற்புதமான கிரியைகளை நாங்கள் ஏன் எங்களுடைய சொந்த பாஷைகளில் கேட்க முடிகிறது? ஏன், இந்த மனிதர்கள் மதுபானத்தினால் நிறைந்துள்ளனர். ஹா-ஹா!” என்றனர். அவர்கள் பரிகசித்து நகைத்தனர். 212. பேதுரு, அந்த சிறிய பரிசுத்த உருளை, சோப்புப் பெட்டி- பிரசங்கி, அவனுக்கு ஒரு சோப்புப் பெட்டியை வைத்து, அதன் மேல் குதித்து, "யூதேயாவின் மனுஷரே, எருசலேமில் வாசமாயிருக்கிற நீங்களும், இதை அறிந்து, என் சத்தத்திற்குச் செவிகொடுங்கள். ஆனால் இது—இது தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டது. நீங்கள் நினைக்கிறபடி இந்த மனிதர் மதுபானத்தினால் நிறைந்திருக்க வில்லை, ஏனென்றால் பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறது. ஆனால் இதுவோ அதுதான்” என்றான். அவன் வேதாகமத்தை திரும்பவும் சுட்டிக் காட்டினான். நான் அடிக்கடி, "இது அதுவல்லவென்றால், அது வரும் வரையிலும், ஏதாவது வித்தியாசம் இருக்குமானால், நான் இதை அப்படியே வைத்திருப்பேன்” என்று கூறியிருக்கிறேன். சரி. மேலும், “இது தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டது. அது கடைசி நாட்களில் நிறைவேறும்,” என்று கூறப்பட்டது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில். 213. முதலாவதாக இரண்டாயிரத்தில் உலகம் தண்ணீரினால் அழிக்கப்பட்டது. இரண்டாம் இரண்டாயிரத்தில், கிறிஸ்து வந்தார். கடைசி இரண்டாயிரம் ஆண்டுகளில், “நான் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்.” அல்லேலூயா! "நான் சில பிரசங்கிமார்களுக்கு கல்வி கற்பித்து, சில குருமார்களை அனுப்புவேன்” என்றல்ல. 214. “ஆனால் நான் உன்னதத்திலிருந்து என் ஆவியை ஊற்றுவேன்; உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; என் ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் நான் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். நான் மேலே வானத்திலும், கீழே பூமியிலும் அடையாளங்களைக் காண்பிப்பேன்.” அது அப்படித்தான் இருந்தது. அது துவக்க விழாவாயிருந்தது. 215. அப்பொழுது அந்த யூதர்கள் நகைத்து, பரிகசித்து, “அவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்றனர். அதுவே அவர்கள் போக வேண்டிய இடத்தை முத்திரையிட்டது. 216. கி.பி. 96-ல், தீத்துவின் காலத்தில், எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருந்தது. என்ன சம்பவித்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த யூதர்கள், “இப்பொழுது நாம் கர்த்தருடைய வீட்டிற்கு திரும்புவோம்” என்றனர். 217. ஆனால் எச்சரிக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள்... 218. ஜோசிபஸ், "நரமாம்சம் தின்ற மாதிரியான ஜனங்கள், இந்த நாசரேயனாகிய இயேசுவின் சரீரத்தைப் புசித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினான். அவர்களோ, “அவர்கள் அவருடைய சரீரத்தை மறைத்து, அவர்கள் அதைப் புசித்தனர்” என்று கூறி, (அவர்கள் இராபோஜனத்தை புசித்துக் கொண்டிருந்தனர்.) “முற்காலத்தில் அவர்களை அவர்கள் அங்கே மதபேதமுள்ளவர்கள்” என்று கூறினர். 219. முற்காலத்தில் அந்த ஜனங்கள் "மதபேதமுள்ளவர்கள்” என்று அழைக்கப்பட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது உங்களுக்குத் தெரியுமா? ஒரு மதவெறியர் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? யாரோ “பைத்தியம்”. ஆம். பரிசுத்த பவுலைப் பாருங்கள். 220. இப்பொழுது, ஜனங்களாகிய நீங்கள், பாப்டிஸ்டு களாகிய நீங்கள்—நீங்கள், “பரிசுத்த பவுல், ஓ, நான் அவனை விசுவாசிக்கிறேன்" என்று கூற விரும்புகிறீர்கள். கத்தோலிக்கர் களாகிய நீங்கள், “ஓ, பரிசுத்த பவுல்” என்று கூறி, இரண்டு அல்லது மூன்று அடி தூரத்தில் உள்ள அவனுடைய சிலைகளை முத்தமிடுகிறீர்கள், அந்த சிலைகள் அங்கே ரோமாபுரியில் உள்ளன. “பரிசுத்த பவுல்! ஆம், ஐயா!" 221. பரிசுத்த பவுல் அகிரிப்பாவுக்கு முன்பாக இருந்தபோது என்ன கூறினான் என்று பாருங்கள். அவன், “அவர்கள் மதபேதம் என்று அழைக்கிற விதத்தில்,” பரிசுத்த உருளை, “அந்த விதமாகவே நான் தேவனை ஆராதிக்கிறேன்” என்றான். ஆமென். 222. நான் அவரோடு கைகோர்த்திருக்க விரும்புகிறேன்; நான், "நான் அதையே விசுவாசிக்கிறேன், பவுல்! அல்லேலூயா! ஆம், ஐயா, அதே காரியம்! பவுல், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் இன்னமும் அதேக் காரியத்தையே விசுவாசிக்கிறேன்!" என்றே கூறுவேன். இன்னும் பரிசுத்த ஆவியை உடையவராய்; அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், எல்லாமே ஒரே விதமாகவே; இன்னமும் அப்படியே செயல்பட்டு கொண்டு, (எப்பொழுது?) அதே பரிசுத்த ஆவியானவர் மீட்பின் நாள் வரைக்கும் முத்திரையிடப்பட்டிருக்கிறார். 223. "இந்த சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்...” என்ன? "சுவிசேஷம்!” சுவிசேஷம் என்றால் என்ன? “வார்த்தையை மாத்திரம்” அல்ல. பவுல், "சுவிசேஷம் நம்மிடத்தில் வந்தது, வார்த்தையாக மாத்திரமல்ல, ஆனால் வல்லமையினாலும், பரிசுத்த ஆவியின் கிரியையினூடாகவும் சுவிசேஷம் உண்டானது" என்றான். 224 . பவுல், "நான் ஒருபோதும் வேதபள்ளிக் கல்வியோடும், பெரிய புரியாத சொற்றொடர்களை கூறுவதற்காக வரவில்லை, அகந்தையான வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டதும் வசீகரிக்கும் உதடுகளின் திறமையோடு உள்ள உங்களுடைய இரட்சிப்புக்காக அல்ல, சில தேவனுடைய துதிப் பாடல் அல்லது அப்போஸ்தலருடைய கோட்பாடுகள் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு காரியத்திற்காக அல்ல. நான் அந்தவிதமாக உங்களிடம் ஒருபோதும் வரவில்லை. ஆனால் நான் ஒரு காரியத்தை மாத்திரம் அறிந்தவராய் உங்களண்டை வருகிறேன், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமைக்கும், பரிசுத்த ஆவியின் கிரிகளுக்காகவுமே” என்றான். அல்லேலூயா! தேவன் நமக்கு இன்னும் எதனோடு ஒப்புரவாகாத சில பவுல்களைத் தருவாராக, ஆனால் அங்கு அது இல்லாமல்..? வேதாகமப் பள்ளியின் கையுறைகளை அணியாமல் அதை அங்கே வைக்கலாம். ஆமென். தேவனுடைய முத்திரை! ஆமென். 225. இப்பொழுது, நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது? ஏராளமானவற்றை, நாம் பெற்றுள்ளோம் அல்லவா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) அதைத்தான் நான் நினைத்தேன். அது சரிதான். நாளை சனிக்கிழமை, உங்களில் எவருமே வேலை செய்ய வேண்டாம். சரி. சரி. நினைவிருக்கட்டும், ஒரு-ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே. 226. ஜெபியுங்கள்! கவனியுங்கள், சகோதரனே, இது ஒரு உத்தமமான நேரம். இந்த நேரத்தில்தான் நாம் பட்டியலிட்டுக் கொண்டிருக்க வேண்டும். நான் ஒரு கோமாளியாக இங்கு நின்று கொண்டிருக்கவில்லை. நான் அப்படி செய்திருந்தால், நான் பீடத்தண்டை சென்று மனந்திரும்புவேன். உங்களில் சிலருக்கு நான் ஒரு கோமாளியைப் போல் நடந்து கொள்ளலாம், ஆனால் நான் அவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதவில்லை. நான் எப்பொழுதாவது, ஒரு சிறு முட்டாள்தனமாக நடந்துகொள்கிறேன்; என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. ஏதோ ஒன்று என் மேல் உண்டாகிறது, அது என்னை அவ்விதமாக செயல்படச் செய்கிறது, எனவே என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் என் இருதயத்தில், சகோதரனே, நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். நான் இந்த பிரசங்க பீடத்தினூடாக இருபது வருடங்களாக இதை பிரசங்கித்து வருகிறேன், உலகம் முழுவதும், தேவன் அதை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் உறுதிப்படுத்தினார். ஆமென். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” ஆம். 227. இப்பொழுது அவன், “அவர்களை ஆயுதங்களுடன் முன்னே வரும்படிச் செய்” என்றான். அவர்கள் அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். அவன் புறப்பட்டுச் சென்றபோது, தீத்து எருசலேமின் மதில்களைப் பிடித்தான், அவர்கள் நகரத்திற்குள் ஓடினர்; அவர்கள் ஒருவருடைய பிள்ளைகளை மற்றொருவர் வேகவைத்து, அதைப் புசிக்கும் வரைக்கும் அவர்களை அங்கே பட்டினி கிடந்தார்ர்கள். அவர்கள் மரத்தின் பட்டையையும், தரையிலிருந்து புற்களையும் தின்றார்கள். அதன்பின்னர் முடிவில் அவர்கள் கைவிட வேண்டியதாயிருந்தபோது தீத்து, அவன் எருசலேமுக்குள் சென்றபோது, அவன் அங்கிருந்த யாவற்றையும் முற்றிலுமாக அழித்துப்போட்டான், ஸ்திரீகளையும், கைக்குழந்தைகளையும், குழந்தைகளையும், குருமார்களையும் கொன்று, நகரத்தை எரித்தனர். 228. இயேசு, "ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடி போகும் ஒரு காலம் வரும்” என்றார். 229. மேலும், "நம்முடைய மகத்தான பெரிய தேவாலயத்தைப் பாருங்கள். சகோதரனே, நாங்கள் பாப்டிஸ் டாகவோ அல்லது மெத்தோடிஸ்டுகளாகவோ அல்லது பெந்தேகோஸ்து களாகவோ அல்லது வேறுயாராக இருந்தாலும் சரி” என்று கூறப்பட்டுள்ளது. அவர், “ஒரு கல்லின் மேல் ஒரு கல்லும் விடப்படாது” என்றார். 230. "கைகளினால் செய்யப்பட்ட வீடுகளில் தேவன் வாசம் செய்கிறதில்லை” என்பதைக் காண்பிக்கிறது. தேவன் மானிட இருதயங்களில் வாசம் செய்கிறார். "ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் செய்தீர்.” பரிசுத்த ஆவி ஒரு வீட்டில் வாசம் செய்கிறதில்லை. அது இருதயத்தில் வாசம் செய்கிறது. அதுதான் ஆலயம். “நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயங்கள் என்பதை நீங்கள் அறியீர்களா?" ஆமென். ஒரு ஆலயத்தைக் கட்டுங்கள், ஒரு சபையைக் கட்டுங்கள், உங்களுடைய விசுவாசம் முழுவதும் உங்களுடைய ஆலயத்தை அல்லது உங்களுடைய சபையை, ஒரு மரத்தாலான விக்கிரகத்தை சுற்றி, கட்டப்பட்டிருக்கிறது, மிருகத்தின் முத்திரையை தரித்துக்கொண்டு அதை அறியாமலிருக்கிறார்கள். அது உண்மை. பிரசங்கிமார்களே, உங்களுடைய ஸ்தாபனத்தை ஆதரிப்பதற்காக உங்களுடைய முழு நேரத்தையும் செலவழித்து, அவர்களால் செல்ல முடிந்த அளவு நேராக நரகத்திற்கு செல்கிறார்கள். 231. சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனிதர்கள் விழித்தெழுந்து பரிசுத்த ஆவியின் வல்லமையினால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, நாம் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர், இன்னும் எல்லோரையும் இயேசு கிறிஸ்துவின் சிலுவைக்கு அழைக்கட்டும். 232. இப்பொழுது, வயோதிக மேய்ப்பன் தேனை எடுத்துச் சென்று, அதை பாறையின் மேல் பூசினான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். சுகவீனமான ஆடுகள் நக்கும்போது, அது சுகமடைந்தது. 233. சகோதரனே, இன்றிரவு, ஒரு முழு பை நிறைய அதை இங்கே வைத்துள்ளேன். நான் அதை கிறிஸ்து இயேசு என்னும் அந்த கன்மலையின் மேல் வைப்பேன், சுகவீனமான ஆடுகள் அதை நக்கி சுகமடைய முடியும். அது உண்மை. சகோதரனே, கவனியுங்கள், இதை எந்த சபையின் மீதும் வைக்கப் போவதில்லை. அது எந்த சபையையும் சார்ந்ததல்ல. அது கிறிஸ்துவைச் சார்ந்தது. அது முற்றிலும் உண்மை. 234. சம்பிரதாயம்! "ஓ, ஆம், நாங்கள் கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டிருக்கிறோம்." நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை உங்களுடைய கிரியைகள் நிரூபிக்கின்றன. 235. இயேசு, "இந்த அடையாளங்கள்” என்றும், உறுதியாக, "விசுவாசிக்கிறவர்களை, உலகத்தின் முடிவுபரியந்தம் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பத்தை எடுத்தாலும், அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” அதைத்தான் இயேசு கூறினார். அதுவே அவருடைய உதடுகளிலிருந்து கீழே வெளிவந்த கடைசி வார்த்தைகளாகும். அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 236. விசுவாசித்து, தெய்வீக சுகமளித்தலை பிரசங்கிக்கும் ஜனங்கள், தேவனுடைய வல்லமைகளையும், உலகம் அவர்களை "பைத்தியக்காரர்கள்” என்று அழைக்கிறது. வேதம், “வீட்டு எஜமானை பெயல்செபூல் என்று அழைத்தார்களானால், அவர்களை அவருடைய சீஷர்கள் என்று அழைப்பது எவ்வளவு நிச்சயம்?” என்று கூறியுள்ளது. 237. அவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தப்பட்டபோது, அவர்கள் யாவரும் மரித்துப் போயினர். ஆனால் ஜோசிபஸ், “அந்த ஜனங்கள்.. .அந்த அந்த விதமான கிறிஸ்தவ ஜனங்கள், எருசலேமிலிருந்து யூதேயாவுக்குச் சென்று, இந்த எல்லா கோபத்திற்கும் தப்பித்துக் கொண்டனர்.” இப்பொழுது அது யூதன், யூதனின் முடிவு. 238. இப்பொழுது துரிதமாக, அடுத்த சில நிமிடங்களுக்கு, புறஜாதியாரை துரிதமாக முடித்துக் கொள்வோம். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம், அங்கு நாம் புறஜாதி யுகத்தை முடிப்போம். இது சரியா அல்லது இல்லையா என்று பாருங்கள். அங்கேதான் எசேக்கியேல் 9-ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசி அந்த காலத்தின் முடிவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். இப்பொழுது இங்கே பரிசுத்த ஆவியானவர் இந்தக் காலத்தின் முடிவை தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருக்கிறார். நான் கவனமாக வாசிக்கையில் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இவைகளுக்குப் பின்பு... 239. இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்தில், "இவைகளுக்குப் பின்பு நான் நான்கு தூதர்களைக் கண்டேன்...” அது 6-ம் அதிகாரத்தில், குதிரையின் மேல் சவாரி செய்தவர்கள், அவர்கள் எப்படி புறப்பட்டுச் சென்றார்கள் என்றும்; ஒரு மங்கின நிறமுள்ள குதிரை, ஒரு கருப்பு குதிரை, சிவப்பு குதிரை, அந்த சவாரி செய்பவர்கள் நீண்ட காலமாகவே நிலத்தில் சவாரி செய்து வந்தனர். --பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். 240. இப்பொழுது அவன் முதலில் கண்ட தரிசனத்தைக் கவனியுங்கள். "நான்கு மூலைகளிலும் நான்கு தூதர்கள் நிற்கக் கண்டேன்,” பூமியின் நான்கு இடங்களிலும், ஒரு தூதன், நான்கு திசைகளையும் பிடித்திருந்தான். தூதர்கள் "செய்தியாளர் களாயிருக்கிறார்கள்.” வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. காற்றுகளோ “யுத்தங்களும் சண்டைகளுமாயிருக்கின்றன.' அவர் நான்கு திசைகளையும் பற்றிக் கொண்டிருந்தார். .? இப்பொழுது, 2-ம் வசனத்தைக், கவனியுங்கள். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய (மு-த்-தி-ரை, முடிவுபெற்ற கிரியை, வேறு வார்த்தைகளில் கூறினால்)...வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையுநாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். 241. கவனியுங்கள், நான் தொடர்ந்து வாசிப்பேன். முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர் 242. "யூதா கோத்திரத்தில் பன்னிரண்டு...” தொடர்ந்து, “பென்யமீன்,” “காத்,” "ரூபன்,” “செபுலோன்,” 8-ம் வசனத்தின் முடிவில் பன்னிரண்டு கோத்திரங்கள் வரைக்கும் விளக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டை பன்னிரண்டால் பெருக்கினால் என்ன? (சபையோர், "நூற்று நாற்பத்து நான்கு” என்கின்றனர்.-ஆசி.) நூற்று நாற்பத்து நான்கு. "லட்சத்து நாற்பத்து நாலாயிரம்” யூதர்கள் யாவரும். இப்பொழுது கவனியுங்கள். இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... 243. அவர்கள் எங்கிருந்து வந்தனர்? நீங்கள் பாருங்கள், அந்த யூதர்கள் கடைசியில் எங்கேயிருந்தனர் என்பதை நாம் காண்கிறோம்; தேவதூதர்கள் புறப்பட்டுச் செல்லும்படிக்கு கொடுக்கப்பட்டபோது, காணப்பட்டதாகவும், "பிடிக்கப்பட்டதாகவும்” கூறப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் எல்லா கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், தேசங்களிலும் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் காட்சியில் தோன்றினர். …ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும்,... முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். 244. மணவாட்டி, புறஜாதி மணவாட்டி இங்கே முத்திரையிடப்பட்டிருந்தனர். கவனியுங்கள். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: என்றார்கள்...(கவனியுங்கள், இது ஒரு பரிசுத்த ஆவியின் கூட்டம் போல் தெரியவில்லையா!) ஆ-...ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். 245. இது ஏதோ ஒருவிதமான சடங்கு முறைப்படியான இளங்கலை ஆராதனையாக, எனக்குத் தென்படவில்லை. அது ஒரு பண்டைய நாகரீகத்தைப் போன்றும், பரிசுத்த ஆவி பொழிவது போன்றும் எனக்கு தொனிக்கிறது. அந்த ஜனங்கள் எங்கோ இருந்திருந்தனர்; ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பதை அவர்கள் கண்டபோது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். 246 இப்பொழுது நீங்கள் எல்லா யூதர்களையும் அறிந்திருக்கிறீர்கள், ஆனால் “சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலும்” இவர்கள் எங்கிருந்து தோன்றினர்? கவனியுங்கள். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (யோவான், "எனக்குத் தெரியாது” என்றான்.) அப்பொழுது அவன்: 247. அவர்கள்தான் அதைப் பெற்றிருந்தனர் என்று, நான் யூகிக்கிறேன். சரி. இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; ("பரிசுத்த உருளை,” என்று அழைக்கப்பட்டு, பரிகாசம் பண்ணப்பட்டு, துன்பப்படுத்தப்பட்டு, பரிகசிக்கப் பட்டனர்) மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். (கவனியுங்கள்!) ...இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து,......... 248 மனைவி எங்கே தங்குகிறாள்? இராணி எங்கே தங்கியிருக்கிறாள்? அதுதான் மணவாட்டி, புறஜாதி மணவாட்டி. இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; 249.என்னுடைய மனைவி இரவும் பகலும் வீட்டில் எனக்கு சேவை செய்கிறாள். பார்த்தீர்களா? அது இயேசுவின் மணவாட்டி; அதுதான் புறஜாதி மணவாட்டி. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனிப் பசியடைவதுமில்லை,......... 250. அல்லேலூயா! வேலை நாட்கள் முடிந்துவிட்டன. பாருங்கள், நாம் அநேக ஆகாரங்களைத் தவறவிட்டோம், ஆனால் அங்கே ஒன்றையும் நாம் தவறவிடமாட்டோம். ஆமென். 251. என்னுடைய ஏழையான, சிறிய, வயோதிக தாயார் இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவள் மேசையிலிருந்து எழும்பினதை நான் கண்டிருக்கிறேன். நாங்கள் காபியையும், கொஞ்சம் பழைய ரொட்டியையும் சாப்பிட்டோம். அவள் அதை ஊற்றி, சிறிது சர்க்கரையைப் போடுவாள். எல்லோரும் புசிப்பதற்கு போதுமான ஆகாரம் இல்லாதிருந்தது; பிள்ளைகள் அழுது, எழுந்து நடந்து செல்வார்கள். ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் பரலோகத்தில் அங்கே செய்யமாட்டோம்! என்னுடைய வயோதிகத் தகப்பனாரோ அப்பால் உள்ள தெருவில், என்னுடைய கரங்களின் மீது படுத்துக் கொண்டு, பசியோடு மரித்தார். 252. ஆனால் நாம் அதை மீண்டும் ஒருபோதும் செய்யமாட்டோம். அல்லேலூயா! இல்லை ஐயா. இனி பசியே இருக்காது. இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது... சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். 253. பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர்கள் சற்று அழுது புலம்ப வேண்டியிருக்கலாம். ஆனால் தேவன் உங்களுடைய கண்களிலிருந்து எல்லா கண்ணீரையும் துடைப்பார். 254. கவனியுங்கள், "நான்கு மூலைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, நான்கு திசைகளையும் பிடித்திருப்பதை” அவன் கண்டான். இப்பொழுது சீக்கிரம். என்னுடைய நேரம் முடிந்துவிட்டது, ஆனால் முடிக்கும் முன்பு, இந்த குறிப்பை நான் உங்களுக்குக் கூறட்டும். பாருங்கள், அவன் நான்கு தூதர்களையும் கண்டான். அவன் யூத சபையின் முடிவினைக் கண்டான், எப்படி அவன் அவர்கள் வருவதைக் கண்டான், அதேவிதமாகவே, அந்த இராணுவம் தன்னுடைய படுகொலை ஆயுதங்களோடு வந்து கொண்டிருந்தது. 255. இப்பொழுது கவனியுங்கள். பரிசுத்த ஆவி சபையானது தங்களுடைய நெற்றியில் எந்தவிதமான ஒரு முத்திரையைப் பெற்றுக் கொண்டது? அது ஒரு ஆவிக்குரிய அடையாளமாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் அவர்களை அடையாள மிட்டார். அது சரியா? அவர்களுடைய தலையில் அவர் பச்சை குத்தவில்லையா? இல்லை. 256. அவர்கள் ஏதோ ஒரு மத விரோத தேசத்தால் கண்டிக்கப் படவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த ஜனங்களாலே ஆக்கினைக்குட்படுத்தப்பட்டனர். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையானது கத்தோலிக்கர்களாலும், பிராடெஸ்டெண்டு களாலும் கண்டனம் செய்யப்படும், ஏனென்றால் அவர்கள் ஒன்றாக இணைவார்கள். அவர்கள் ஏற்கனவே தாயும், மகளும் ஒன்றாக இணைந்துள்ளனர். 257. ஆனால் இவர்கள், இங்கே, இருக்கவில்லை. அப்பொழுது அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அவர், “அவர்களுடைய நெற்றியில் ஒரு முத்திரையைப் போடுங்கள்” என்றார். அது என்ன விதமான ஒரு அடையாளமாயிருந்தது? நான் உங்களுக்கு அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தை வாசிப்பேன். "அவர்கள் எல்லோரும் ஒருமனதோடு ஒரே இடத்தில் இருந்தனர். அப்பொழுது சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாயிற்று, வானத்திலிருந்து தூதன் வருகிறார்.” நீங்களோ, “தூதன் ஒரு சத்தமாயிருந்தாரோ?” என்று கேட்கலாம். 258. அது என்னவாயிருந்தது, தாவீதுக்கு முன்பாக என்ன சென்றது, அவன் இலைகளின் இரைச்சலை, முசுக்கட்டை இலைகளின் இரைச்சலை கேட்டபோது, அந்த இரவோடு இரவாக அவன் புறப்பட்டுச் செல்ல பயந்திருக்க செய்தது என்ன? “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வானத்திலிருந்து ஒரு முழக்கத்தைக் கேட்டான்,” தேவன் அவர்களுக்கு முன்பாகச் சென்றார். 259. “சடிதியிலே பரிசுத்த ஆவியும் வல்லமையும் அவர்களுக்குத் தரிசனமானது.” அவர்கள் வீதிகளினூடாக வெளியே சென்று, துள்ளிக் குதித்து, அந்நிய பாஷைகளில் பேசி, பரியாச உதடுகளினால், சத்தமிட்டு, ஒரு குடிகாரனைப் போல் நடந்துகொண்டு, ஒவ்வொருவரும் களிகூர்ந்து, தேவனாகிய கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தனர். அது சரிதானே? 260. அந்தவிதமாகத்தான் தேவன் தம்முடைய வல்லமையை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு அனுப்புகிறார். அது அங்கே அசைவாடினபோது, செய்தியானது புறப்பட்டு சென்றது! அல்லேலூயா! அவர்கள் சத்தமிட்டு, கூச்சலிட்டு, அந்நிய பாஷைகளில் பேசி, அங்கே சென்றனர். அதுவே தேவன் ஜனங்களின் மேல் வைத்த அடையாளமாயிருந்தது. அது சரியா? தேவன் அந்த அடையாளத்தைப் போட்டார், அந்தவிதமான ஒரு அடையாளத்தையே இன்றைக்கு தம்முடைய ஜனங்களின் மேல் தேவன் போடப்போகிறார். அப்பொழுது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் அவர்கள் மேல் சென்ற அதே தேவனுடைய முத்திரையே தேவனுடைய முத்திரையாயிருந்தது. 261. சபையே, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அந்த நாளில் தேவனுடைய முத்திரை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று வேதம் கூறுகிறது. ஜனங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்த, அவர்கள் மேல் இருந்த முத்திரை பரிசுத்த ஆவியின் அபிஷேகமாயிருந்தது. அது சரியா? புதிய ஏற்பாடு எபேசியர் 4:30-ல், பரிசுத்த ஆவி தேவனுடைய முத்திரை என்று கூறியுள்ளது, இந்த கடைசி நாட்களில் உள்ள ஜனங்களுக்காக, உங்களுடைய நித்திய இலக்கை அடைவீர்கள். அது சரியா? அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் சரியாக இருந்தார். 262. இப்பொழுது, நமக்கு மெதோடிஸ்டு காலம் இருந்தது, நமக்கு பாப்டிஸ்டு காலம் இருந்தது, நாம் நீதிமானாக்கப்படுதலை உடையவர்களாயிருக்கிறோம், நமக்கு பரிசுத்தமாக்கப்படுதல் இருந்தது. நாம் இந்த காரியங்களையெல்லாம் உடையவர்களாயிருந்தோம். 263 ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் முதன் முதலாக அமெரிக்காவில் கற்றுக் கொள்ளப்பட்டது. அது சரியா? ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனங்கள் பெற்றுக்கொள்ளத் துவங்கினபோது... 264. இப்பொழுது, அவர்கள் அதை கிருபையின் இரண்டாம் திட்டவட்டமான கிரியை, பரிசுத்தமாக்கப்படுதல் என்று அழைக்கின்றனர். “பரிசுத்தமாக்கப்படுதல்” என்பது சரியே. 265. முதலில் ஒரு பாத்திரம் எடுக்கப்பட வேண்டும். அது முழுவதும் சேற்றினால் நிறைந்துள்ளது. அது நீதிமான்களாக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அந்த மனிதன் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். 266. அடுத்தக் காரியம், அது சுத்தம் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதல் என்ற வார்த்தை, “சுத்திகரிக்கப்பட்டு, சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்படுதல்” என்று பொருள்படுகிறது. ஆனால் “சேவைக்காக ஒதுக்கி வைத்தல்” என்பது நீங்கள் சேவையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. 267. அப்பொழுது இயேசு, “நீங்கள் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாயிருக்கும்போது, நீங்கள் பாக்கிய வான்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தியடைவீர்கள்” என்றார். பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தமாக்கப்பட்ட, உண்மையான, உண்மையான, பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசியின் மேல் வந்தார். அந்தப் பரிசுத்தமாக்கப்பட்ட பாண்டம் சரியானவுடனே, அடையாளங்களும், அற்புதங்களும் தங்களை வெளிப்படுத்தத் துவங்கின, பரிசுத்த ஆவியானவர் அதற்குள் நுழைந்தார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 268. நீங்கள் அந்த புட்டியிலிருந்து எண்ணெயை வெளியே கொண்டு வர முடியாது, அங்கே எண்ணெய் இல்லாவிடில், அது எவ்வளவுதான் சுத்தமாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அந்நிய பாஷைகளில் பேசுவதையும், தெய்வீக சுகமளித் தலையும், தேவனுடைய வல்லமைகளையும், ஒன்றுமே இல்லாத ஏதோ ஒன்றிலிருந்து நீங்கள் வெளியே கொண்டு வர முடியாது. அப்பொழுது, பரிசுத்த ஆவி கொண்டுவரப்பட வேண்டியதாயிருந்தது. 269. பாருங்கள், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. நாம் பின்னோக்கி சிந்திப்போம். நாம் சுற்றும் முற்றும் பார்க்கிறோம்... கூர்ந்து கவனியுங்கள். முதலாம் உலகப் போரில் ஒரு பெரிய தலைவன் புறப்பட்டுச் சென்றான்; உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக ஒரு உலக யுத்தம். அவன் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்? நேராக ஜெர்மனிக்குள். என்ன நடந்தது? விநோதமாக, அது எப்படி நின்றது என்பதை இந்நாள் வரையில் யாரும் அறியாதிருந்தனர். யாருக்குமே தெரியாது. உலகப் போரின் வீழ்ச்சியைக் குறித்துப் படியுங்கள். ஒவ்வொரு தொகுதியையும் நான் வாசித்திருக்கிறேன். ஒரு நபரும் இல்லை...அவர்கள் அறிந்த ஒரே காரியம் என்னவென்றால், “சரணடையுங்கள்!” என்ற ஒரு ஒழுங்கு உண்டானது. அதை யார் கொடுத்தது என்று யாருக்கும் தெரியாது. ஏன்? 270. ஓ தேவனே! நீங்கள் என்னை “பரிசுத்த உருளையர்” என்று அழைக்கப் போகிறீர்கள், எனவே நான் என்னுடைய உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படலாம். பாருங்கள்! பரிசுத்த ஆவியானவர் இங்கே மேடையின் மேல் இருந்து வெளிப்படுத்துவதற்காக நான் எவ்வளவு நன்றியுள்ள வனாயிருக்கிறேன். 271. கவனியுங்கள். கவனியுங்கள். அவைகள் புறப்பட்டுச் சென்றது, ஒவ்வொரு காற்றும் உலகத்தின் மேல் வந்து, நவீன ஆயுதங்கள், ஒரு உலகப் போரில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் முற்றிலுமாக அழித்துப் போடுகின்றன. ஆனால் திடீரென்று அது நின்றுவிட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரம், “நான்கு தூதர்கள் தங்களுடைய சங்கார ஆயுதங்களோடு வருகிறதை நான் கண்டேன். அப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு மனிதன் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை கோலையுடையவனாய் வந்து, 'நாலு திசைகளையும் பிடித்திருக்கக்’” கூறினான். 272. "அதைப் பிடித்துக் கொள்” ஏன்? யூதர்கள் இன்னும் சரியான இடத்தில் இல்லை. மகிமை! யூதர்கள் சரியான இடத்தில் இல்லை, அதுதான் தேவனுடைய நாள்காட்டி. அக்கரையில் அவர்கள் எங்கே நின்று கொண்டிருப்பார்கள் என்று அவர் அவர்களிடம் கூறினார், அவர், “அத்திமரத்தில் இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” என்றார். யூதர்கள் பாலஸ்தீனாவிற்கு திரும்பி வருவதை நீங்கள் காணும்போது, நேரம் சமீபமாயுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். "சகலமும் நிறைவேறுமளவும் இந்தச் சந்ததி ஒழிந்து போகாது.” சகோதரனே, கடந்த ஏழு ஆண்டுகளில், யூதக் கொடியானது முதன்முறையாக பறக்கவிடப்பட்டுள்ளது, இரண்டாயிரம் வருடங்களில் எருசலேமின் மேல், ஆம், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள். ஆமென். யூதர்கள் அது செய்யப்படக் கூடிய இடத்தில் சரியாக இருக்கவில்லை. ஆனால் அவர், “பிடித்துக் கொள்! பிடித்துக் கொள்!” என்றார். 273. ஏன், ஏன் “பிடித்துக் கொள்வாயா”? கவனியுங்கள், வெஸ்லியின் காலத்திற்கும் பெந்தெகொஸ்தேயின் காலத்திற்கும் இடையில், இன்னும் சில புறஜாதிகள் உள்ளே வர வேண்டியதாயிருந்தது. பெந்தெகொஸ்தேயினர் லவோதிக்கேயா சபைக் காலத்திற்குள் செல்வதற்கு முன்பு, சபைக்கு முன்பாக "திறந்த வாசல்" வைக்கப்பட்டது; "விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் பானம் பண்ணும்படிக்கு" திறந்த வாசல். திறந்த வாசல், வைக்கப் பட்டது. ஓ, என்னே! அவர், “அதைப் பற்றிக் கொள்ளுங்கள்” என்றார். ஏன்? 274. இயேசு, “ஒரு மனிதன் புறப்பட்டுச் சென்று வேலை செய்தான். வேறொரு மணி நேரத்தில், மற்றொரு மனிதன் வெளியே சென்று, அவன் வேலை செய்தான். மற்றொரு மனிதன் வெளியே சென்று வேலை செய்தான். பதினோராம் மணி நேரத்தில் ஒரு மனிதன் புறப்பட்டுச் சென்றான். பதினொராம் மணி நேரத்தில் அவர் நின்றபோது, அவர் ஒவ்வொருவருக்கும், பதினோராம் மணி நேரத்தில் ஒரே பங்கைக் கொடுத்தார்” என்றார். ஏன் என்று அவர்கள் வியந்தனர். “அவன் ஏன் பதினோராம் மணி வேளையில் ஒவ்வொருவரும் உள்ளே வந்து பெற்ற கூலியைப் பெற்றான்?” 275. மார்டின் லூத்தர் கிரியை செய்து, லூத்தரின் யுகத்தின் கீழ் நடந்து, கிருபையில் மரித்தார்கள்!...?.சத்தமிட்டுக் கொண்டிருந்த மெத்தோடிஸ்டுகள், வெஸ்லியின் காலத்தில் மரித்து, கிருபையில் மரித்தார்கள். நாம் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அங்கே பின்னால் அல்ல. இங்கே! தாயார் வழக்கமாக ஒரு மாட்டு வண்டியில் செல்வார், நாங்கள் வி-8 மாதிரி போர்ட், ஏறக்குறைய ஜெட் விமானத்தில் செல்வோம். அது சரிதான். நாம் முற்றிலும் வித்தியாசமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஒரு வித்தியாசமான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் தேவனுடைய வல்லமை திரும்ப அளிக்கப்படும் நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆதியில் அவர்கள் செய்தது போன்றே தேவனுடைய வல்லமையை இங்கே காணலாம். நாம் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெஸ்லி, மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் எல்லோரையும் திரும்பிப் பார்க்காதீர்கள். வேதத்தின் விசுவாசத்தின் ஆக்கியோனும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவை இங்கே நோக்கிப் பாருங்கள். அல்லேலூயா! 276. இப்பொழுது அவரைக் கவனியுங்கள், “அதைப் பிடித்திருங்கள்” என்றார், எப்பொழுது வரையில் (என்ன?) பதினோராம் மணி வேளையில் உள்ள ஜனங்கள் புறஜாதியாரின் கடைசி அழைப்பாக உள்ளே வர முடியும் வரை. அம்மா அங்கே பணிபுரிந்தாள்; தகப்பனாரும் மற்றவர்களும் இங்கு பணிபுரிந்தனர்; அங்கே பாட்டி பணிபுரிந்தாள். இது நம்முடைய காலம், பதினோராம் மணி நேரம். அந்த உலகப் போர் வருடத்தில் பதினோராம் மாதம், அந்த மாதத்தின் பதினோராம் தேதி, அந்த நாளின் பதினோராம் மணி நேரத்தில் நின்றது, அந்த மணி நேரத்தில் பதினோராம் நிமிடத்தில்; அதாவது பதினோராம் மணி வேளையின் மக்கள் உள்ளே வரும்படியாக, (என்ன?) ஆதியிலே அவர்கள் இங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டனர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும், உயிர்த்தெழுதலையும், அதே அடையாளங்களையும், அற்புதங்களையும் திரும்பக் கொண்டு வருவதற்காகவே. 277. அது என்ன? யுத்தங்கள் இங்கே போராடிக் கொண்டிருக்கின்றன, அங்கே போராடிக் கொண்டிருக்கின்றன, இங்கே போராடிக் கொண்டிருக்கின்றன, அங்கே போராடிக் கொண்டிருக்கின்றன, முயற்சித்துக் கொண்டிருக்கின்றன... அணுகுண்டுகள் மற்றும் மற்றவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. யூதர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையில் அவர்களால் அதைச் செய்ய முடியாது. தூதன், “நாங்கள் ஊழியக்காரர்களை முத்திரையிடும் வரைக்கும் இதைப் பிடித்துக்கொள்” என்றான். மணவாட்டி அல்ல. புறஜாதிகள் ஒருபோதும் ஒரு ஊழியக்காரன் அல்ல; நாம் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். அது ஊழியக் காரர்கள், யூதர்கள். ஆபிரகாம் தேவனுடைய ஊழியக்காரனா யிருந்தான். அல்லேலூயா! இப்பொழுது, இலட்சக்கணக்கான யூதர்கள். அவர்களை பாலஸ்தீனாவுக்கு துரத்த தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார். தேவன் ஹிட்லரின் இருதயத்தையும், முசோலினியின் இருதயத்தையும், ஸ்டாலினின் இருதயத்தையும் கடினப்படுத்தினார். அவன் பலவந்தமாக பாலஸ்தீனாவிற்குள் விரட்டிக் கொண்டிருக் கிறான், அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவனாய், தேவனுடைய கரங்களில் சரியாக கிரியை செய்து கொண்டிருக்கிறான். 278. அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் அங்கே அப்பால் நிற்பார்கள். இந்நாட்களில் ஒன்றில், தெய்வீக, பரிசுத்தமான, அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசி அங்கே அடையாளங்களோடும், அற்புதங்களோடும் செல்வார். அந்த யூதர்கள், “அதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுவார்கள். ஆம், ஐயா. தேவன் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களுக்கு அபிஷேகமளிப்பார். 279. எடுத்துக் கொள்ளப்படுதல் வரும்; புறஜாதி காலம் முடிவடையும். அணுகுண்டு வெடித்து, உலகத்தையே ஆட்கொள்ளும். புறஜாதி சபையானது தேவனுடைய பிரசன்னத்தில் அங்கே நிற்கும்படி எடுத்துக் கொள்ளப்படும். "மகா உபத்திரவத்திலிருந்து வெளியே வந்த இவர்கள் யார்? ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தனர். அவர்கள் தேவனுக்கு முன்பாக கறை திரையற்றவர்களாயிருக்கிறார்கள்.” ஆமென். 280. மிருகத்தின் முத்திரை, சங்கம்; சபைகள், கத்தோலிக்கம், யாவும் ஒன்றாக பிணைக்கப்பட்டு, குழப்பத்திற்குள் செல்கின்றன. மீதியானவர்கள், பரிசுத்த ஆவியின் மணவாட்டி. 281. இன்றைக்கு அந்நிய பாஷைகளில் பேசி சிரிக்கிற ஜனங்களையும், தெய்வீக சுகமளித்தலைக் குறித்து சிரிக்கிறவர்களையும், தீர்க்கதரிசனத்தைக் குறித்து ஆவியின் நகைத்துக்கொண்டிருக்கிறவர்களையும், வெளிப்படுதலைப் பார்த்து நகைக்கின்றவர்களையும்; இங்கே அந்த யூதர்களை ஆதிக்கம் செய்த அதே ஆவி, பரிசுத்த ஆவியை அங்கே தூஷித்து, தெய்வீக நியாயத்தீர்ப்பின் கீழ் மரித்தனர். இந்த ஐக்கிய நாடுகள் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்டனம் செய்து, கேலி செய்து, புறக்கணித்துவிட்டு, நம்மை "பரிசுத்த உருளைகள்” என்றும் மற்றும் ஒவ்வொரு காரியத்தினாலும் அழைக்கிறார்கள். ஆனால் தேவன் தம்முடைய தெய்வீக நியாயத்தீர்ப்பை ஊற்றும் வேளையானது இங்குள்ளது. ஆமென். 282. ஆயத்தமாகுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி.]...?......... இன்றைக்கு அங்கே உள்ள ஒரே பாதுகாப்பான இடம் கிறிஸ்து இயேசுவில் மாத்திரமே உள்ளது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உள்ளே இருக்கவில்லை யென்றால், நீங்கள் உள்ளே வரும் வரை நெருக்கி முன்னேறுங்கள். “கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களை தேவன் இரண்டாம் வருகையில் அவரோடு கொண்டு வருவார்.” 283. பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகிய தேவனுடைய முத்திரை இல்லாமல், விசுவாச துரோகத்தின் சங்கம் மிருகத்தின் முத்திரையாயுள்ளது. அது கர்த்தர் உரைக்கிறதாவது. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஆனால் இந்த மத போதகர்கள் அதை கம்யூனிசத்தின் மீது வைக்க முயற்சிக்கிறார்கள், அது அவர்களுக்கு மத்தியில் சரியாக கிரியை செய்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. அவர், "குருடர்களின் பார்வையற்ற தலைவர்களாய் இருப்பார்கள்” என்றார். அவர், “கண்கள் இருந்தும் காண முடியாது” என்றார். மேலும், “நீங்கள், உங்கள் பாரம்பரியங்களில், மனுஷருடைய உபதேசத்தைப் பேசி, மனுஷருடைய கற்பனைகளை உண்டாக்கி, தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகிறீர்கள்.” 284. கத்தோலிக்கர் தங்களுடைய மத போதனையை அமைப்பதற்காக நீங்கள் அதைப் பார்த்து நகைப்பீர்கள், உங்களுடைய மனிதர் ஏதோ ஒரு மாநாட்டிற்கு அல்லது ஏதோ ஒன்றிற்கு இங்கே சென்று, அவர்கள் தெய்வீக சுகமளித்தலைப், அல்லது ஆவியின் அபிஷேகம் மற்றும் இந்த காரியங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்று தீர்மானிக்கிறீர்கள். அவர்கள் அதைக் கண்டித்து, அதைப் புறக்கணிக்கின்றனர். நீங்கள் கத்தோலிக்கரைப் பார்த்து சிரிக்கிறீர்கள். கத்தோலிக்கரைப் பார்த்து சிரிக்க உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. காரணம், அவள் ஒரு "வேசியாக” இருந்திருந்தால், அதே சங்கத்தில் நீங்கள் ஒரு “வேசி” என்று வேதம் கூறியுள்ளது. 285. “என் ஜனங்களே, அதன் நடுவிலிருந்து வெளியே வாருங்கள்! நீங்கள் பிரிந்து போங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்” என்று தேவன் கூறுகிறார். அது உண்மை. 286. ஓ, ஏன் இந்த பிரான்ஹாம் கூடாரத்தினால் நம்முடைய கறைதிரைகளிலிருந்து வெளியே வர முடியவில்லை? இங்குள்ள ஜனங்களாகிய நீங்கள் இந்த சுவிசேஷத்தை விசுவாசிக்கிறீர்களா என்பதை நான் அறிய விரும்புகிறேன். அது பிரசங்கிக்கப்பட்டு, நீங்கள் அது, அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், உறுதிப்படுத்தப்படுவதை கண்டிருக் கிறீர்கள். கர்த்தர் உரைத்த ஒவ்வொரு காரியமும் நிறைவேறிற்று. அப்படியானால், உங்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிருக் கிறது என்றும், சண்டை சச்சரவு உண்டாயிருக்கிறது என்றும் நான் கேள்விப்படும்போது, இங்குள்ள காரியம் என்ன? உங்களுக்குள்ள காரியம் என்ன என்றும், உங்களுடைய இருதயத்தில் என்ன உள்ளது என்றும், நாளை இரவு இந்த மேடைப் பிரசங்க பீடத்தின் மேல் வைக்க வேண்டும். 287. இந்த சபையானது ஏன் தேவனுடைய வல்லமை யினால் கொண்டு செல்லப்பட முடியாது என்பதையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், அடையாளங்களோடும், அற்புதங்களோடும் நான் காண விரும்புகிறேன். என்ன விஷயம்? உங்களுடைய போதகர் அதை விசுவாசிக்கிறார். நீங்கள் அதை விசுவாசியுங்கள். எனவே, இங்கே என்ன தவறு உள்ளது? ஏதோ தவறு உள்ளது. இது உலகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். இது தேவனுடைய வல்லமைகள், அழுகையும், புலம்பலும், தேவனுக்காக தேடுதலும், இரவும் பகலும், அவ்வாறு இருக்க வேண்டிய ஒரு இடமாய் இருக்க வேண்டும். நம்மால் ஏன் அதைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை? 288. இயேசு, "நான் விரும்புகிறேன், ஆனால் நீங்கள் செய்யமாட்டீர்கள்” என்றார். "நீங்கள் செய்யமாட்டீர்கள். என்னிடத்திலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். 289. “நீங்கள் கூறுவது எனக்கு தெரியும் என்றும்," அவர், “நீங்கள் 'ஐசுவரியவான்கள், ஒரு குறைவுமற்றவர்கள்,' என்று சபைகளிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். மேலும், "நீ, 'நான் ஐசுவரியவானென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லை. நாங்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருக்கிறோம்' என்று கூறுகிறாய். நீ நிர்பாக்கியமுள்ளவனும், தரித்திரனும், பரிதபிக்கப்படத் தக்கவனுமாயும், குருடனாயும், நிர்வாணியாயும் இருக்கிறதை அறியாமலிருக்கிறாய்" என்றார். ஒரு மனிதன் அந்த பிரச்சனையிலிருந்து அதை அறிந்திருந்தால், அவன் தனக்குத்தானே உதவி செய்து கொள்வான். ஆனால், நீங்கள் அந்தவிதமாக இருக்கும்போது, "அதை அறியாமலிருந்தால்!” இந்த நாளிலுள்ள சபைகள் அந்தவிதமாகவே இருக்கும் என்று கிறிஸ்து கூறினார், ஆனால் அதை அறியமாட்டார்கள். 290. என்னுடைய அருமையான, அருமையான சகோதரனே, உங்களுடைய ஆவிக்குரிய சரீரத்தைக் விழித்தெழுப்புங்கள். உங்களுடைய ஆத்துமாவை, அது இருந்தவிதமாக, ஜெபத்தினால், விழித்தெழும்பும்படி செய்து, “கர்த்தராகிய இயேசுவே, என்னை பரிசோதித்துப் பாரும். இன்றிரவு நான் உறங்கச் செல்வதற்கு முன்பு, என்னோடுள்ள காரியம் என்னவென்பதை நான் கண்டறிவதற்கான ஒரு பட்டியலை எடுத்துப் பார்க்கட்டும். நான் அநேக ஆண்டுகளாக அறிக்கையிட்டு வருகிறேன், இயேசு கூறின இந்தக் காரியங்களை நான் காணவில்லை. அவர் என்னோடு இருப்பார் என்றும், இந்தக் காரியங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும், நான் அதைக் காணவில்லை. கர்த்தராகிய இயேசுவே, காரியம் என்ன?” 291. நேர்மையாக இருங்கள். உண்மையாக இருங்கள். கீழே வந்து ஒரு சகோதரனுடன் நேருக்கு நேர் பேசுவது போல அவரிடம் பேசுங்கள். அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். அவர் உங்களுக்குச் சொல்லுவார். உங்களுடைய ஆத்துமாவை இரண்டாக கிழித்து, அதை அங்கேயே கிடத்தவும். “கர்த்தராகிய இயேசுவே, அது எனக்கு என்னுடைய குடும்பத்தை கிரயமாயிருந்தாலும், அது என்னுடைய ஜீவனையே விலைக்கு வாங்கினாலும், அது என்னுடைய வேலையை விலைக்கு வாங்கினாலும், அது என்னுடைய அங்கத்தினத்தை விலைக்கு வாங்கினாலும், நகரத்தில் அது என்னுடைய கௌரவத்தை வீணாக்கினாலும், நான் கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியைத் தெரிந்து கொள்வேன்” என்று கூறுங்கள். 292. இப்பொழுது நினைவிருக்கட்டும், இயேசு, "வாசல் இடுக்கமாய் உள்ளது, வழி நெருக்கமாயிருக்கிறது, அதை கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது” என்றார். 54-ம் ஆண்டில் பத்து இலட்சம் பேர்கள், “அழிவுக்கு வழிநடத்துகிற வாசல் அகலமாயிருக்கிறது. அதில் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.” அது உண்மை. "என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். தகப்பனையும், தாயையும், சகோதரியையும், சகோதரனையும் அல்லது என்னைவிட மேலான எந்தக் காரியத்திலும் அன்பு கூருகிறவன் என்னுடையவன் என்று அழைக்கப்பட பாத்திரன் அல்ல. அவன் தன்னுடைய கரத்தை ஒரு கலப்பையின் மேல் வைத்து, முன்னோக்கிச் சென்று, பின்னோக்கிப் பார்க்கக் கூட நேரிடும், அது தகுதியல்ல.” சகோதரனே! 293. இந்நாட்களில் ஒன்றில் கடைசி பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற சுவிசேஷப் பிரசங்கம் பிரசங்கிக்கப்படும். இந்நாட்களில் ஒன்றில் கடைசி துப்பாக்கி சுடும். இந்நாட்களில் ஒன்றில், கடைசிப் பாடல் பாடப்படும். இந்நாட்களில் ஒன்றில், கடைசி ஜெபம் ஜெபிக்கப்படும். இந்நாட்களில் ஒன்றில், கூடாரத்தின் கதவுகள் கடைசி முறையாக மூடப்படும், வேதாகமம் பிரசங்க பீடத்தில் மூடப்படும். இன்றிரவு நீங்கள் கேள்விப்பட்டவைகளுக்காக நீங்கள் தேவனுடைய சமூகத்தில் நின்று கணக்கொப்புவிக்க வேண்டும். அப்பொழுது என்ன? அப்பொழுது என்ன? மகத்தான புத்தகம் திறக்கப்படும்போது, அப்பொழுது என்னவாகும்? இன்றிரவு பதிவு செய்யப்படும்போது, அப்பொழுது என்னவாகும்? ஓ, அந்தப் பாடல் கூறுகிறபடி: அப்பொழுது என்ன? மகத்தான புத்தகம் திறக்கப்படும்போது, அப்பொழுது என்னவாகும்? இன்றைக்கு இரட்சகரைப் புறக்கணித்தவர்கள், ஒரு காரணத்தைக் கூறும்படி கேட்கப்படுவீர்கள். அப்படியானால் என்ன? 294 .உங்களுடைய வேலை உங்களுடைய வழியில் நின்றது. உங்களுடைய பெற்றோர் உங்களுடைய வழியில் தடையாக நின்றனர். உங்களுடைய ஆண் சிநேகிதன் உங்களுடைய வழியில் நின்றான். உங்களுடைய பெண் சிநேகிதி அதற்கு தடையாக நின்றாள். உங்களுடைய சபை அதற்கு தடையாக நின்றது. அப்பொழுது என்ன? அப்பொழுது என்ன? மகத்தான புத்தகம் திறக்கப்படும்போது, அப்பொழுது என்னவாகும்? இன்றிரவு இந்த செய்தியை புறக்கணிக்கிறவர்கள், நீங்கள் ஒரு காரணத்தைக் கூறும்படி கேட்கப்பட போகிறீர்கள்—அப்படியானால் என்ன? 295. அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? மிருகத்தின் முத்திரை என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய முத்திரை என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். அது உங்களைப் பொறுத்தது. நாங்கள் நிற்கையில் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 296. தயவுள்ள பரலோகப் பிதாவே, உம்முடைய இரக்கங்களும், ஆசீர்வாதங்களும் ஜனங்களின் மேல் இருப்பதாக. உம்முடைய ஆவி அசைவாடட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இந்த ஜனங்களின் மேல் இறங்கி வந்து, கர்த்தாவே, அவர்களுக்கு ஆவியின் அபிஷேகத்தை அளிப்பதாக. இங்குள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும் இன்றிரவு பரிசுத்த ஆவியினால் கொண்டு செல்லப்பட்டு, அதாவது அவர்கள், "தேவனே, என்னிடம் உள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும். எனக்குள் இருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் எடுத்துக் கொள்ளும். ஆனால், என் கர்த்தாவே, நான் உம்மை சேவிக்கட்டும். நான் எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கி வைப்பேன். நான் சுயத்தை விட்டுவிடுவேன். நான் பெருமையை விட்டுவிடுவேன். நான் சபையை விட்டுவிடுவேன். நான் எல்லாவற்றையும் விட்டு விடுவேன்" என்று கூறுவார்களாக. 297. கர்த்தாவே, அவர்கள் தங்களுடைய சபையை விட்டு வெளியே வர வேண்டும் என்றல்ல, ஆனால் அவர்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற நிலைமையிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். ஓ, தேவனே, அக்கினியோடு, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க, மெத்தோடிஸ்டுகளை அவர்களுடைய சபைக்குத் திரும்ப அனுப்பும்; பாப்டிஸ்டுகளை திருப்பி அனுப்பும், காம்ப்பெல்லைட்டுகளை திருப்பி அனுப்பும், கத்தோலிக்கர் களை திருப்பி அனுப்பும். தேவனாகிய கர்த்தாவே, இங்குள்ள பிரான்ஹாம் கூடாரத்திலிருந்து யாரோ ஒருவரை மீண்டும் இங்குள்ள கூடாரத்திற்கு அனுப்பும், ஒரு சாந்தமான, தாழ்மையான ஆவியோடு, புறப்பட்டுச் சென்று, பேசி, அன்பு கூர்ந்து, ஜனங்களை மீண்டும் ஒருமனதாக மாற்ற முயற்சிக்க, அதனால் பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து ஜனங்களை உபயோகிக்க முடியும். மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பும். ஒவ்வொரு விசுவாசியையும் அபிஷேகியும். ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும். 298. ஓ தேவனே, அடையாளங்கள் தோன்றுவதை நாங்கள் காண்கிறோம். அத்திமரம் துளிர்விடுவதை நாம் காண்கிறோம். காலம் சமீபித்துவிட்டது என்பதை நாங்கள் அறிவோம். உலகத்தை அழிக்க நீர் கொடுக்கப்பட்டதாக கூறின அந்த மனிதனின் கரங்களில் அந்த வெடிகுண்டு கிடந்ததை நாங்கள் காண்கிறோம். 299. ஓ தேவனே, நாங்கள் எப்படி இனிமேல் புறக்கணிக்க முடியும்? எங்களால் எப்படி முடியும்? உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட சுவிசேஷம் மிகத் தெளிவாக ஒலிப்பதை நாங்கள் கேட்கும்போது; பரிசுத்த ஆவியின் அசைவைக் கேட்டு; பரிசுத்த ஆவியானவர் அளிக்கிற அடையாளங்களையும் அற்புதங்களையும், வியாதியஸ்தரை சுகப்படுத்தி, குருடான மரித்தோரை உயிர்ப்பிக்க; மகத்தான அற்புதங்களையும்; கண்களைத் திறக்க, அடையாளங்களையும்; சுவிசேஷமானது கல்வியறிவற்ற, அறியாத ஜனங்களால் பிரசங்கிக்கப் படுகிறதையும், வல்லமையின் கீழ், பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் பிரசங்கிக்கப்படுவதையும்; அடையாளங் களும் அற்புதங்களும் சபையை பின் தொடர்வதை காண்போமாக. இன்னும் எவ்வளவு அதிகமாக காண்போமாக! 300. நீர், “நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், நீங்கள் என்னுடைய நாளையும் அறிந்திருப்பீர்கள்” என்றீர். அல்லேலூயா! கர்த்தாவே, அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அவர்கள் எல்லாவிதமான அடையாளங்களையும், யுத்தங்களையும், தொல்லைகளையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் காண்கிறார்கள். அவர்கள் அருமையான பண்டைய வேதாகமத்தின் பக்கங்களை திருப்பி, அந்த மைல்கல் எங்கேயுள்ளது என்று பார்க்கட்டும். நாங்கள் காலத்தின் முடிவில் இருக்கிறோம். 301. ஓ, தேவனே, இந்த ஜனங்களின் மேல் உம்முடைய ஆவியினால் அசைவாடும். இன்றிரவு அவர்கள் இங்கிருந்து நகர்ந்து செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு அசைவாடுவாராக. 302. நாளை இரவு, கர்த்தாவே, நாங்கள் கொடுக்க ஆயத்தமாயிருக்கிற இந்த மகத்தான பீட அழைப்பிற்கு நாங்கள் வரும்போது, பீடங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்றும், ஜெப அறைகள் நிறைந்திருக்க வேண்டும் என்றும் நாங்கள் ஜெபிக்கிறோம். 303. ஞாயிறு காலை, ஆண்டவரே, ஞாயிறு இரவிலே, நாங்கள் இங்குள்ள ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தையின்படி ஞானஸ்நானம் கொடுப்போமாக. பரிசுத்த ஆவியானவர் அந்தத் தண்ணீரின் மேல் விழுந்து, மகத்தான அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வாராக. பிதாவே, இதை அருளும். 304. இங்குள்ள எங்களுடைய அருமையான போதகரை ஆசீர்வதியும். அங்கத்தினர்களை ஆசீர்வதியும். எங்கள் வாசலில் உள்ள அந்நியர்களை ஆசீர்வதியும். இன்றிரவு நாங்கள் வீட்டிற்குச் சென்று, இந்தக் காரியங்களை எங்களுடைய இருதயத்தில் சிந்தித்துப் பார்ப்போமாக; நாளை இரவு எங்களோடு கதிர் கட்டுகளைக் கொண்டு வந்து களிகூருவோமாக. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 305. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொரு வரையும் ஆசீர்வதிப்பாராக. ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்குங்கள். நாளை இரவு திரும்பி வந்து, உங்களுடைய வேண்டுகோளையும், நீங்கள் விரும்புவதையும் கொண்டு வந்து, அதை பிரசங்க பீடத்தின் மேல் வையுங்கள். தேவன் உங்களை எப்போதும் அபிஷேகித்து, உங்களோடு இருப்பாராக! ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.